Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 31 ஜனவரி, 2020

மறுபிறவினு ஒன்று இருக்கா இல்லையா? யார் என்னவா பிறப்பாங்க?... கருட புராணம் என்ன சொல்கிறதுனு பாருங்க...





னிதன் இறந்த பின் ஆனு்மா எங்கு செல்லும் என்ற கேள்விக்கு பதில் சொல்வது என்பது எப்போதுமே சவாலான விஷயமாகவே இருக்கிறது. அது பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி கருட புராணம் என்ன சொல்கிறது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மறுபிறவி இருக்கா? இல்லையா?
வைகுண்ட ஏகாதசி இப்போது தான் முடிந்திருக்கிறது. அதற்குள் இப்படி ஒரு சந்தேகமா என நீங்கள் கேட்கலாம். ஆமாங்க. முக்தி என்பது என்ன? மறுபிறப்பு இல்லாத நிலை தான். முக்தி என்ற ஒன்றைப் பற்றி பேசும்போது, மறுபிறவியைப் பற்றியும் கட்டாயம் பேச வேண்டும் தானே. மறுபிறவி பற்றி கருட புராணம் அப்படி என்ன தான் சொல்கிறது என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
மறுபிறவி என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது, இருக்கிறது, இல்லை என மறுபிறவி குறித்து உலகில் பல்வேறான கருத்துக்கள் உலகம் முழுவதும் நிலவுகின்றன. ஆனால் அதுபற்றி கருட புராணத்தில் மிகத் தெளிவாக சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. அதைத் தெரிந்து கொண்டாலே மறுபிறவி குறித்த குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து விடும்.
கருட புராணம் மனிதர்கள் மட்டுமல்லாது, உலக ஜீவ ராசிகள் அனைவருக்கும் மறுபிறவி இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி பேசுகிறது.
கருட புராணம்
கருட புராணம் என்பது என்ன என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பரம்பொருளாகிற விஷ்ணு பகவான் தன்னுடைய வாகனமாக கருட வாகனத்தில் ஏறி உலகை வலம் வந்து கொண்டிருந்மதராம். அப்போது அவருடைய வாகனமாக கருடன் திரும்பி விஷ்ணுவைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாராம்.
எம்பெருமானே! மனிதர்களின் இறப்புக்குப் பின்னர் என்ன தான் நடக்கும் என்று கேட்டாராம். அந்த கருடனின் கேள்விக்கு விஷ்ணு பகவான் சொன்ன பதில் தான் கருட புராணம்.
என்ன சொல்கிறது?
தன்னுடைய வாகனமான கருடனின் கேள்விக்கு விஷ்ணு பகவான் சொன்ன பதில் தான் கருட புராணம் என்பது நமக்குத் தெரிந்தது தான். அப்படி அந்த கருட புராணத்தில் என்னென்ன சொல்லியிருக்கிறார் விஷ்ணு என்று தெரியுமா?
கருட புராணத்தில் மனிதன் இறந்த பிறகு, அவர்களுடைய உடலில் இருந்து பிரிந்த உயிரானது, எங்கு செல்கிறது, என்ன செய்கின்றது, சொர்க்கம் நரகம் போன்ற விஷயங்களும், சொர்க்கத்துக்கு யாரெல்லாம் போவார்கள், நரகத்துக்கு யார் செல்வார்கள் என்றெல்லாம் விளக்கமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.
மறுபிறவி இரகசியம்
மாற்றம் என்பது மாறாதது என்பதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். அடிக்கடி எல்லா விஷயங்களுக்கும் இதைப் பயன்படுத்தியும் இருப்போம். அப்படி இருக்கும்போது, இதை இந்த மறுபிறவி விஷயத்திலும் கூட பொருத்திப் பார்க்க முடியுமே. ஆம். மாற்றம் ஒன்று தானே மாறாதது. அது தான் இங்கும் பொருந்தும்.
மனிதன் இறந்த பிறகு அவர்களுடைய உடலில் இருந்து பிரியும் உயிரானது, வேறு எங்கு செல்லும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் தானே.
மரண பயம்
இந்த மாற்றம் நடப்பதை உணர்ந்து கொண்டாலே போதும், மறுபிறவி உண்டு என்பதும், உடல் என்பது அழியக் கூடியது என்றும் ஆன்மா என்பது அழிவே இல்லாத ஒன்று என்றும் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பொதுவாக எதையும் உணராத மனிதர்களுக்கு ஏற்படுகின்ற, மரண பயத்தில் இருந்து விடுபட முடியும்.
புரியாத கேள்வி ஒன்று
சரி. உடல் அழியக் கூடியது தான். ஆன்மா அழியாதது தான். பிறகு ஏன் அழியக் கூடிய உடலில் வந்து அழிவில்லாத ஆன்மா தங்கிறது என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கிறது.
மனிதன் எப்படி பிறந்து, வளர்ந்து இளைஞனாகி முதுமை அடைகிறோமா அதேபோல தான், மாற்றங்களை எதிர்கொண்டிருக்கும் உடலுக்குள் வந்து ஆன்மா தங்கி, பிறகு வேறு ஒரு உடலை நோக்கிச் செல்கிறது.
சபிக்கப்பட்ட ஆவிகள்
பொதுவாக மனிதன் இறந்த பிறகு, உடலை விட்டுப் பிரிந்து செல்லுகின்ற ஆன்மாவானது, வேறு உலகத்திற்குச் செல்லும். அப்படிப் பிரிந்து செல்லுகின்ற சில ஆவிகள் வேறு உலகத்துக்குச் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும். அதாவது சாந்தியடைய முடியாமல், கடவுளையும் அடைய முடியாமல் சபிக்கப்பட்ட ஆவியாக மாறி உலாவிக் கொண்டிருக்கும்.
இறைவனை அடைய
ஆன்மாக்கள் கடவுளை அடைவதற்கு எத்தனை வகையான துன்பங்களை எதிர் நோக்கிக் காத்திருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது. மனிதனுடைய பாவ, புண்ணியங்களுக்கு ஏற்பவே அவர்களுடைய மறுபிறவியும் அமையும். அதுபற்றியெல்லாம் மிக விரிவாகவே கருட புராணம் சொல்கிறது.
எங்கு தான் செல்லும்?
உடலில் இருந்து பிரிந்து செல்கின்ற உயிரானது அடுத்த பிறவியில் எங்கு செல்லும்? எனனவாகப் பிறக்கும், எங்கு பிறக்கும் என்பவை எல்லாமே அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தான் தீர்மானிக்கப்படும். அது கடவுளுக்கு மட்டும் தான் உணர முடியும். அத்தகைய மறுபிறவியைத் தீர்மானிப்பவர் எம தர்மன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக