மகாபாரதம்
என்னும் இதிகாசத்தினை உலகத்திற்கு அளித்தவர் வியாசர் ஆவார். மகாபாரதம் என்பது
ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்கின்ற வேதங்களையும் அடுத்து விளக்கக் கூடிய
ஐந்தாவது வேதமாக அனைவராலும் போற்றப்படுகின்ற அளவிற்கு இயற்றப்பட்டது ஆகும்.
இதில் மனித வாழ்க்கையில் ஏற்படக் கூடிய அனைத்து விஷயங்களையும் மிகத் தெளிவாகவும், அழகாகவும் கூறிய பெருமை வியாசருக்கு உண்டு. இதனை நூல் வடிவில் கொண்டுவர வேண்டும் என எண்ணம் கொண்டார் வியாசர். பிறகு வியாசர் தாம் சொல்லச் சொல்ல இதனை யாரைக் கொண்டு எழுதச் செய்வது என்கிற எண்ணம் தோன்றியது. அப்பொழுது வியாசருக்கு மனதில் தோன்றியவர் பிரம்ம தேவன்.
வியாசர் பிரம்ம தேவனை வைத்து மகாபாரதத்தை எழுதலாம் என நினைத்து பிரம்மனை மனமுருக வழிபட்டார். வியாசரின் வழிப்பாட்டினால் பிரம்மரும் அவர் முன் தோன்றினார். வியாசர் தன் எண்ணத்தினை பிரம்ம தேவரிடம் கூறினார்.
பிரம்மர் வியாச முனிவரிடம், நீங்கள் கணபதியை வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுடைய எண்ணம் ஈடேறத் துணைபுரிவார் எனக்கூறி மறைந்தார். அதன் பின் வியாச முனிவர் கணபதியை மனமுருக வேண்டினார். கணபதி வியாசர் முன்பு தோன்றினார். வியாசர் தன் மனதில் இருக்கும் எண்ணத்தினை விநாயகரிடம் கூறினார். கணபதியும் அதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால் கணபதி ஒரு நிபந்தனையை விதித்தார். முனிவரே! பாரதத்தை நீங்கள் தங்குதடையில்லாமல் சொல்ல வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் இடையில் நிறுத்தக் கூடாது என்றார். வியாசரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.
பிறகு வியாசரும், ஒரு நிபந்தனையை விதித்தார். பெருமானே! தாங்களும், ஒரு விநாடி கூட நிறுத்தாமல் எழுத வேண்டும் என்றார். விநாயகரும் இதற்கு சம்மதித்தார். அதாவது தாம் சொல்லுகின்ற பாடலின் கருத்தின் பொருளை உணர்ந்தபடியே எழுதுதல் வேண்டும் என்பதாகும். இதற்கு விநாயகப்பெருமானும் சம்மதம் அளித்தார்.
ஒரு நன்னாளில், விநாயகப் பெருமானை முறைப்படி பூஜித்து வணங்கி, பாரதக் கதையைக் கூறத் துவங்கினார் வியாசர். வியாசர் பாடலாகச் சொல்ல, கணபதி பொருளினை யோசித்து யோசித்து எழுதத் துவங்கினார். வெள்ளம் போல் வியாசர் சொல்லிக் கொண்டிருக்க, அவரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து எழுதினார், கணபதி. ஒரு கட்டத்தில், விநாயகரின் எழுத்தாணியின் கூர் மழுங்கிப் போனது. உடனடியாக தனது வலக் கொம்பை (தந்தம்) ஒடித்து அதையே எழுத்தாணியாக உபயோகித்து, மகாபாரதத்தை எழுதி முடித்தார்.
இவ்வாறு மகாபாரதக் காவியம் உருவானது. இதனை தமது புத்திரரான சுகருக்கு வியாசர் கற்றுக் கொடுத்தார். நாரதர் மகாபாரத்தினை கற்று தேவர்களுக்கு தெரியப்படுத்தினார். இவ்வாறு மகாபாரதம் மனிதர்கள் இடையில் சென்று அடைந்தது.
தொடரும்...!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக