சோலையாறு அணை கோவை மாவட்டத்தின் ஆனைமலையில் உள்ள மலைவாழிடமான வால்பாறையில் இருந்து 25கி.மீ தொலைவிலும், ஆழியார் அணையிலிருந்து 59கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
இது ஆசியாவின் இரண்டாவது ஆழமான அணை என்று கூறப்படுகிறது.
இது பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் வரும் ஒரு முதன்மையான நீர்த்தேக்கமாகும்.
இதன் கொள்ளளவு 160 அடி. இதன் மிகுதிநீர் பரம்பிக்குளம் நீர்த்தேக்கத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்த அணையைப் பார்க்க சிறப்பு அனுமதி தேவை.
இப்பகுதிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் சாலக்குடி ரயில் நிலையம் ஆகும்.
இதர சுற்றுலாத் தலங்கள் :
அறிவுத் திருக்கோவில்...
குரங்கு நீர்வீழ்ச்சி...
ஆனைமலை...
வால்பாறை...
பூஞ்சோலை...
திருமூர்த்தி அணை...
எப்படி செல்வது?
கோயம்புத்தூரிலிருந்து 67கி.மீ தூரத்திலும், பொள்ளாச்சியிலிருந்து 24கி.மீ தூரத்திலும் ஆழியார் அணை அமைந்துள்ளது.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக