Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 23 ஜனவரி, 2020

அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோவில்

 Image result for அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோவில்"
பிரான்மலை உமாமகேசுவரர் கோவிலில் (கொடுங்குன்றம்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் திருப்பத்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் சிங்கம்புணரி என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் கொடுங்குன்றீஸ்வரர் இறைவி அமுதாம்பிகை.

மூலவர் : கொடுங்குன்றநாதர், விஸ்வநாதர், மங்கைபாகர்.

தாயார் : குயிலமுதநாயகி, விசாலாட்சி, தேனாம்பாள்.

தல விருட்சம் : உறங்காப்புளி.

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்.

புராண பெயர் : எம்பிரான்மலை, திருக்கொடுங்குன்றம்.

தல வரலாறு :

  கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள் மற்றும் முனிவர்கள் என அனைவரும் கைலாயம் சென்றுவிட்டனர். இந்த நிகழ்வின் காரணமாக உலகில் வடதிசை தாழ்ந்தும், தென்திசை உயர்ந்ததும் காணப்பட்டது. உலகை சமப்படுத்த சிவன் பெருமான், அகத்தியரை தென்திசையில் உள்ள பொதிகை மலைக்குச் செல்லும்படி கூறினார்.

 அகத்தியருக்கோ, சிவனின் திருமணத்தைக் காண வேண்டுமென்ற ஆசை இருந்தது. தனது எண்ணத்தை சிவபெருமானிடம் முறையிட்டார். அதற்கு சிவபெருமான் தென்திசையில் அவருக்கு தனது திருமணக்காட்சி கிடைக்கும் என்றார். அப்போது அகத்தியர் சிவபெருமானிடம், தான் விரும்பும் இடங்களில் எல்லாம் அவரது திருமணக்கோல காட்சி கிடைக்க வேண்டும் என்று வேண்டினார். அதன்படி அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும் வழியில், பல இடங்களில் சிவனின் திருமணக்கோலத்தை தரிசித்தார். அவ்வாறு அவர் தரிசித்த தலங்களில் இத்தலமும் ஒன்று ஆகும். இக்கோவிலில் குன்றக்குடி தேவஸ்தானத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது.

தலச் சிறப்பு :

 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். (ஐப்பசி முதல் பங்குனி வரையில்) சிவன் மீது சூரிய ஒளி விழுகிறது. இவ்வாறு சூரிய ஒளி விழுவதைக் காண்பது அபூர்வம். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பாதாளம், பூமி, மலை என மூன்றடுக்கு கொண்டதாக இக்கோவில் அமைந்துள்ளது.

 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 195 வது தேவாரத்தலம் ஆகும்.

 மலை மேலே உள்ள மூலவர் உருவங்கள் கல்யாண கோலத்தில் உள்ளன.

 மலை மேலே காரணாகம முறையிலும், கீழே காமிகாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன.

 'பெயரில்லா மரம்" மலைமீது சுவாமி (மங்கைபாகர்) சந்நிதிக்கு அருகில் உள்ளது. இம்மரத்தை எவராலும் பெயர் தெரிந்து சொல்லப்படாமையால் 'பெயரில்லா மரம்" என்றே அழைக்கின்றனர்.

மூன்றடுக்கு சிவன் கோவில் :

 ஒரு சமயம் வாயுபகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பலசாலி என போட்டி எழுந்தது. ஆதிசேஷன் மேரு மலையைச் சுற்றிக்கொள்ள வேண்டும், அதை வாயு பகவான் தனது பலத்தால் பெயர்க்க வேண்டும் என்பதே போட்டி. ஆதிசேஷன், தன் பலத்தால் மலையை இறுகப் பற்றிக்கொண்டார். வாயு பகவான் எவ்வளவோ முயன்றும், மலையை அசைக்க முடியவில்லை. இந்த போட்டியின் போது, மேரு மலையிலிருந்து துண்டுகள் பெயர்ந்து விழுந்தது. அவ்வாறு விழுந்த குன்றே, இங்கே மலையாக உள்ளது.

இம்மலையில் சிவன் பாதாளம், பூலோகம், கைலாயம் என மூன்று அடுக்குகளில் இருந்து காட்சி தருகிறார். பாதாளத்திலுள்ள கோவிலில் சிவன், கொடுங்குன்றநாதர் என்ற பெயரில் அருளுகிறார். இவருக்கான அம்பிகை, குயிலமுதநாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். மத்தியிலுள்ள கோவிலில் விசாலாட்சியுடன் விஸ்வநாதர், மேல் பகுதியில் அம்பிகையுடன் மங்கைபாகராக காட்சி தருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக