Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 6 ஜனவரி, 2020

தண்ணீரில் செல்லும் பைக் ... இளைஞர்களின் வித்தியாசமான யோசனை ! வைரல் வீடியோ !

new byke


வெளிநாட்டைச்  சேர்ந்த இளைஞர்கள் தண்ணீரில் பைக்கை ஓட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில்  வைரல் ஆகி வருகிறது.

திடீரென்று மழை வரும் காலங்களில், சாலைகளில் மக்கள் வாகனங்களால் செல்ல முடியாத நிலை ஏற்படும். அதனால் பயணம் தாமதமாகும். 
 
இந்நிலையில், அதேபோன்ற ஒரு நிலை தற்போது ஒரு வெளிநாட்டில் தண்ணீரில் சூழ்ந்த பகுதியில், சில இளைஞர்கள் தாங்கள் வடிவமைத்த பைக்கில் அந்த நீரில் சென்றனர்.

அந்த பைக்கின் சிறப்பம்சம் என்னவென்றால், எல்லா வாகங்களிலும் புகைபோக்கும் கருவியும், பெட்ரோல் டேங்க்கும் கீழே தான் இருக்கும் ஆனால் இவர்கள் வடிவமைத்த வாகனத்தில், இந்த இரண்டுமே தண்ணீரில் நனையாதபடி மேலே இருக்கிறது.

அதனால் தண்ணீர் கழுத்து வரை இருந்தாலும் பைக் ஹாயாக செல்கிறது. இந்த இளைஞர்களின் சிந்தனைக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக