மனிதர்களின் கை, கால்களில் இருக்கும் ஒவ்வொரு ரேகைகளிலும் பல
அர்த்தங்கள் மறைந்துள்ளது. அதில் அனைவருக்கும் ஒரே மாதிரியான கையமைப்பு மற்றும்
ரேகைகள் அமைவதில்லை. அப்படி பார்க்கும்போது நமது கையமைப்பினை வைத்தே செல்வம்,
தொழில், இல்வாழ்க்கை, தனிநபர் குணாதிசயங்களை பற்றிக் கூறலாம். அந்த வகையில் மனோ
தத்துவக் கைகள் உடையவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என பார்ப்போம்......!
கையின் அமைப்பு :
இந்தக் கையின் அமைப்பு பார்க்க மிகவும் அழகாக
இருக்கும்.
விரல்களுக்கு இடையே இடைவெளி இருக்காது. விரல்கள்
மிருதுவாக இருக்கும்.
கையின் பின்புறத்தில் ரோமம் இருக்காது. கட்டை
விரலும் பெரிதாக இருக்காது.
விரல்கள் எல்லாம் நுனியில் குவிந்து மிகவும் கூர்மையாக
காணப்படும். இந்த வகை விரல்களுக்கு குவித்த விரல்கள் என்று பெயர்.
இத்தகைய அமைப்பு ஆண்களை விட பெண்களிடம் அதிகமாக
காணப்படும்.
இது ஆன்மீகக் கைகள் என்றும், நீள் கூர்மையான
கைகள் என்றும் அழைக்கப்படுகிறது.
குணநலன்கள் :
பொதுவாக இந்த கையமைப்பு உடையவர்கள் சாந்த
சுபாவம் கொண்டவர்கள் என்றாலும் கோபம் வந்து விட்டால் எரிமலையாக மாறி விடுவார்கள்.
இவர்கள் கூடிய வரை தனிமையிலும் பிறரின்
அரவணைப்பிலும் வாழ நினைப்பவர்கள். பிறரால் எளிதில் ஏமாற்றப்படுவார்கள்.
சாப்பாட்டு பிரியர் அல்ல. சிறிய துன்பங்களை கூட
பெரிதாக எண்ணி கலங்குவர்.
உழைப்பில் நம்பிக்கை இல்லாதவர்கள். மன உறுதி,
உடல்பலம் இல்லாதவர்கள், வெள்ளை மனம் கொண்டவர்கள்.
வாழ்வதே அதிசயம் என்பது போல விரக்தி
மனப்பான்மையுடன் இருப்பார்கள். இவர்கள் பொதுவாக நல்லவர்களாகவே இருப்பதால் பலவித
இடையூறுகளுக்கு ஆளாவார்கள்.
இவர்களுக்கு மூடநம்பிக்கைகளில் ஈடுபாடு
இருக்கும்.
இவர்கள்
துறவு மனப்பான்மை உடையவர்கள். சமயப்பற்று உடையவர்கள். சமயம் சார்ந்த வாழ்வு
இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். கடின உழைப்பு உடைய தொழிலை விரும்ப மாட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக