மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக பிலிப்பைன்சைச் சேர்ந்த 15 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
எந்தவித பயண ஆவணங்களின்றி மலேசியாவின் சாபா கடல் பகுதி வழியாக வந்த இவர்கள்
அனைவரும் கைது செய்யப்பட்டு மலேசிய குடிவரவுத்துறையின் கட்டுப்பாட்டில்
வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 1990 யிலிருந்து இதுவரை
சட்டவிரோத குடியேறிகள் 590,972 வெளிநாட்டினர் சாபா மாநிலத்திலிருந்து
நாடுகடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.
மலேசியாவின் கடலோர
பகுதியான சாபாவுக்குள், அருகாமையில் உள்ள வியாட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா
உள்ளிட்ட நாடுகளிலிருந்து சட்டவிரோத குடியேறிகள் வரும் நிகழ்வுகள் தொடர்ந்து
நடக்கின்றன.
பொருளாதார ரீதியாகப் பின் தங்கியுள்ள அருகாமை நாடுகளைக்
குறிவைக்கும் ஆட்கடத்தல்காரர்கள், மலேசிய நிறுவனங்களின்
தேவையையொட்டி
சட்டவிரோதமாக ஆட்களை அழைத்து வருகின்றனர். இவர்கள் கட்டுமானத்துறை, தேயிலைத் தோட்டங்கள்,
தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்திற்கு ஆபத்தான-கடுமையான வேலைகளில்
ஈடுபடுத்தப்படுகின்றனர்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களை
முறைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மலேசிய அரசு,
பதிவுச்செய்யப்படாத தொழிலாளர்கள் மீது பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து
வருகின்றது. அதன் அங்கமாக இவ்வாறான நாடு கடத்தல்
நடவடிக்கைகளை மலேசிய குடிவரவுத்துறை தொடர்ந்து மேற்கொண்டு
வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக