வெள்ளி, 24 ஜனவரி, 2020

ஜில்... ஜில்... தொட்டபெட்டா !!

 Image result for தொட்டபெட்டா !!"
கோடைக்காலம் தொடங்கி விட்டது. ஆண்டு முழுவதும் உழைத்து களைத்த மக்கள் 'ஜில்" என்று இருக்க மலை பிரதேசங்களுக்கும், குளிர் பிரதேசங்களுக்கும் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். சுற்றுலா என்றாலே நம்ம ஊர் மக்கள் வண்டியை கிளப்பி உதகைக்கு புறப்பட்டு விடுவார்கள்.

சரி..! அப்படி, உதகைக்கு செல்பவர்கள் எந்தெந்த பகுதிகளுக்கு செல்லலாம். அந்தப் பகுதியின் சிறப்புகள் என்ன..? என்பதில் இன்று நாம் காணும் சுற்றுலாப் பகுதி தொட்டபெட்டா....

சிறப்புகள் :

தொட்டபெட்டா தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை ஆகும். மேலும் இதுவே தென்னிந்தியாவின் உயரமான சிகரம் ஆகும். இந்த சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8,640 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

அதன் உச்சியில் உள்ள தட்டையான வளைவே தொட்டபெட்டாவின் சிறப்பு. இந்தச் சிகரம் ஊட்டியின் மற்றொரு பிரபலமான சுற்றுலா மையம். இங்கு, வனத்துறை அதிகாரிகள் மலை மேல் ஒரு ஆய்வு மையத்தை அமைத்துள்ளனர். அங்குள்ள இரண்டு தொலைநோக்கிகள் மூலம், சுற்றுலா பயணிகள் கண்ணுக்கினிய பள்ளத்தாக்கைக் காண முடியும்.

தென்னிந்தியாவின் உயரமான சிகரம் தொட்டபெட்டா. இந்த சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8,640 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தொட்டபெட்டா என்றால் பெரிய மலை என்று பொருள்.

தொட்டபெட்டா மலை சிகரத்திலிருந்து பார்த்தால் உதகை நகரம், குன்னூர், மைசூர் மற்றும் முதுமலை வனப்பகுதி உட்பட பல்வேறு இடங்களைக் காணலாம்.

இவற்றை பார்ப்பதற்கு தொட்டபெட்டா மலை பகுதியில் தொலைநோக்கு கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உதகையின் இயற்கை அழகை பார்த்து ரசிக்க சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.

பார்க்க வேண்டிய இடங்கள் :

இயற்கை காற்றுடன் கூடிய நடை பயணம்...
பரிசல் பயணம்...
தாவரவியல் பூங்கா...
அழகான கேரட், தேயிலைத் தோட்டங்கள்...
மலர் கண்காட்சி...
தொலைநோக்கி இல்லம்...
கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சிகள்...

எப்படி செல்வது?

உதகை நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில், ஊட்டி - கோத்தகிரி செல்லும் சாலையில் தொட்டபெட்டா அமைந்துள்ளது. சொந்த வாகனத்தின் மூலம் செல்வது சிறந்த அனுபவத்தை தரும்.

விமானம் வழியாக :

கோயம்புத்தூர் விமான நிலையம்.

ரயில் வழியாக :

ஊட்டி ரயில் நிலையம்

இதர சுற்றுலாத் தலங்கள் :

ஊட்டி...
மைசூர்...
குன்னூர்...
குல்குடி சிகரம்...
ஹெகுபா சிகரம்...
முதுமலை தேசியப் பூங்கா...
சாமுண்டி கோயில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்