Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 2 ஜனவரி, 2020

நரியும் அதன் நிழலும்..!

 Image result for நரி
ரு காட்டில் இருந்த நரி அதிகாலையில் எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் பெரியதாக தெரிந்தது. அதைப் பார்த்த நரிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. நான் ரொம்ப பெரிதாக இருக்கிறேன். அதுவும் இந்த காட்டின் ராஜாவாக உள்ள சிங்கத்தை விடவும் பெரியவனாக நான் உள்ளேன் என நினைத்துக்கொண்டே வேட்டைக்கு சென்றது.

செல்லும் வழியில் நரி ஒரு சிங்கத்தை கண்டது. சிங்கமோ சற்று முன்னர் தான் ஒரு மானை வேட்டையாடி அதை உண்ட களைப்பில் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தது. நரியும் தன்னுடைய நிழல் சிங்கதைவிடவும் பெரியதாக இருப்பதாக நினைத்துக்கொண்டு சிங்கம் வரும் வழியில் நடந்து சென்றது. சிங்கமும் நரியை ஒன்றும் செய்யாமல் கடந்து சென்றது. நரிக்கோ ரொம்ப சந்தோஷம். நாம் சிங்கத்தை விடவும் பெரியதாக இருப்பதனால் சிங்கம் என்னை கண்டு பயந்து சென்றது என நினைத்துக்கொண்டது.

மாலை நேரத்தில் நரி காட்டில் உள்ள மிருகங்களை எல்லாம் அழைத்தது. அனைத்து மிருகங்களும் நரியின் கூட்டத்திற்கு வந்தன. நரி அனைத்து மிருகங்களிடமும், இனிமேல் இந்த காட்டிற்கு நான் தான் ராஜா என்றது. யானையோ, இதை நாங்கள் ஏற்க முடியாது என்றது. உடனே நரி காலையில் நடந்த சம்பவத்தைக் கூறி சிங்கமே என்னைப் பார்த்து பயந்து சென்றது என்றது. கூட்டத்தில் இருந்த மானோ, சிங்கத்தை உன் முன் மண்டியிடச் சொல் பிறகு உன்னை இந்த காட்டிற்கு ராஜவாக்குகிறோம் என்றது.

அடுத்தநாள் நரி அந்த சிங்கத்தை தேடி சென்றது. செல்லும் வழியில் சிங்கம் தன்னுடைய பாதையை நோக்கி வருவதை கண்டு நரி கர்வத்துடன் நின்றது. சிங்கம் வந்தவுடன் சிங்கத்தை பார்த்து, என் முன்னாள் மண்டியிட்டு செல்! என்று நரி கூறியது. சிங்கமோ மிகவும் கோபம்கொண்டு தரக்குறைவாக பேசிய நரியை பார்த்து, உன்னை மன்னித்து விடுகிறேன் உடனே இங்கிருந்து சென்றுவிடு! என்றது.

நரியோ சிங்கம் தன்னை கண்டு பயந்துவிட்டது என நினைத்து, முடியாது என்று பதில் கூறிக்கொண்டே தன்னுடைய நிழலைப் பார்த்தது. அப்போது மதிய நேரம் என்பதால் நரியின் நிழல் உண்மையான அளவில் இருந்தது. அப்பொழுது தான் நரிக்கு புரிந்தது சூரிய ஒளியில் தான் தன்னுடைய நிழல் பெரியதாக இருந்தது என்று. நரியின் செயலை பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கம் நரியை ஒரே அடியினால் கொன்றது.

நீதி:
முட்டாள் தனமாக யோசித்தால் அதற்கான இழப்பும் பெரிதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!