முன்பெல்லாம்
ஒரு போனின் "கதை" முடிந்த பின்னர் தான் அடுத்த போன் பற்றியே எண்ணமே கிளம்பும்.
ஒருகட்டத்தில் "1 வருஷம் யூஸ் பண்ணிட்டாலே.. அது பழசு தான்" என்கிற எண்ணம்
நிலவத்தொடங்கியது. எப்போது முதல் எக்ஸ்சேன்ஜ் ஆபர் என்கிற கான்செப்ட் நடைமுறைக்கு வந்ததோ
அன்று முதல் புதுசா ஒரு போன் அறிமுகமானால் அதை உடனுக்குடன் வாங்கும் பழக்கம் (நம்மில்
பெரும்பாலானவர்களிடம்) உருவானது.
பட்டியலில் நோக்கியா இல்லை, ஆனால்..!
இதன்
விளைவாக, இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் விற்பனையானது "பஜ்ஜி, போண்டா"
கணக்காக விற்பனையாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது
அதிக அளவிலான ஸ்மார்ட்போன்களே விற்பனை செய்யப்படுகின்றன. கவுண்டர்பாயிண்ட்டின்
மார்க்கெட் மானிட்டர் சேவையானது, உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் எந்தெந்த
நிறுவனங்கள் எவ்வளவு ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளது என்கிற டாப் 10 பட்டியலை
வெளியிட்டுள்ளது. அதாவது 2019 ஆம் ஆண்டில் உலகில் அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை
செய்த நிறுவனங்களின் பெயர்கள் நமக்கு கிடைத்துள்ளது. அந்த பட்டியலின் இரண்டாம்
இடத்தில் உள்ள நிறுவனத்தின் பெயரை அறிந்தால் நீங்கள் ஷாக் ஆகி விடுவீர்கள்!
10. டெக்னோ
1%
சந்தைப் பங்கைக் கொண்டு, டெக்னோ நிறுவனம் உலகின் டாப் ஸ்மார்ட்போன் பிராண்டுகளின்
பட்டியலில் இணைந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் உலகம் முழுவதும் 21.5
மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளது.
09. ரியல்மி
இந்த
டாப் 10 பட்டியலின் 9வது இடத்தில் இருப்பது மிகவும் புதிய பிராண்ட் ஆன ரியல்மி
ஆகும் மற்றும் இது 2% சந்தைப் பங்கைக் கொண்டிருந்தது. சீன தொழில்நுட்ப நிறுவனமான
இது கடந்த 2019 ஆம் ஆண்டில் 25.7 மில்லியன் யூனிட் ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளது.
08. எல்.ஜி.
எல்ஜி
நிறுவனம் 2% சந்தைப் பங்கோடு 8 வது இடத்தைப் பிடித்தது. தென் கொரிய தொழில்நுட்ப
நிறுவனமான இது கடந்த 2019 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 29.2 மில்லியன்
ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளது.
07. லெனோவா குழு
ஏழாவது
இடத்தில், லெனோவா குழுமம் உள்ளது - இது மோட்டோ ஸ்மார்ட்போன்களை தன்வசம்
கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது 3% சந்தை பங்கைக் கொண்டுள்ளது. இந்த
சீன நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டில் 39.6 மில்லியன் ஸ்மார்ட்போன்களை
அனுப்பியுள்ளது.
06. விவோ
ஒப்போவுக்குப்
பின்னால் பட்டியலில் உள்ள இரண்டாவது பிபிகே குழும நிறுவனம் - விவோ ஆகும். இது 8%
சந்தைப் பங்கைக் கொண்டிருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டில் இது 113.7 மில்லியன் யூனிட்கள்
ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளது.
05.ஒப்போ
8%
சந்தைப் பங்கைக் கொண்டு, இந்த டாப் 10 பட்டியலில் முதல் BBK குழுவை சேர்ந்த
நிறுவனம் ஒப்போ ஆகும். ஒப்போ நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டில் 119.8 மில்லியன்
ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளது.
04. சியோமி
நான்காவது
இடத்தில், சீன தொழில்நுட்ப நிறுவனமான சியோமி உள்ளது. இது கடந்த 2019 ஆம் ஆண்டில்
மொத்தம் 124.5 மில்லியன் யூனிட்டுகளை விற்றுள்ளது மற்றும் சியோமி நிறுவனம் 8%
சந்தைப் பங்கைப் பெற்றது.
03. ஆப்பிள்
குபெர்டினோவை
தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், 13% சந்தைப் பங்கை கொண்டு மூன்றாவது
இடத்தில் உள்ளது மற்றும் இது கடந்த 2019 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 196.2
மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்துள்ளது.
02. ஹூவாய்
நம்பினால்
நம்புங்கள்! இரண்டாவது இடத்தில் இருப்பது சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் ஆகும்.
இது 16% சந்தைப் பங்கைக் கொண்டிருந்தது. ஹூவாய் நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டில்
உலகம் முழுவதும் 238.5 மில்லியன் ஸ்மார்ட்போன்களை அனுப்பியுள்ளது.
01. சாம்சங்
சாம்சங்
நிறுவனம் 20% சந்தைப் பங்கைக் கொண்டு முதல் இடத்தில் உள்ளது. தென் கொரிய
தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் கடந்த 2019 ஆம் ஆண்டில் 296.1 மில்லியன் போன்களை
விற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக