ஸ்ரீகட யோகம் :
அனைத்து வீடுகளின் அதிபதிகளும் திரிகோண வீடுகளில் இருப்பதால் உண்டாவது ஸ்ரீகட யோகமாகும்.
ஸ்ரீகட யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
சண்டையில் விருப்பம் உடையவர்கள்.
அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்கள்.
மனதில் எண்ணிய இல்வாழ்க்கை அமையும்.
விஷ கன்னிகா யோகம் :
பெண் குழந்தை சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பிறந்து ஆயில்யம், சதயம் மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருப்பின் விஷ கன்னிகா யோகம் உடையவள் ஆவாள்.
விஷ கன்னிகா யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
குறைந்த மாங்கல்ய பலம் உடையவர்கள்.
ரோககிரகஸ்தா யோகம் :
லக்னாதிபதி பலம் இழந்து ஆறு, எட்டு மற்றும் பனிரெண்டாம் வீடுகளில் இருந்தாலும் அல்லது ஆறு, எட்டு மற்றும் பனிரெண்டாம் அதிபதிகள் லக்னத்தில் இருப்பதால் உண்டாவது ரோககிரகஸ்தா யோகமாகும்.
ரோககிரகஸ்தா யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
ஒல்லியான தேகம் உடையவர்கள்.
அரச கேந்திர யோகம் :
லக்னத்திற்கு கேந்திர வீடுகளில் உள்ள அதிபதிகள் யாவும் உச்சம் பெற்று அமைவதால் உண்டாவது அரச கேந்திர யோகமாகும்.
அரச கேந்திர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
மக்கள் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும்.
வீனா யோகம் :
நவகிரகங்களில் ராகு-கேதுவை தவிர மற்ற ஏழு அதிபதிகள் ஏழு ராசிகளில் இருப்பது போன்ற அமைவு இருப்பதால் உண்டாவது வீனா யோகம் ஆகும்.
வீனா யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
வசதி வாய்ப்புகள் உண்டாகும்.
தலைமை பதவியில் பணிபுரிவார்கள்.
அறிவு ஞானம் உடையவர்கள்.
எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.
கேதரா யோகம் :
நவகிரகங்களில் ராகு-கேதுவை தவிர மற்ற ஏழு அதிபதிகள் நான்கு ராசிகளில் இருப்பது போன்ற அமைப்பால் உண்டாவது கேதரா யோகம் ஆகும்.
கேதரா யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
விவசாய துறையில் ஞானம் உடையவர்கள்.
பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவார்கள்.
அன்னதான யோகம் :
லக்னத்திற்கு இரண்டாம் அதிபதி பலம் பெற்று குரு அல்லது புதன் இணைவோ அல்லது தொடர்போ பெற்று இருப்பதால் உண்டாவது அன்னதான யோகமாகும்.
அன்னதான யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
எல்லோருக்கும் உதவுவதில் விருப்பம் உடையவர்கள்.
அன்னதான உதவிகள் புரிவதில் சிறந்தவர்கள்.
விமலா யோகம் :
லக்னத்திற்கு பனிரெண்டாம் வீட்டில் உள்ள அதிபதி பனிரெண்டாம் வீட்டில் இருப்பதால் உண்டாவது விமலா யோகம் ஆகும்.
விமலா யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
சேவை மனப்பான்மை உடையவர்கள்.
சுதந்திர எண்ணம் உடையவர்கள்.
சதுஸ்ர யோகம் :
லக்னத்திற்கு ஒன்று, நான்கு, ஏழு மற்றும் பனிரெண்டாம் வீடுகளில் அதிபதிகள் இருப்பதால் உண்டாவது சதுஸ்ர யோகம் ஆகும்.
சதுஸ்ர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்.
புத்திர பாக்கியம் கிட்டும்.
செல்வ சேர்க்கை உண்டாகும்.
ராஜ யோகம் :
கேந்திர அதிபதிகள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெற்று இருப்பதால் உண்டாவது ராஜ யோகம் ஆகும்.
ராஜ யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
நல்ல துணை அமையும்.
மனை யோகம் நன்மை தரும்.
எண்ணிய தொழில் முன்னேற்றம் உண்டாகும்.
செல்வாக்கு அதிகரிக்கும்.
சாங்கியா யோகம் :
லக்னம் மற்றும் ஒன்பதாம் வீடுகளில் ராகு, கேதுகளை தவிர மற்ற ஏழு கிரகங்களும் அமைவு இருப்பின் உண்டாவது சாங்கியா யோகம் ஆகும்.
சாங்கியா யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
உயர்ந்த குணம் உடையவர்கள்.
அமைதியானவர்கள்.
எல்லா செல்வங்களும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
உபஜய யோகம் :
உபஜய ஸ்தானங்களான மூன்று, ஆறு, பத்து மற்றும் பதினொன்றாம் வீடுகளில் குரு, சுக்கிரன், புதன் மற்றும் சந்திரன் ஆகிய சுப கிரகங்கள் இருக்குமாயின் உண்டாவது உபஜய யோகமாகும்.
உபஜய யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
சுகபோக வாழ்க்கை வாழ்வார்.
எண்ணிய காரியங்களில் வெற்றி பெறுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக