சிறிது காலத்திற்கு முன்பு தொலைத்தொடர்பு
நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் டேட்டா சேவைக்கான ஒரு வரம்பு, குரல்
அழைப்பிற்கான ஒரு வரம்பு மற்றும் பயனர்களின் எஸ்எம்எஸ் சேவைக்கான ஒரு வரம்பு என்று
அனைத்திற்கும் ஒரு வரம்பு அளவை வைத்திருந்தது. இதனால் வாடிக்கையாளர்கள்
வரம்பிற்குள் சேவையைப் பயன்படுத்தும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். ஆனாலும்,
இது அப்படியே நின்றுவிடவில்லை.
முக்கியமான
சேவைக்கு விதிக்கப்பட்ட வரம்பை நீக்கம் செய்த டிராய்
சமீபத்தில், டிராயின் உத்தரவுடன்
இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வரம்பற்ற குரல் அழைப்பு சேவை மற்றும் டேட்டா
சேவையை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது மற்றொரு முக்கியமான சேவைக்கு
விதிக்கப்பட்டிருந்த வரம்பையும் டிராய் நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. அதற்கான
முதற்கட்ட முயற்சியையும் டிராய் மேற்கொண்டு, அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
தினமும்
100 எஸ்எம்எஸ் வரம்பு
சமீபத்திய அறிவிப்பின்படி, தற்பொழுது
வாடிக்கையாளர்களுக்குத் தினமும் வழங்கப்படும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் இனி
வரம்பில்லாமல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இனிமேல் தினமும்
100 எஸ்எம்எஸ் மட்டுமே என்கிற வரம்பு உங்களுக்கு இருக்காது. ஏனெனில் இந்திய
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், இந்த வரம்பை இப்பொழுது நீக்கம்
செய்துள்ளது.
50
பைசா கட்டணம் இனி தேவையில்லை
அதாவது, உங்களுக்குத் தினமும்
வழங்கப்பட 100 இலவச எஸ்எம்எஸ்களின் வரம்பு தீர்ந்த பின்னர், நீங்கள் அனுப்பும்
ஒவ்வொரு எஸ்எம்எஸ்-ற்கும் 50 பைசா என்கிற கட்டணம் தற்பொழுது வரை வசூலிக்கப்பட்டு
வந்தது. ஆனால், இனிமேல் அந்த கவலை இல்லை. உங்கள் கணக்கில் இருக்கும் 100 வரம்பு
எஸ்எம்எஸ்கள் தீர்ந்த பின்னர், நீங்கள் அனுப்பும் அடுத்த எஸ்எம்எஸ் முதல் அனைத்தும்
இலவசம் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரம்பே
இல்லாமல் எஸ்எம்எஸ் அனுப்பலாம்
உங்களுக்குப் புரியும்படி எளிதாக
சொன்னால், இனிமேல் அனைத்து தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களுக்கும் வரம்பற்ற
எஸ்எம்எஸ் நன்மை கிடைக்கும். இனிமேல் நீங்கள் வாட்ஸ்அப்-ல் வரம்பில்லாமல் டெக்ஸ்ட்
செய்வது போல, வரம்பே இல்லாமல் ஒரு நாளைக்கு எத்தனை எஸ்எம்எஸ்-களை வேண்டுமானாலும்
அனுப்பிக்கொள்ளலாம் என்று டிராய் அறிவித்துள்ளது.
இனி
கட்டணம் அவசியமில்லை
கடந்த நவம்பர் 2012 ஆண்டில்,
எஸ்எம்எஸ்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தின் கீழ், குறைந்தபட்ச தொகையாக ஒரு
எஸ்எம்எஸ்-ற்கு 50 பைசா என்கிற கட்டணத்தை விதித்து, அறிமுகமும் செய்தது. தற்போது
டி.சி.சி.சி.பி.ஆர் 2018 (டெலிகாம் கமர்ஷியல் கம்யூனிகேஷன்ஸ் வாடிக்கையாளர்
விருப்பத்தேர்வுகள்) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், எஸ்.எம்.எஸ்களுக்கான
கட்டணத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று டிராய் நம்புகிறது.
ஒழுங்குமுறை
விதி திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுகிறது
இதன்படி, தொலைத்தொடர்பு கட்டண 65வது
திருத்த ஆணை, 2020, தொலைத்தொடர்பு கட்டண 54வது திருத்த ஆணை அறிமுகப்படுத்திய
எஸ்எம்எஸ் கட்டணத்திற்கான ஒழுங்குமுறை விதியின்படி விதிக்கப்பட்ட வரம்பையும்,
கட்டணத்தையும் டிராய் திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளது.
டிராய்
விதித்த காலக்கெடு
இது குறித்த பங்குதாரர்களின்
கருத்துகளுக்கான காலக்கெடுவாக மார்ச் 3 ஆம் தேதியும், எதிர் கருத்துகளுக்கான
காலக்கெடுவாக மார்ச் 17 ஆம் தேதியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இனி மக்கள்
தங்கள் எஸ்எம்எஸ் சேவையையும் கட்டணமில்லாமல், எந்தவொரு வரம்பும் இல்லாமல் இலவசமாக
பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற முடிவு வரவேற்கத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக