>>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 22 ஜனவரி, 2020

    நீங்களும்..? உங்கள் ஆயுள் ரேகையும்....!

     Image result for நீங்களும்..உங்கள் ஆயுள் ரேகையும்"
    கைரேகைகளிலேயே மிகவும் முக்கியமானது ஆயுள் ரேகை. இந்த ஆயுள் ரேகையைக் கொண்டுதான் ஒருவர் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பார் என்பதை கணக்கிடுவார்கள்.

    மேலும் ஆயுள் ரேகையின் தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இதன் தன்மையைக் கொண்டு ஒருவரது குணம், உடல் நலம் மற்றும் வாழ்க்கை போன்றவற்றையும் அறிய முடியும்.

    எது ஆயுள் ரேகை?

    ஆயுள் ரேகை என்பது ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலுக்கு நடுவில் இருந்து கீழ் நோக்கி சென்று மணிக்கட்டுடன் இணையும். உங்கள் ஆயுள் ரேகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.....!

    தடித்த மற்றும் மெல்லிய ஆயுள் ரேகை              

    தடிமனான ஆயுள் ரேகை மிருகபலத்தையும், மெல்லிய ஆயுள் ரேகை ஆத்ம பலத்தையும் குறிப்பிடும். தெளிவாகவும், மெல்லியதாகவும், நீளமாகவும் அமைந்த ஆயுள் ரேகை, ஒருவருக்கு நல்ல தேக பலத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

    குட்டையான ஆயுள் ரேகை

    ஆயுள் ரேகை குட்டையாக அல்லது சிறியதாக இருந்தால், அவர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொண்டு போவதற்கு ஏற்ற ஆற்றல் இல்லாதவர்களாக இருப்பர். இந்த வகையான ரேகையைக் கொண்டவர்கள் எந்த ஒரு செயலையும் நிறைவுப்படுத்த அடிக்கடி யாரேனும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

    உடைந்த ஆயுள் ரேகை

    ஆயுள் ரேகையில் பிளவு கொண்டவர்கள் தனி பண்பினைக் கொண்டவர்களாக இருப்பர். அதுவும் அவர்கள் ஒரு செயலை எடுத்தால் முழுமையாக செய்து முடிப்பார்கள்.

    இரட்டை ஆயுள் ரேகை        

    இப்படிப்பட்ட ரேகையைக் கொண்டவர்கள் வலிமையானவர்களாகவும், குடும்பத்தின் ஆதரவு எப்போதும் இருக்கும். இந்த அதிர்ஷ்டசாலிகள் எப்போதும் தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருப்பர்.

    சுக்கிர மேடு மற்றும் ஆயுள் ரேகை

    ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி நன்கு விலகியிருந்தால், இவர்களது தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆயுள் ரேகை, சுக்கிர மேட்டைச் சுற்றி நெருங்கிக் காணப்பட்டால், இவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதை இது குறிக்கும்.

    குரு மேடு மற்றும் ஆயுள் ரேகை

    ஆயுள் ரேகை குரு மேட்டுப் பக்கம் சற்று உயர்ந்து காணப்பட்டால், இவர்கள் தன்னடக்கம், கட்டுப்பாடு, லட்சிய உணர்வு, உயர்வெண்ணம் கொண்டவர்களாக இருப்பர்.

    கீழ் செவ்வாய் மேடு மற்றும் ஆயுள் ரேகை

    ஆயுள்ரேகை கீழ் செவ்வாய் மேட்டிலிருந்து ஆரம்பித்திருந்தால், இவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும், அடக்கமில்லாதவர்களாகவும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடக்கூடியவர்களாகவும் இருப்பர்.

    ஆயுள் ரேகையின் மேலான ரேகை ஆயுள்

    ஆயுள் ரேகையிலிருந்து மேல் நோக்கி எழும் ரேகைகள் சிறியதாக இருந்தால், இவர்கள் நல்ல உழைப்பு, உற்சாகம், அதிர்ஷ்டம் உடையவர்களாக இருப்பர் என்பதைக் காட்டும்.



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக