Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 7 ஜனவரி, 2020

CES 2020: சாம்சங் நிறுவனத்தின புதிய கேலக்ஸி க்ரோம்புக் சாதனம் அறிமுகம்.!


13.3-இன்ச் 4கே AMOLED டச் ஸ்கிரீன்

சாம்சங் நிறுவனம் CES 2020 நிகழ்வில் தனது புதிய க்ரோம்புக் 2-இன்-1 சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த மாடல் 4கே AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்க முடியும்.
13.3-இன்ச் 4கே AMOLED டச் ஸ்கிரீன்
கேலக்ஸி க்ரோம்புக் சாதனம் அலுமினிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 13.3-இன்ச் 4கே AMOLED டச் ஸ்கிரீன் வடிவமைப்பை மற்றும் 3840 x 2160 பிக்சல் திர்மானம் அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
புதிய க்ரோம்புக் 2-இன்-1 சாதனத்தில் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 x 2வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் பேக்லைட் கீபோர்ட் உள்ளிட்ட பல்வேறு
வசதிகள் இவற்றுள் அடக்கம்.
இன்டெல் கோர் ஐ5
சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய க்ரோம்புக் 2-இன்-1 இன்டெல் யு.எச்.டி கிராபிக்ஸ் உடன் 10-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ5 செயலி மூலம் இயக்கப்படுகிறது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனத்தின் முன்புறம் 1எம்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது என்றும், பின்பு க்ரோம்புக் க்ரோம்ஒஎஸ் அடிப்படையாக கொண்டு இயங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
49வாட் பேட்டரி
குறிப்பாக இந்த சாதனத்தில் 49வாட் பேட்டரி வசதி மற்றும் வைஃபை6 ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், மைக்ரோ யுஎஸ்பி எஸ்டி கார்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் உள்ளது. மேலும் 1.4கிலோ எடை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது.
சற்று உயர்வான விலை
புதிய க்ரோம்புக் 2-இன்-1 சாதனத்தின் விலைப் பற்றிய தகவல்களை வெளியிடவில்லை, இருந்தபோதிலும் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு சிவப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் இந்த சாதனம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!