ஈரோட்டிலிருந்து ஏறத்தாழ 15கி.மீ தொலைவிலும், பெருந்துறையிலிருந்து ஏறத்தாழ 12கி.மீ தொலைவிலும் இயற்கை எழில் மிகுந்த அமைப்புடன் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
இந்த சரணாலயம் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பறவைகளின் வாழ்விடமாக இந்த சரணாலயம் திகழ்கிறது.
சிறப்புகள் :
வெள்ளோடு பறவைகள் சரணாலயம் கோடையிலும் ஏரியில் உள்ள தண்ணீர் வற்றாததால் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் காட்சியளிக்கிறது.
இந்த சரணாலயத்தில் ஆங்காங்கே உள்ள மரங்களின் கிளைகளில் ஏராளமான பறவைகள் தங்கியுள்ளன. அவைகள் கூட்டமாக பறந்து செல்வதை பார்க்கும்போது நம் கண்களுக்கு ரம்மியமாக காட்சியளிக்கும்.
அதேபோல் சரணாலயத்தில் இருக்கும் பறவைகள் ஏரியில் உள்ள மீன்களை பிடித்து சாப்பிடும் காட்சிகளை கண்டு ரசிக்க முடியும். மேலும், இங்குள்ள பறவைகள் நம் கண்களுக்கு விருந்தாக காட்சியளிக்கும்.
இங்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பெலிகான், கொசு உல்லான், வண்ணான் நாரை, கூழைகெடா, பெரிய நீர்காகம், பாம்புதாரா, சாம்பல் நாரை, வெண்மார்பு மீன்கொத்தி பறவை, ஜெம்புகோரி உள்ளிட்ட பறவைகளும் உள்ளன.
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவைகளைப் பார்த்து ரசிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு என நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பறவைகள் சத்தமிடும் ஒலிகள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் செல்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக வெள்ளோடு பறவைகள் சரணாலயம் திகழ்கிறது.
எப்படி செல்வது?
ஈரோட்டிலிருந்து வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
ஈரோட்டில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத் தலங்கள் :
கொடிவேரி அணை.
பவானிசாகர் அணை.
பண்ணாரிஅம்மன் கோவில்.
கொடுமுடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக