ஸ்ரீநாத யோகம் :
லக்னத்திற்கு நான்கு, ஏழு மற்றும் பத்தாம் இடங்களில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து அமைந்திருப்பதால் உண்டாவது ஸ்ரீநாத யோகம் ஆகும்.
ஸ்ரீநாத யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
சகல சௌபாக்கியமும் பெற்று வாழக்கூடியவர்கள்.
சிலர் இல்லற வாழ்க்கையை துறந்து சந்நியாசி வாழ்க்கை வாழக்கூடியவர்.
கனக யோகம் :
லக்னம் சரமாக அமையப்பெற்று ஐந்து மற்றும் பத்தாம் அதிபதிகள் பலமாக கேந்திரத்தில் நான்கு, ஏழு மற்றும் பத்தாம் வீடுகளில் அமையப்பெற்றால் உண்டாவது கனக யோகம் ஆகும்.
கனக யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
நினைத்தவை யாவையும் அடையும் வல்லமை உடையவர்கள்.
ரவி யோகம் :
சூரியனுக்கு இருபுறமும் சுப கிரகங்கள் அமையப்பெறுவது ரவி யோகம் ஆகும்.
ரவி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
சாதனைகளை படைக்க வல்லவர்கள்.
உயர் பதவி அடையக் கூடியவர்கள்.
புகழ், பெருமை உடையவர்கள்.
சரஸ்வதி யோகம் :
குரு, சுக்கிரன், புதன் லக்னத்திற்கு கேந்திரத்தில் அதாவது நான்கு, ஏழு மற்றும் பத்திலோ அல்லது திரிகோணத்திலோ இருப்பின் சரஸ்வதி யோகம் உண்டாகிறது.
சரஸ்வதி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
பிறரால் மதிக்கப்படுவார்கள்.
உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.
எழுத்தாளராகவும், பேச்சாளர்களாகவும் விளங்கக்கூடியவர்கள்.
சங்க யோகம் :
ஐந்து மற்றும் ஆறாம் அதிபதிகள் இணைந்து ஒரே வீட்டில் இருப்பினும் அல்லது ஒருவருக்கொருவர் ஏழாம் பார்வையால் பார்த்து கொண்டாலும் சங்க யோகம் உண்டாகிறது.
சங்க யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
உயர் கல்வி கற்ககூடியவர்கள்.
நீண்ட ஆயுள் உடையவர்கள்.
நிலையான புகழ் கொண்டவர்கள்.
சாதனைகள் புரிவதில் வல்லவர்கள்.
ராஜ யோகம் :
ஒன்பதாம் அதிபதி குரு பார்வை பெற்று ஆட்சி பெற்றால் ராஜ யோகம் உண்டாகிறது.
ராஜ யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
சகல சௌபாக்கியத்துடன் வாழக்கூடியவர்கள்.
வசுமதி யோகம் :
லக்னத்துக்கு மூன்று, ஆறு மற்றும் பதினொன்றாம் அதிபதிகள் பலம் பெற்று இருந்தால் வசுமதி யோகம் உண்டாகும்.
வசுமதி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
பொருட்செல்வம் மற்றும் செல்வாக்கு உடையவர்களாக இருப்பார்கள்.
உயர்ந்த அந்தஸ்து, பெருமை, புகழ் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.
பூமி பாக்கிய யோகம் :
நான்கு மற்றும் ஒன்பதாம் அதிபதிகள் மறைவு ஸ்தானங்களில் அமராமலும், நீசம் பெறாமலும் மற்றும் பாபர் சேர்க்கை இல்லாமலும் இருப்பதால் அமைவது பூமி பாக்கிய யோகம் ஆகும்.
பூமி பாக்கிய யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
மனை சேர்க்கை உண்டாகும்.
செல்வங்கள் நிலைத்து நிற்கும்.
லட்சுமி யோகம் :
ஒன்பதாம் அதிபதி ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெறுவதால் உண்டாவது லட்சுமி யோகம் ஆகும்.
லட்சுமி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
லட்சுமி கடாட்சம் பெற்று வாழ்வார்கள்.
எதிர்பாராத செல்வ செழிப்பு உண்டாகும்.
பாபகத்ரி யோகம் :
லக்னமோ அல்லது மதியோ(சந்திரன்) இரு அசுப கிரகங்களுக்கு இடையில் அமர்ந்திருக்க உண்டாவது பாபகத்ரி யோகம் ஆகும்.
பாபகத்ரி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
செல்வ செழிப்புடன் இன்னல்கள் கொண்ட வாழ்க்கை இருக்கும்.
தரித்திர யோகம் :
ஒன்பதாம் அதிபதி (பாக்யாதிபதி) பனிரெண்டாம் வீட்டில் மறைவு பெற்றால் உண்டாவது தரித்திர யோகம் ஆகும்.
தரித்திர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
பிறருக்கு உதவி செய்து அவச்சொல் வாங்குதல்.
நிலையான செல்வம் இல்லாமை.
வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கும்.
அந்திய வயது யோகம் :
லக்னாதிபதி மற்றும் இரண்டாம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும், லக்னத்தில் அமர்ந்தாலும் உண்டாவது அந்திய வயது யோகம் ஆகும்.
அந்திய வயது யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
இளமையில் துன்பம் நிறைந்த வாழ்க்கை அமையும்.
பிற்காலத்தில் உயர் பதவி பெற்று பெருமையுடனும், கீர்த்தியுடனும் வாழ்வார்கள்.
திரிலோசனா யோகம் :
சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் கேந்திர திரிகோண வீடுகளில் அமைவதால் உண்டாவது திரிலோசனா யோகம் ஆகும்.
திரிலோசனா யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
எதிரிகளை வெற்றி கொள்வார்கள்.
மிகுந்த செல்வம் மற்றும் நீண்ட ஆயுள் கொண்டவர்கள்.
பர்வத யோகம் :
லக்னாதிபதி நின்ற வீட்டின் அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெறுவது அல்லது லக்னத்திற்கு கேந்திர அதிபதிகள் பலம் பெற்றாலும் அமைவது பர்வத யோகம் ஆகும்.
பர்வத யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
உலகம் போற்றும் அளவுக்கு புகழ், பெருமை உடையவர்கள்.
அரச யோகம் :
மதியானவன் லக்னத்திற்கு கேந்திரத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று அந்த மதியை சுக்கிரன் மற்றும் குரு பார்வை பெற்றால் அரச யோகம் உண்டாகும்.
அரச யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
அரசாளும் யோகம் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக