இரட்டை
குழந்தைகளின் கரு எப்படி உருவாகிறது, அவை பிறந்த பின்னர் என்னவெல்லாம் அவர்களுக்கு
இடையில் நடக்கும் என்பது பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
எப்படி
உருவாகின்றன?
இரட்டை
குழந்தைகள் கருவில் உருவாவது ஒரே மாதிரியான செயல்பாடு கிடையாது. அதற்குள்ளும்
நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
ஒரு
கருமுட்டையும் அதனுடன் ஒரு விந்துவும் சேர்ந்து கருத்தரித்து, பின் இரண்டாகப்
பிரிவதன் மூலம் இரண்டு கருக்களும் ஒரே மரபணு அம்சத்துடன் உருவாகும். இப்படி
உருவாகும் கருக்களை identical twins என்று சொல்வோம். இதிலும் இரண்டு வகையுண்டு.
இவை இருக்கும் பனிக்குடம் மற்றும் நஞ்சுக்கொடி ஆகியவற்றைப் பொறுத்து இந்த வகை
கருக்கள் பிரிக்கப்படுகின்றன.
ஒரே
நஞ்சுக்கொடி ஒரே பனிக்குடத்தில் இருப்பவர்கள் ஒரு வகை, இவர்கள் தான் பார்ப்பதற்கு
உருவத்தோற்றத்தில் ஒரே மாதிரியாகப் பிறப்பார்கள்.
மற்றொரு
வகையில் நஞ்சுக் கொடி ஒன்றாக இருக்கும். ஆனால் பனிக்குடப் பை வேறு வேறாக
இருக்கும். இவர்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியும் இருக்கலாம். இல்லாமலும்
இருக்கலாம்.
அதேபோல்,
இரண்டு கருமுட்டைகள் இரண்டு வெவ்வறு விந்தணுக்களுடன் சேர்ந்து தனித்தனி கருக்களாக
வளருகின்ற குழந்தைகளை fraternal twins என்று அழைப்பார்கள். இந்த இரட்டையர்கள் ஒரே
மாதிரி இருப்பதில்லை. இவர்களின் உருவங்கள் வெவ்வேறாக இருக்கும்.
இந்த
குழந்தைகளுக்கு கருவில் வெவ்வேறு தனித்தனியான நஞ்சுக் கொடிகளும் இரண்டு வெவ்வேறு
பனிக்குடங்களும் இருக்கும். இப்படி உருவாகின்ற குழந்தைகள் பெரும்பாலும் ஒரு
குழந்தை ஆணாகவும் மற்றொரு குழந்தை பெண்ணாகவும் பிறக்கின்றன.
உணர்வுகள் ஒன்றா?
இது
மிகப்பெரிய கட்டுக்கதை. சினிமாவில் வேண்டுமானால் இது சாத்தியம். இரட்டையர்களில்
ஒருவருக்கு அடிபட்டால் மற்றவருக்குத் துடிப்பதெல்லாம். நிஜத்தில் அப்படியெல்லாம்
கிடையாது. இருவருக்கு உள்ளுணர்வு வேறு வேறாகத்தான் இருக்கும். அவ்வளவு ஏன் சிம்பிளாகச்
சொல்ல வேண்டுமென்றால் இரட்டையர்களில் ஒருவர் உயிரிழந்தால் கூட, மற்றவருக்கு
தங்களுடைய நெருங்கிய உறவினர் ஒருவரின் இழப்பினால் எப்படி மனம் வருந்துமோ
அப்படிப்பட்ட உணர்வு தான் தோன்றுமாம். சினிமாவில் காட்டுவது போல், இவர்களுக்கு
இருக்காது. அதேபோல ஒரு குழந்தைக்குப் பசி எடுத்தால் மற்றொரு குழந்தைக்கும் பசி
எடுக்கும் என்பதெல்லாம் கிடையாது. பசி உணர்வும் வேறு வேறாகத்தான் இருக்கும்.
ஒரே நேரத்தில் உடம்பு
சரியில்லாம போகுமா?
பொதுவாக
இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு உடல் நலம் இல்லாத பொழுது மற்றொரு குழந்தைக்கும்
உடல் நலம் குறையும் நிலை ஏற்படும். ஆனால் பொதுவாக எல்லோரும் என்ன நினைக்கிறார்கள்
என்றால், ஒரு குழந்தையின் பாதிப்பு மற்றொரு குழந்தைக்குத் தொற்றிக் கொள்ளும்
என்று. ஆனா்ல அதில் உ்ணமையில்லை. சளி, காய்ச்சல், கண்வலி போன்ற தொற்றுநோய்கள் ஒரு
குழந்தைக்கு ஏற்பட்டால் வேண்டுமானால் அது அடுத்த குழந்தையையும் பாதிக்க
வாய்ப்பிருக்கிறது. இது இரட்டைக் குழந்தைகளுக்குத்தான் என்றில்லை, வீட்டில்
ஒருவருக்குக் காய்ச்சல் வந்தால்கூட, அடுத்தவருக்குப் பரவுவதுபோலத்தான். ஆனால்,
மரபணுக் குறைபாடுகளால் பிறவியிலேயே ஏதேனும் நோய் பாதித்திருந்தால், அது இரண்டு
குழந்தைகளையும் பாதிக்கும். தாய் அல்லது தந்தையின் மரபணுவில் ஒரே வகை
அமைந்துவிட்டால், தொடர்ந்து அடுத்தடுத்த குழந்தைகளிலும் அந்த மரபணுவின் தாக்கம்
தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
ஒரே மாதிரி
ஆரோக்கியம் இருக்குமா?
இரட்டைக்
குழந்தைகளில் ஒரு குழந்தை நோஞ்சானாக இருக்கும் என்று சொல்வார்கள். இது ஓரளவுக்கு
உண்மை தான். அதற்குக் காரணம் என்னவென்றால், குழந்தைகள் தாயின் கருவறையில்
இருக்கும்போது, ஒரே அளவில் சீராக ரத்த ஓட்டம் சென்றால், இரண்டு குழந்தைகளின்
எடையும் கிட்டதட்ட ஒரே மாதிரி இருக்கும். ஆனால், ஒரு குழந்தைக்கு அதிக அளவிலும்,
மற்றொரு குழந்தைக்கு குறைவான அளவிலும் ரத்த ஓட்டம் சென்றிருந்தால் குறைவாக ரத்த
ஓட்டம் செல்லும் குழந்தை எடையிலும், உருவ அமைப்பிலும் ஒரு குழந்தைக்கு இன்னொரு
குழந்தையைவிட வித்தியாசப்படும். கருத்தரித்த முதல் 36 வாரங்கள் வரையிலும் இரண்டு
குழந்தையின் வளர்ச்சியும் ஒரே மாதிரியாக இருந்தாலும், நிச்சயம் எடையில் மாற்றம்
காணப்படும். இதனை மருத்துவ ரீதியாக சொல்ல வேண்டும் என்றால், ட்வின் டு ட்வின்
ட்ரான்ஸ் ஃபியூஷன் சிண்ட்ரோம் (Twin-to-twin Transfusion Syndrome) என்று
சொல்வார்கள்.
செயற்கை கருத்தரிப்பு
இயற்கையான
கருத்தரிக்கும் பெண்களை விடவும் செயற்கை முறையில் கருத்தரிப்பு உண்டாகிற
பெண்களுக்குத்தான் அதிக அளவில் இரட்டைக் குழந்தை பிறப்பதாக ஆய்வுகள்
குறிப்பிடுகின்றன.
அதேபோல,
35 வயதுக்கு மேல் பெண்கள் கருத்தரித்தால் அவர்களுக்கு இரட்டைக் குழந்தை
பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
செயற்கை முறையில் கருத்தரிக்கும் பெண்களில் 40 சதவீதத்துக்கும் மேலானவர்களுக்கு
இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இரட்டை வாழைப்பழம்
சாப்பிட்டால்
பொதுவாக
கிராமங்களில் இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைக் குழந்தை பிறக்கும் என்று
சொல்வார்கள். அதில் பெரிய அளவில் உண்மை கிடையாது. ஆனால் பால் குடிப்பதற்கும்
இரட்டை குழைந்தை பிறப்பதற்கும் நிறைய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது
சராசரியாக ஒருவர் வழக்கமாகக் குடிக்கும் பாலை விட பெண் 5 மடங்கு அளவுக்கு அதிகமாக
பா்ல எடுத்துக் கொண்டால், அந்த பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு
அதிக அளவில் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
சுகப்பிரசவம்
சாத்தியமா?
இரட்டைக்
குழந்தைகள் பிறக்கும் போது அதிக கஷ்டப்பட வேண்டியிருக்குமே, அதனால்
சுகப்பிரசவத்தில் பெற்றெடுக்க முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் வருவதுண்டு.
ஆனால், சுகப் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும். ஆனால்
தற்போது இருக்கக்கூடிய பெண்களின் உடல்வாகு. ஆரோக்கியம் மற்றும் மருத்தவ சிக்கல்களைக்
கருத்தில் கொண்டு பெரும்பாலான மருத்துவர்கள் சிசேரியன் மூலம் குழந்தையை
எடுக்கிறார்கள். அது கொஞ்சம் நல்லதும் கூட. முன்கூட்டியே சிசேரியன் என்று முடிவு
செய்து, அதற்காகத் தயாராவதும் திட்டமிடுவதும், தேவையில்லாத சிக்கலுக்கு தாயைக்
கொண்டு போய் நிறுத்த வேண்டியிருக்காது.
தாய்ப்பாலூட்டுதல்
இரட்டைக்
குழந்தை பெற்றெடுப்பதில் பெற்ற பின் உள்ள சிரமம் என்னவென்றால் இரண்டு
குழந்தைக்கும் பாலூட்டுவது. ஒரு குழந்தைக்குப் போதிய தாய்ப்பால் கிடைப்பதே
கஷ்டமாகிவிடுகிற வேளையில், இரண்டு குழந்தைக்குப் போதிய தாய்ப்பால் கிடைப்பது
கஷ்டம் தான். ஆனாலும் கூட தாய்ப்பால் சுரப்பு என்பதில் ஆரோக்கியம் என்பதையும்
தாண்டி, உளவியல் ரீதியாகவும் கவனிக்க வேண்டிய விஷயம். என்னுடைய இரண்டு
குழந்தைக்கும் போதிய பாலை என்னால் கொடுக்க முடியும் என்று நினைக்கின்றவர்களால்
நிச்சயம் பால் சுரப்பை அதிகரிக்க முடியும். அதற்குப் போதிய மனப்பக்குவத்தை அந்த
பெண் பெற்றிருக்க வேண்டும். அதோடு போதிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உண்டாலே
போதும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக