ராமநாதபுரத்திலிருந்து ஏறத்தாழ 51கி.மீ தொலைவிலும், முதுகுளத்தூரிலிருந்து ஏறத்தாழ 9கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இடம்தான் சித்ரன்குடி பறவைகள் சரணாலயம்.
சிறப்புகள் :
சித்ரன்குடி பறவைகள் சரணாலயம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் இடமாக விளங்குகிறது.
இங்கு வௌ;வேறு இடங்களில் இருந்து வரும் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து அவற்றுடன் திரும்பிச்செல்லும் காட்சிகள் பார்க்கும்போது நம் கண்களுக்கு அழகாக காட்சியளிக்கும்.
இந்த சரணாலயத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக பல நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து வரும் நாரை இனங்கள் கருவேல மரங்களில் அமர்ந்திருக்கும் காட்சிகளைப் பார்க்கும்போது நம்முடைய உள்ளம் கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்திருக்கும்.
சித்ரன்குடி பறவைகள் சரணாலயத்தில் உட்பகுதியில் புளியமரங்கள், அத்தி மரங்கள், வேப்ப மரங்கள், பூவரசு மரங்கள், பட்டு மரங்கள், முருங்கை மரங்கள், ஆசியப் பனை ஆகியவையும் கருவேல மரம், துளசி மற்றும் காந்தாள் போன்றவையும் வளர்கின்றன.
சித்ரன்குடி பறவைகள் சரணாலயத்தில் நாம் பார்த்து ரசிக்கும் விதமாக நத்தை குத்தி நாரை, சாம்பல் நாரை, குளத்து நாரை, கூழைக்கடா, ஊதா ஹெரான், கொக்கு போன்றவையும் உள்ளன. இந்த சரணாலயத்திற்கு அருகில் கஞ்சிரான் குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
எப்படி செல்வது?
முதுகுளத்தூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்துக் காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
முதுகுளத்தூரில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக