Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 25 ஜனவரி, 2020

“கொரனா வைரஸ்” எதிரொலி டிஸ்னிலேண்ட் மெகா தீம் பார்க் மூடப்பட்டது.!

“கொரனா வைரஸ்” எதிரொலி டிஸ்னிலேண்ட் மெகா தீம் பார்க் மூடப்பட்டது.!


சீனாவில் “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் முதலில் சீனாவில் உள்ள வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் இந்த  வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
இந்த வைரஸ் வூஹான் நகரில் உள்ள வனவிலங்கு சந்தையில் இருந்த ஒரு விலங்குகளிடம் இருந்துதான் தோன்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த கொரனா வைரஸ் காய்ச்சல்  தாய்லாந்து,சிங்கப்பூர் ,வியட்நாம் ,ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளிலும் பரவி உள்ளது.
இதைத்தொடர்ந்து பல நாடுகளில் சீனாவில் இருந்து வரும் அனைத்து வரும் அனைத்து பயணிகளையும் விமானநிலையத்திலே வைத்து மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் அமைந்துள்ள டிஸ்னிலேண்ட் மெகா தீம் பார்க் இன்று மூடப்பட்டது.  இந்த “கொரனா வைரஸ்” மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவதாகவும் கூறப்பட்ட நிலையில், இந்த பார்க்கிற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செய்வதால் “கொரனா வைரஸ்” பரவுவதை தடுக்க மூடியதாகவும் , முன்பதிவு செய்வர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் அந்த பார்க் நிர்வாகம் கூறியுள்ளது.
மேலும் திரும்ப எப்போது பார்க் திறக்கப்படும் என்பதை பற்றி பார்க் நிர்வாகம் கூறவில்லை. இதுவரை சீனாவில் “கொரனா வைரஸ்” தாக்கி 25 பேர் இறந்து உள்ளனர். இன்று மும்பை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் இருவரையும் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் , அங்கு தனி வார்டு அமைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக