பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோவிலானது பல நூற்றாண்டுகள்
பழமை வாய்ந்ததாகும். இதற்கு முன் இந்த இடமானது அழகாபுரிஃபாராபுரி என்று
அழைக்கப்பட்டு வந்தது. அருள்மிகு கொண்டத்துக் காளியம்மன், ஊரின் வளமைக்கு
முக்கியக் காரணமாக இருந்தாள் என்று கூறப்படுகிறது.
மூலவர் : காளியம்மன் (கொண்டத்துகாரி)
புராண பெயர் : அழகாபுரி, பாராபுரி
ஊர் : பாரியூர்
மாவட்டம் : ஈரோடு
தல வரலாறு
கோபிசெட்டிபாளையம் முன்பு வீரபாண்டி கிராமமாக
பெயர் விளங்கியது. கோபிசெட்டிப்பிள்ளான் என்பவர் இப்பகுதியில் பெரும் வள்ளலாகத்
திகழ்ந்ததால் கோபிசெட்டிபாளையம் என்று பெயர் பெற்றது. அவர் ஒருமுறை வறியோருக்குக்
கொடுக்கத் தன்னிடம் பொருளின்றி வருந்தி, கொண்டத்துக் காளியம்மனிடம் முறையிட்டு
புலிப்புதருக்குச் சென்று உயிர்விடத் துணிந்தார். கருணை கொண்ட அம்பிகை
புலிப்புதரில் புலிக்குப் பதிலாக பொற்காசுகள் கொண்ட முடிப்பு இருக்கும்படிச்
செய்தாள். அவர் அம்மனின் கருணையை எண்ணி வியந்து பொன்முடிப்பை எடுத்துச் சென்று
மீண்டும் கொடையளித்தார்.
பாரியூர் முன்பு சிறப்பான நகரமாக இருந்துள்ளது.
பின்பு நடந்த அந்நியப் படையெடுப்பால் மக்கள் புலம்பெயர்ந்து சென்றனர். அந்நியப்
படையெடுப்புகளின் போது அம்மன் சிலையைப் பகைவர்களால் ஏதும் செய்ய இயலவில்லை.
தங்கமணி முத்துவேலப்பக் கவுண்டர் அவர்கள் அறநிலையத்துறையினரின் ஒத்துழைப்போடு சிறு
கோவிலாக இருந்த கொண்டத்துக் காளியம்மன் திருக்கோவிலை தற்போது கரும்பளிங்குக்
கற்களால் கட்டப்பட்டது.
கோவில் கட்டமைப்பு மற்றும் தெய்வங்கள்
கொண்டத்துக் காளியம்மன் உடன் விநாயகர், மகா
முனியப்பன், கன்னிமார், பொன்காளியம்மன் மற்றும் இதர தெய்வங்களுக்கும் சந்நிதிகள்
உள்ளது. மேலும் கோவிலின் பிரதான கோபுரம் தெற்கு மூலையில் அமைந்துள்ளது. கருவரையை
சுற்றி கருப்பு பளிங்குக்கற்களால் ஆன வெளி மண்டபம், கோவிலின் முன்னர் ஐந்து
அடுக்கு ராஜ கோபுரத்துடன் கம்பீரத்துடன் காட்சி அளிக்கிறது.
ஒரு சிங்கத்தின் வாயில் காணப்படும். பந்து
வடிவிலான ஒற்றைக்கல் மற்றும் கோவில் தூண்கள் மிகவும் துல்லியமாகவும், தொழில்
நுணுக்கமாகவும் காணப்படுகின்றன. அம்மன் தலையில் நெருப்பிலான கிரீடமும், அரக்கனை
காலில் மிதித்தது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மனின் தலையில் ருத்ரன்
இருப்பதாகவும், அம்மனின் வாகனம் சிங்கமாக கருதப்படுகிறது.
அது தவிர ஸ்ரீ மகா முனியப்பனின் மாபெரும் சிலை
ஒன்றும் காணப்படுகின்றது. இவர் குழந்தை வரம் அளிப்பதோடு அல்லாமல்,
பயத்திலிருந்தும் தீய சக்திகளிடத்திலிருந்தும் மக்களைக் காப்பாற்றி வருவதாகவும்,
மேலும் காவல் தெய்வம், பிரம்மா மற்றும் இன்னும் பல சிலைகள் காணப்படுகின்றன. 'சின்ன
அம்மன்" என்று அழைக்கப்படும் உற்சவர் சிலையும் இங்கு உள்ளது. கோவில்
கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.
திருவிழா மற்றும் சிறப்பு வழிபாடுகள்
திருகோவில் ஆண்டுதோறும் மார்கழி
மாதத்தில் நடைபெறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
மேலும், நவராத்திரி திருவிழாவின் போது ஒன்பது நாட்களும் அம்பாள் வௌ;வேறு
உருவங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சித்திரை திருவிழா மற்றும் பொங்கல்
விமர்சையாக கொண்டாடப்படும் மற்ற பண்டிகைகள் ஆகும்.
முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு மக்கள்
அம்மனிடம் 'வாக்கு கேட்டல்" முறையைக் கடைபிடிக்கின்றனர். அம்மன் சிலையின் இரு
பக்கங்களிலும் பூக்கள் வைத்து எப்பக்கத்திலிருந்து பூ கீழே விழுகின்றது என்பதைப்
பொறுத்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக