Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 பிப்ரவரி, 2020

இன்ஸ்டாகிராமில் ஒளிந்துள்ள 'Close Friends List' அம்சம்; என்ன யூஸ்? பயன்படுவடுவது எப்படி?



ன்ஸ்டாகிராமில் இருக்கும் க்ளோஸ் பிரண்ட்ஸ் லிஸ்ட் அம்சத்தின் நன்மைகளை பற்றி அறிந்த பின்னர் அதை பயன்படுத்தி பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் தானாக கிளம்பும்!

இன்ஸ்டாகிராம் தற்போது பிரபலமடைந்து வரும் இணைய பயன்பாடுகளில் ஒன்று. தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தங்களது மிக முக்கியமான தருணங்களை உடன் பகிர விரும்பும் நபர்களுக்கான தேடும் பயன்பாடாக இன்ஸ்டாகிராம் மாறி வருகிறது.

ஆனால் சில நேரங்களில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் சாரம்சத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள். இதற்கு பின்னனியில் பல காரணங்கள் இருக்கலாம். அதாவது, இது உங்களின் தனிப்பட்ட சம்பவமாகவோ அல்லது சர்ச்சைக்குரிய ஒன்றாகவோ மற்றும் மற்றவர்களுக்கு இது சென்று சேர்ந்து விடக்கூடாது என்று நீங்கள் கவனமாக இருக்ககூடிய ஒன்றாகவோ இருக்கலாம்.

முன்னதாக, இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களுடைய ஸ்டோரிகளை மறைப்பதற்கு, தங்களின் தனிப்பட்ட ஸ்டோரி அமைப்புகளை மாற்றி, ஸ்டோரிகளை மறைக்க விரும்பும் பின்தொடர விரும்புகிறவர்களை தேர்வு செய்ய வேண்டி இருந்தது. இது ஒரு மிகவும் சிரமமான வழிமுறையாக இருந்தது.

இருப்பினும், பேஸ்புக் சில ஆண்டுகளுக்கு முன்பு "குளோஸ் ஃப்ரண்ட்ஸ்" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இது பயனர்கள் தன்னுடைய சில குறிப்பிட்ட தொடர்புகள் அல்லது தன்னை பின் தொடர்பவர்களை தேர்வு செய்து அவர்களை நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் சேர்க்கவும், ஸ்டோரியை அல்லது நிகழ்வுகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் அனுமதிக்கிறது.

இன்ஸ்டாகிராமின் துணைப்பயன்பாடான "த்ரெட்ஸ்" என்று அழைக்கப்படும் மற்றொரு பயன்பாடு உள்ளது. இது அனைத்து நெருங்கிய நண்பர்களின் பட்டியலையும் மற்ற பின் தொடர்பவர்களிடம் இருந்து பிரிக்கிறது. ஸ்மார்போனில் இந்த பயன்பாடு நிறுவப்பட்ட நிலையில், இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களை பின் தொடர்பவர்களிடமிருந்து வரும் செய்திகளை இன்ஸ்டாகிராமின் நேரடி செய்தி பிரிவின் கீழ் அல்ல, " த்ரெட்ஸ்" பயன்பாட்டில் பெறுகிறார்கள். புகைப்படங்களை பகிர்வது, நெருங்கிய நண்பர்களுக்கான ஸ்டேட்டஸ் அமைப்பது போன்ற விருப்பங்களையும் இந்த பயன்பாடு வழங்குகிறது.

ஆனால் இந்த அம்சங்கள் அனைத்தும் நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களுக்கு மட்டுமே செயல்படும். எனவே புதிய நெருங்கிய நண்பர்கள் பட்டியலை எவ்வாறு உருவாக்குவது என்ற கேள்விக்கு கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றவும்.

1. உங்களின் ஸ்மார்ட் போனில் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை திறந்து, கீழ் வலது முலையில் இருக்கும் " அவதார்" ஐகானை தட்டவும்.

2. மேல் வலது முலையில் மூன்று கிடைமட்ட கோடுகளை சொடுக்கவும். பின்னர் " க்ளோஸ் பிரண்ட்ஸ்" விருப்பத்தை சொடுக்கவும்.

3. அதன் பிறகு காண்பிக்கப்படும் பட்டியலை மேலும் கீழும் நகர்த்தியோ, அல்லது " தேடு" அம்சத்தின் முலம் நெருங்கிய பின் தொடர்பவர்களை தெரிவு செய்து " சேர்" பொத்தானை தட்டவும்.

 நினைவில் கொள்க ! நீங்கள் முதல் முறையாக "க்ளோஸ் பிரண்ட்ஸ்" பட்டியலை உருவாக்குகிறீர்கள் என்றால், விருப்பத்தை தட்டினால் அது "தொடங்கு" பொத்தானை அழுத்தும்படியாக கேட்கும். அதை தட்டவும். பின்னர் விளக்கமளிக்கும் விண்டோ அமைப்பின் வழிமுறைகளை பின்பற்றி பின் "பட்டியலை உருவாக்கு" பொத்தானை அழுத்தி பட்டியலை இறுதி செய்யவும்.

உங்கள் தனிப்பட்ட அனுபவங்கள்/ நிகழ்வுகளை நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே பகிர்வதற்கு, ஒரு புதிய ஸ்டோரியை உருவாக்கி, பகிர் திரையில் உள்ள "க்ளோஸ் பிரண்ட்ஸ்" என்ற இரண்டாவது விருப்பத்தை தேர்வு செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக