Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 13 பிப்ரவரி, 2020

என்ன மிரட்டினாலும் அடங்குறது இல்ல., டாப் 10 லிஸ்டில் அந்த பார்ன் சைட்- எத்தனை கோடி பார்வையாளர்கள்?





டாப் 100 வலைத்தளங்களின் பட்டியல்
ணையதளமின்றி அமையாது உலகு என்ற அளவிற்கு தற்போது உலகம் முழுவதும் இணையத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்தியா உட்பட உலகம் முழுவதுமுள்ள மக்கள் அதை அதிகாமாக தேடுகிறார்கள் என்ற கேள்விக்கான பதில்கள் வெளியாகியுள்ளது.
டாப் 100 வலைத்தளங்களின் பட்டியல்
தற்போதைய இன்டெர்நெட் ட்ரெண்ட் என்கிற தலைப்பின் கீழ் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தும் டாப் 100 வலைத்தளங்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் தலைக்குணிவு என்னவென்றால் அந்த பட்டியலில் உள்ள டாப் 10 இடத்தில் ஆபாச வலைத்தளம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முன்னதாக வெளியான ஆய்வறிக்கை
உலகின் மிகப்பெரிய ஆபாச வலைத்தளமான பார்ன் ஹப்பிற்கான இணைய போக்குவரத்து 12 மாதங்களில் வெகுவாகக் குறைந்தது. பார்ன்ஹப்பிற்கு வரவேற்பு இருக்கும் முக்கிய நாடுகளில் இந்தியா 12 இடத்தில் உள்ளது என்று தனியார் நிறுவனம் தனது ஆண்டு ஆய்வறிக்கையில் தெரிவித்தது.
இந்திய அரசு தடை
இந்தியாவில் இருந்து பார்ன் சைட்டுகளுக்கு போக்குவரத்து குறைந்து வருவதன் முக்கிய காரணம் ஓரளவு இந்திய ஆபாச தளங்களுக்கான அணுகலை இந்திய அரசு தடைசெய்ததுதான் என்று வலைத்தளம் தெரிவித்துள்ளது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் போர்ன் சைட்டிற்கு அதிக இணையபோக்குவரத்தை வழங்கிய நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
827 வலைதளங்களை தடை செய்யுமாறு அரசு திட்டம்
அக்டோபர் 27, 2018 இல், ஆபாச அணுகல்களை வழங்கும் 827 வலைதளங்களை தடை செய்யுமாறு அரசாங்கத்தின் தொலைத் தொடர்புத் துறை இணைய சேவை வழங்குநர்களிடம் கூறியது. அதன்பின், டெஹ்ராடூனில் நடந்த ஒரு பாலியல் வன்புணர்வு வழக்கின் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மொபைலில் ஆபாச காட்சிகளை காட்டியதன் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டது.
பார்ன்ஹப்., இந்தியாவுக்கான தனி ஏற்பாடு
இந்த நிலையில் பார்ன்ஹப் இந்தியாவுக்கான ஒரு பின்ப வலை தளத்தை உருவாக்கியது, இதன்மூலம் ஆன்லைனில் ஆபாச படம் பார்க்கும் பயனர்களின் எண்ணிக்கையில் தற்போது அதிகரித்து வருகிறது . இந்திய அரசு இந்த உத்தரவை 2018 ஆம் ஆண்டில் பிறப்பிக்க வில்லை அதற்கு முன்னதாகவே 2015 இல் 857 வலைத்தளங்களைக்கு தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
சரி கதைக்கு வருவோம்
தற்போது வெளியாகியுள்ள டாப் 100 பட்டியலில் முதல் 10 தளங்களுக்கு மட்டும் 165.7 பில்லியன் மாதாந்திர வாடிக்கையாளர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ளது. இதில் மாதாந்திர என்ற வார்த்தை உற்று நோக்கிக் கொள்ளவும். அதேபோல் 1 பில்லியன் என்றால் 100 கோடி என்று அப்போது 165 பில்லியன் என்றால் ஆயிரத்து 650 கோடி பேர் பார்வையாளர்கள் ஆகும். இந்த பட்டியிலின் டாப் 10 லிஸ்ட்-ல் ஆபாச இணையதளம் உள்ளது. டாப் 10 லிஸ்ட்டை வரிசை படுத்தி பார்ப்போம்.
கூகுள் முதலிடம்:
கூகுள் என்பது பிரதானமான ஒன்றாக இருக்கிறது. மனிதனுக்கு எப்படி இரண்டு கைகள், இரண்டு கால்கள் உள்ளதோ அதேபோன்று கூகுள் இரண்டாவது செயற்கை மூளையாகவே திகழ்ந்து வருகிறது. சிறு சந்தேகம் என்றாலும் சரி, ஏதாவது தகவல் வேண்டுமானாலும் சரி உடனடியாக மனதில் தோன்றுவது கூகுள்தான்.
அதனால் சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் மிகப்பெரிய தேடுபொறி நிறுவனமான கூகுள் உலகிலேயே அதிகம் பார்வையார்களை கொண்ட வலைததளமாக இருக்கிறது.
யூடியூப் இரண்டாவது இடம்:
உலக அளவிலான இணைய பயன்பாட்டில் இந்தியாவிற்கு தான் இரண்டாவது இடம். இதில் பெரும்பாலானோர் யூடியூப்-ல் தான் செலவிடுகிறார்கள் என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தற்போது பலரும் யூடியூப் சேனல்கள் ஆரம்பித்து அதிலேயே பணம் ஈட்டியும் வருகிறார்கள். அதேபோல் அவர்கள் பதிவேற்றும் வீடியோவிற்கு என்று வாடிக்கையாளர்கள் பட்டாளம் உண்டு. அதன்படி ஒருமுறை யூடியூப்-க்குள் சென்றுவிட்டால் நேரம் போவதே தெரியாது அடுத்தடுத்து வீடியோ பார்த்துக் கொண்டே இருப்பது வழக்கம்.
பேஸ்புக்:
உலகம் முழுவதும் சுமார் 2 பில்லியனுக்கும் அதிகமாக பயனர்களை கொண்ட சமூகவலைத்தளம் பேஸ்புக். பேஸ்புக் நிறுவனத்தின் மீது தொடர்ந்து புகார்கள், எதிர்ப்புகள் வந்தாலும் அந்த நிறுவனம் பயனர்களுக்கு என்று பல புதிய அப்டேட்களை வழங்கிக் கொண்டே தான் இருக்கிறது. அதன்படி அதில் உள்ள வாடிக்கையாளர்களும் பல்வேறு சமூகவலைதளத்தில் அக்கவுண்ட் வைத்திருந்தாலும் பேஸ்புக் என்பதை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள். இதையடுத்து பேஸ்புக் மூன்றாவது இடத்தில் உள்ளது.
பைடு (Baidu):
அது என்ன பைடு இந்த வார்த்தையே கேள்வி பட்டதில்லை என்று தான் யோசிக்கிறீர்கள். அதுவும் இந்த சைட் நான்காவது இடத்தில் உள்ளதா என ஆச்சரியப்படுகிறீரகளா, பைடு என்பது கூகுளை போல் சீனாவிற்கான வலைதளம். இந்த வலைதளம் சீனர்கள் மத்தியில் மிக பிரதானமானவையாக திகழ்கிறது. உலக அளவில் நம்பர் 1 மக்கள் தொகையை கொண்ட சீனாவில் உள்ள ஒரு தளம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது என்றால் ஆச்சரியப்பட என்ன உள்ளது.
விக்கிப்பீடியா:
கூகுளில் ஏதாவது ஒரு வார்த்தையை டைப் செய்து தேடினோம் என்றால் அது நமக்கு முதலில் காண்பிப்பது விக்கிப்பீடியா தான். நாமும் ஏதாவது தகவலும் அதன் வரலாறு உள்ள நிகழ்வுகளை காண வேண்டும் என்றால் விக்கிப்பீடியாவிற்கு தான் செல்போம். அதன் வரிசையில் விக்கிப்பீடியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
அமேசான்(Amazon)
அமேசான் குறித்து கூறவே வேண்டாம் ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என்றாலோ அல்லது அதன் விலை அறிய வேண்டும் என்றாலோ உடனடியாக நாம் பயன்படுத்துவது அமேசான் இணையதளம் தான். பொருள் வாங்கலயோ பொருள் என்று கூவிக் கேட்டக்காலமும், பொருளை நேரில் ஆய்வு செய்து வாங்கி காலமும் கடந்துவிட்டது. இப்போதெல்லாம் அனைத்தும் அமேசான் என்றாகிவிட்டது.
டுவிட்டர்:
பல அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் என பல முன்னணியினர்கள் தங்களது கருத்துகளை டுவிட்டரில் தான் கருத்து தெரிவிக்கின்றனர். பல அதிகாரப்பூர்வ தகவல்கள் டுவிட்டர் வழியாக இருக்கிறது என்பதால் அந்த சமூகவலைதளத்திற்கு பெரும் வரவேற்பு இருந்துதான் வருகிறது. அதுமட்டுமின்றி ஹேஸ்டாக்குகள் உருவாக்கி அதன் மூலம் போராட்டங்களின் நோக்கம், மக்களின் கருத்துகளை தெரிவிப்பதில் டுவிட்டருக்கு பெரும் பங்கு உண்டு.
இன்ஸ்டாகிராம்:
உள்ளே நுழைந்தது தான் எப்போது வெளியே வருகிறோம் என்றே தெரியாது, அந்தளவிற்கு இன்ஸ்டா தனது பார்வையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு இதில் பதிவிடப்படும் அம்சங்களை பதிவிறக்கம் செய்யமுடியாத படி கட்டமைக்கப்பட்டுள்ளதால், இது பெண்களுக்கான மிகச் சிறந்த பாதுகாப்பு வலைதளமாக உள்ளது.
யாஹூ:
இந்த பட்டியலில் யாஹூ ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது என்பது பலரையும் ஆச்சரியத்திலும் வியப்பிலும் உள்ளாக்கியுள்ளது என்றால் அது மிகையல்ல, தற்போதைய காலக்கட்டத்தில் யாஹூ பார்வையாளர்களை பார்ப்பதே சிரமம் அப்படி இருக்கையில் இந்த வலைதளம் தான் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.
எக்ஸ் வீடியோஸ்
பத்தாவது இடம் மேலே வழங்கப்பட்டுள்ள 9 வலைதளங்களையும் தாண்டி எத்தனையோ நமக்கு தெரிந்த வலைதளங்கள் டாப் 100 இடத்தில் தான் உள்ளது. ஆனால் எக்ஸ் வீடியோஸ் என்ற இணையதளம் பத்தாவது இடத்தில் உள்ளது. எத்தனை கட்டுபாடுகள் விதித்தாலும் இந்த வகை இணையத்திற்கு வாடிக்கையாளர்கள் இருந்து கொண்டே தான் வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக