ஆன்லைனில் ஆர்டர் செய்து ஏமாற்றம் அடைந்தவர்கள்
குறித்த தகவல்கள் அடிக்கடி வந்துக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கேற்ப
விழிப்புணர்வு செய்திகளும் வெளி வந்த வண்ணம் இருந்துக் கொண்டேதான் உள்ளது.
கேஷ்
ஆன் டெலிவரியோ ஆன்லைன் பணம் செலுத்துவதோ வழக்கம்
பொதுவாக ஒரு பொருளை ஆன்லைனில் ஆர்டர்
செய்தவுடன் அதற்கான விலையை ஆன்லைனின் மூலம் செலுத்திவிடுவதும் அல்லது கேஷ் ஆன்
டெலிவரி கொடுத்து பொருள் கொடுத்தவுடன் பணம் செலுத்துவது வழக்கம்.
சுற்றுலா
ட்ரிப் ஃப்ரி ஆஃபர் என்று பேரில் மெயில்
இதெல்லாம் ஒருபுறம் இருக்கு சார்
உங்களுக்கு சுற்றுலா ட்ரிப் ஃப்ரி ஆஃபர் வந்திருக்கு சார் அப்டினு ஒரு கால் வரும்
அந்த அழைப்பை ஏற்று சிலர் முதற்கட்ட பணம் செலுத்துவார்கள். அவர்கள் ஏன் நமக்கு
இலவச ட்ரிப் வழங்க வேண்டும் சிந்திக்காமல் அவர்கள் கேட்ட அனைத்து விவரங்களை
கொடுத்து விடுவார்கள். இதில் ஒருவர் ஒருமுறை ஏமாறவில்லை ஒவ்வொருமுறையும்
ஏமாந்துள்ளார்.
ரூ
10 ஆயிரம் மதிப்புள்ள சுற்றுலா ஆஃபர்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த
தினேஷ் படேல் என்ற முதியவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்று அளித்துள்ளார்.
அதில், 2017ஆம் ஆண்டு பிரபல நிறுவனம் ஒன்றின் பெயரில் தனக்கு இமெயில் வந்ததாகவும்
அந்த இமெயிலில், ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள சுற்றுலா ஆஃபர் வழங்கப்படுவதாக
அறிவிக்கப்பட்டிருந்தது என கூறினார்.
முதலில்
ரூ.10 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும்
இதையடுத்து அதற்கான முயற்சியில்
இறங்கிய அவரிடம் முதலில் ரூ.10 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும் எனவும், அதை
செலுத்தினால் உறுதியாக பரிசு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
2
ஆண்டுகளில் 33 பேர்
அந்த பரிசு உறுதி என்ற வார்த்தையை
நம்பி தானும் ரூ.10 ஆயிரம் பணத்தை செலுத்தியதாக தெரிவித்தார். அந்த நாளில் இருந்து
தொடர்ந்து இதே போல் பலர் பணம் செலுத்தினால் ஆஃபர் உறுதி என தொடர்ந்து அழைப்பு
வந்ததாக கூறினார். அனைத்தையும் நம்பி அக்டோபர் 18, 2017 முதல் நவம்பர் 27, 2019
வரை 2 ஆண்டுகளில் இதுவரை தான் 33 நபர்களால் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ரூ.9
கோடி வரை ஏமாந்த நபர்
அப்படி 33 முறையும் சுமார் ரூ 10
ஆயிரம் முதல் ரூ 50 லட்சம் வரை பலமுறை மொத்தம் ரூ.9 கோடி வரை செலுத்தியதாக
தெரிவித்துள்ளார். அதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இவ்வளவு பணம்
செலுத்தியும் தற்போது வரை தனக்கு சுற்றுலா ஆஃபர் வரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அதோடு தன் பணமும் திரும்பகிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
33
வெவ்வேறு நபர்கள் மீது வழக்கு பதிவு
இந்த புகாரின் அடிப்படையில், முதியவர்
கூறிய 33 வெவ்வேறு நபர்கள் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த
கால்கள் மற்றும் அந்த நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக