Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 27 ஜனவரி, 2020

நல்லதங்காள் கோவில், வத்திராயிருப்பு

 Image result for நல்லதங்காள் கோவில், வத்திராயிருப்பு"
ந்த கோவில் தமிழ்நாடு மாநிலம், விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு என்ற பகுதியில் உள்ளது. குழந்தை பேறு கொடுக்கும் தலங்களில் ஒன்றானது நல்லதங்காள் கோவில். இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆக கருதப்படுகிறது.

தல வரலாறு :

 அர்ச்சுனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்லதம்பி, நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள். இவர்கள் தாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தனர். இருந்த போதிலும், அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த நல்லதம்பி, தன் தங்கை நல்லதங்காளைச் சீராட்டி வளர்த்து தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வாழ்ந்த ராஜவம்சத்தைச் சேர்ந்த காசிராஜா என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

 திருமணம் ஆன இளம் வயதிலேயே நல்லதங்காள் ஏழு குழந்தைகளுக்குத் தாய் ஆனாள். இதில் நான்கு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள். இந்நிலையில், மானாமதுரையில் மழை இல்லாமல் பஞ்சம் தலைவிரித்தாடியது. தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் மழையே இல்லை. உண்ண உணவு இன்றி மக்கள் பலரும் மாண்டனர். நல்லதங்காள் குடும்பமும் அந்நிலைக்கு ஆளானது. அவள், அண்ணன் கொடுத்தனுப்பிய சீதனப் பொருட்களை ஒவ்வொன்றாக விற்றாள். ஒரு கட்டத்தில் வீட்டில் எதுவுமே இல்லை என்ற நிலை வந்தது. சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் போனது. மனம் உடைந்த நல்லதங்காள் தன் ஏழு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தான் பிறந்த அர்ச்சுனாபுரம் கிராமத்துக்கு வந்தாள்.

 அவள் அங்கு வந்த நேரம் அவள் அண்ணன் அங்கு இல்லை. அவளின் அண்ணியும் அவளை காணாது கண்டது போல் இருந்தாள். பிறகு எதற்கும் பயன்படாத மண் பானை, பச்சை விறகை கொடுத்து சமைத்து உண்ணும் படி கூறினாள்.

 தெய்வத்தன்மை படைத்த நல்லதங்காள் விறகை பற்ற வைக்கும் போது பச்சை விறகு பற்றி எரிந்தது. பிறகு அதில் உணவு சமைத்து தனக்கும், தனது குழந்தைகளுக்கும் ஊட்டி மகிழ்ந்தாள்.

 சில நாட்கள் ஓடின. அண்ணன் வருவான் தனது பசியை போக்குவான் என்று எண்ணினாள். பிறகு அண்ணன் தனது நிலைமையை அறிந்து மிகுந்த வேதனை அடைவான் என்று நினைத்து தனது குழந்தையுடன் தானும் உயிர் துறக்க முடிவெடுத்து, தனது குழந்தைகளை கிணற்றில் இட்டு தானும் அதில் குதித்தாள்.

 இதனை அறிந்த அண்ணன் தனது மனைவி செய்த குற்றத்திற்காக மனைவியை கொன்று விட்டு தானும் குளத்தில் விழுந்து உயிர் போக்கினான். தெய்வ அம்சம் பொருந்திய நல்லதங்காள் அண்ணனையும், அண்ணன் மனைவியையும் உயிர்பித்தாள். அப்போது அண்ணன் நீ இங்கு இருந்து தெய்வமாக காட்சி அளிக்க வேண்டும் என்று கூறினான். அதேபோல் நல்லதங்காளும் தெய்வமானாள். பிறகு நல்லதம்பி மற்றும் நல்லதங்காள் வாழ்ந்த இடம் கோவிலாக மாறியது.

கோவில் சிறப்பு :

 குழந்தை பேறு வேண்டி நல்லதங்காளுக்கு அமைந்த ஒரே திருக்கோவில் இதுவாகும். மேலும் இந்த கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோவில் ஆகும்.

வேண்டுதல்கள் :

குழந்தை பேறு வேண்டியவர்கள் இங்கு எலுமிச்சை வைத்து கட்டப்பட்ட தொட்டிலை அம்மன் முன்பு வைத்து, ஏழு குழந்தைகளின் சன்னிதானத்தில் வைக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக