கடந்த சில மாதங்களில் பல்லாயிரக் கணக்கானோரை பலிக்
கொண்ட கொரோனா வைரஸின் தாக்கல் சீனாவில் குறைந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை மொத்தமாக 2118 பேரை பலி கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் சீனாவில் பரவிய இந்த வைரஸால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீனாவுடனான போக்குவரத்து உள்ளிட்டவற்றை உலக நாடுகள் பல நிறுத்தி வைத்துள்ளன.
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் மெல்ல குறைந்து வருவதாக சீன அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட பலர் உடல்நலம் தேறி வருவதாகவும், கடந்த சில நாட்களில் இறப்பு எண்ணிக்கை விகிதம் மெல்ல குறைந்து வருவதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக