வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை 48 மணி நேரத்தில்
அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
.
உச்ச
நீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா வழக்கு தொடர்ந்தார்.அந்த
வழக்கில்,குற்றப்பின்னணி உடையவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள்
சீட்டு வழங்கக்கூடாது என்று தெரிவித்தார்.
இது
தொடர்பான விசாரணை இன்று விசாரணை உச்சநீதிமன்றத்தில்
நடைபெற்றது.அதில்,குற்றப்பின்னணி அல்லது குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை
வேட்பாளர்களாக நிற்க அரசியல் கட்சிகள் அனுமதித்தது ஏன்? என்று கேள்வி
எழுப்பியது. வெற்றிபெறுவது மட்டுமே ஒரு வேட்பாளரின் திறன் ஆகிவிடாது .
வேட்பாளர்களின்
குற்றப்பின்னணியை 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்று
உத்தரவு பிறப்பித்துள்ளது .குற்றப்பின்னணி குறித்து அரசியல் கட்சிகள் 72 மணி
நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக