Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 24 ஜனவரி, 2020

நீங்களும் உங்கள் புத்தி ரேகையும்.....!

 Image result for புத்தி ரேகையும்.....!"
னிதனை உயர்ந்த ஜீவனாக்குவது அவனது ஆறாவது அறிவாகும். மனித உடலில் புத்தி அல்லது அறிவாற்றலைக் கட்டுப்படுத்தும் உறுப்பு, மூளை. ஒருவனது அறிவு, புத்திக்கூர்மை, விவேகம் போன்றவற்றின் அடிப்படையில் ஒருவரது வாழ்க்கை அமையும் விதத்தை, புத்தி ரேகையின் அமைப்பிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

புத்தி ரேகை:

குரு மேட்டின் அடிப்பகுதியில் ஆயுள் ரேகையை ஒட்டி ஆரம்பமாகி, உள்ளங்கையில் குறுக்காக செவ்வாய் மேடு (அ) சந்திர மேட்டை நோக்கிச் செல்லும் ரேகை புத்தி ரேகை என்று அழைக்கப்படும்.
புத்தி ரேகை ஒருவர் கையில் நன்றாக இருந்தால் அவர் பலசாலியாகவும், திறமைசாலியாகவும் இருப்பார். புத்தி ரேகை சரியாக அமையாதவர் கையில் இருப்பதை இழந்து தவிக்க நேரிடும்.

புத்தி ரேகை கையின் நடுப்பாகத்தில் நின்று கையை இரண்டு பாகங்களாகப் பிரித்தால் அவர்கள் அதிக புத்திசாலியாகத் திகழ்வார். இவரை யாரும் ஏமாற்ற முடியாது.

புத்தி ரேகையிலிருந்து சிறு சிறு ரேகைகள் குரு மேட்டை நோக்கிச் சென்றால், மிக அதிக புத்திசாலியாகத் திகழ்வார்.

புத்தி ரேகை, ஆயுள் ரேகையுடன் இணையாமல் தனித்தனியாக இருந்தால் எந்த காரியத்தையும் தன்னிச்சையாக செய்து வெற்றி பெறுவார். பெண்களுக்கு இந்த அமைப்பு நல்லது அல்ல.

புத்தி ரேகையிலிருந்து ஒரு கிளை உற்பத்தியாகி அது குரு மேட்டைத் தொட்டால் அவர் ஒரு சிறந்த எழுத்தாளராகத் திகழ்வார்.

புத்தி ரேகை கையின் நடுப்பாகம் வரை அடைந்து பின் சற்று கீழ்நோக்கி சென்றால் அவர் பணம் சேர்ப்பதில் மிகவும் ஆசையுடன் திகழ்வார்.

புத்தி ரேகைக்கு மேல் சூர்ய ரேகை பலமாக அமைந்தால், ஏதாவது ஒரு கலையில் பெயரும் புகழும் அடைவார்.

புத்தி ரேகை, சனிமேட்டுக்கும், குரு மேட்டுக்கும் இடைப்பகுதியில் உற்பத்தியானால் உடம்பில் ரத்தம் குறைந்து காணப்படுவார்.

புத்தி ரேகையில் தீவுக்குறி இருந்தால் அவருக்கு வாய்க் குளறல், திக்கு வாய் இருக்க வாய்ப்பு உண்டு.

புத்தி ரேகை சந்திர மேட்டை நோக்கிச் சென்றால் கடல் பயணம் உண்டு.

இரண்டு புத்தி ரேகை அமைந்தவர் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி. அவர் பெரும் பதவியை அடைவார்.

சுக்ரமேட்டில் இருந்து ஒரு கிளை ரேகை புத்தி ரேகையைத் தொட அவருக்கு கடுமையான குடும்பப் பிரச்சனைகள் உண்டாகும்.

அதிக நீளமான புத்தி ரேகை அமைந்து சந்திர மேடு வரை சென்றால் அவர் பிறரின் மனதை அறியும் திறன் உள்ளவராக இருப்பார்.

துண்டு துண்டாக முறிந்து செல்லும் அல்லது சங்கிலி போல் செல்லும் புத்தி ரேகை எனில், மிகக் குறைவான அறிவு, எதிலும் குழப்பமாக இருப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக