மாறிவிட்ட
வாழ்க்கை முறையினாலும் உணவுப் பழக்கத்தினாலும் இன்றைக்கு நிறைய செயற்கை கருத்தரிப்பு
மையங்கள் உருவாகிவிட்டன. ஆனால் ஆண்மைக்குறைபாடு பிரச்சினை இருந்தால் கர்ப்பம் தரிக்கவே
முடியாதா என்பது குறித்து இந்த பகுதியில் விளக்கமாகப் பார்க்கலாம்.
ஆண்மைக்குறைபாடு
உலகம்
முழுவதும் மலட்டுத் தன்மை பிரச்சனை என்பது மிகவும் அதிகரித்துக் கொண்டே போகின்றது.
ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் குழந்தை பெறுவதற்கு தகுதி இல்லாதவராக பலபேர் மாறிக்கொண்டே
வருகின்றனர். சராசரியாக 100 பேருக்கு 30 பேர் வரை இந்த பிரச்சனைக்கு ஆளாகின்றனர் என்று
கண்டுபிடித்துள்ளனர். இது சாதாரண பிரச்சனை இல்லை இதனால் பல மருத்துவமனைகள் உருவாகிய
வண்ணம் உள்ளன. அவர்களது பிரச்சினையை சரிசெய்து கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும்,
இவை உலகம் முழுவதும் பெரிய பிரச்சனையாகவே பார்க்கப்படுகின்றன.
குழந்தைப்பேறு
மனிதனின்
முக்கியமான காரணம் ஒன்று, குழந்தை பெறுவது.குழந்தை பெற்றுக் கொண்டால் தான் மனிதனின்
இனம் அழியாமல் காக்கப்படும். மனித இனம் ஒரு அற்புதமான இனமாகும். ஆனால் இதில் இப்படி
ஒரு பிரச்சனை இப்பொழுது விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இந்த சதவீதம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே
போகிறது.
20
முதல் 30 சதவீதம் பேர் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது அதிரவைக்கும்
உண்மை. உலகில் உள்ள மற்ற உயிரினங்கள் அனைத்துமே எளிதாக குழந்தை பெரும் என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை. அவைகளின் இனப்பெருக்கத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. அவைகளுக்கு
என்று மருத்துவமனைகள் எதுவும் இல்லை. ஆனால் அவைகள் இயற்கையாகவே நடந்து கொண்டே இருக்கின்றன.
மனிதனுக்கு மட்டும் இந்த பிரச்சனை வருவதற்கு பல விதமான காரணங்கள் உள்ளன. முக்கியமாக
நமது வாழ்க்கை முறையை நமது எதிரியாக மாறி விட்டது. நாம் உண்ணும் உணவு இந்த பிரச்சனையில்
பெரும் பங்கு வகிக்கிறது.
உணவுமுறை மாற்றங்கள்
சுத்திகரிக்கப்பட்ட
உணவு, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், பதப்படுத்தப்பட்ட உணவு பதப்படுத்தப்பட்ட பலவிதமான
பொருட்களை உண்டு வருகிறோம். இந்த உணவு தயாரிப்புகள் பெரும்பாலும் நோக்குடனே தயாரிக்கிறார்கள்.
தவிர மனிதனின் ஆரோக்கியத்துக்கு தயாரிப்பதில்லை. இயற்கையை விட்டு விலகி செயற்கையான
உணவுகளை சாப்பிடுவதன் விளைவு இது போன்ற கொடூரமானதாக இருக்கும். இன்னும் கேன்சர் போன்ற
பல வியாதிகளுக்கும் நாம் உண்ணும் உணவே காரணமாக அமைகிறது. ஆனால் அதை மாற்றுவது எளிது
அல்ல அது பெரிய பிரச்சனை இப்பொழுது உங்கள் கணவர் மலட்டுத் தன்மை உடையவராக இருந்தா,
எப்படி குழந்தை பெறுவது என்பதை பற்றி பார்ப்போம்.
மலட்டுத்தன்மை
மலட்டுத்தன்மை
மூன்று வகைப்படும் இவை சில சமயம் குழந்தை பாக்கியம் கொடுக்க முடியும். குழந்தை பெறுவதற்கான
வாய்ப்பே இல்லை, அல்லது சரி செய்யக்கூடிய வாய்ப்புகள் இருக்கக்கூடிய நிலையாகும். இதை
ஆங்கிலத்தில் subfertile, infertile, sterile எனக் கூறுவார்கள் இதில் முதலில் உள்ள
subfertile வகையில் உள்ளவர்களுக்கு அவர்கள் பிரச்சனையை சரி செய்வதற்கான சாத்தியக் கூறுகள்
மிகவும் அதிகம். எளிய சிகிச்சைகள் மூலம் அவரை குழந்தை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளவராக
மாற்றிவிட முடியும். இரண்டாவது வகையான infertile வகை சேர்ந்தவர்களுக்கு குழந்தை பெறுவதற்கான
சாத்தியங்கள் ஓரளவுக்குத்தான் இருக்கின்றன.
ஆனால்
இவர்களையும் ஓரளவுக்கு சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி குழந்தை பெறுவதற்கான வாய்ப்புகளை
அதிகப்படுத்த முடியும். மூன்றாவது நிலையான sterile வகையைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்புகள்
மிகவும் அதிகம். அவர்களுக்கு கருமுட்டைகள் அதிலிருந்து அவ்வளவு சீக்கிரம் உருவாகாது
அவர்களை குணப்படுத்துவது என்பது மிக மிக கடுமையான காரியம். இந்த மூன்று வகைகளில் உங்களது
துணையை எந்த வகையை சேர்ந்தவர்கள் என்பதை முதலில் நீங்கள் கண்டறிய வேண்டும்.
முதல் வகை:
Subfertile
இந்த
வகையை சேர்ந்தவர்களுக்கு குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதற்கு
அவர்களின் விந்தணுக்கள் குறைந்தபட்சம் ஒரு கோடி இருக்க வேண்டும். அவர்களின் விந்தானது
சில முக்கியமான காரணிகள் கொண்டு கழுவி அதில் சோதனை செய்வார்கள். அதில் தேவையான விந்தணுக்களை
எடுத்து அதை அவர்கள் மனைவியின் கருமுட்டைக்குள் செலுத்துவார்கள். இதை ஒரு சிறிய குழாய்
மூலம் செலுத்துவார்கள். இப்படி செய்யும் பொழுது, கரு பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகிவிடுகிறது.
இரண்டாம் வகை:
infertile
இந்த
வகையை சேர்ந்த ஆண்களுக்கும் சில வகையான சிகிச்சைகள் இருக்கிறது. இதில் அவர்களது கருமுட்டையும்
விந்தணுக்களும் சற்று வேறுபட்டு இருக்கும். இவர்களை சில நூதனமான சிகிச்சைகள் மூலம்
குறைந்திருக்கும் விந்தணுக்களை சரிசெய்து அந்தப் விந்தகளுக்கு கருமுட்டைகள் உருவாக்க
கூடிய சக்திகளை அதிகரிப்பார்கள். இந்த நிகழ்வுகள் அனைத்தும் வெளியே நடக்கும்.அதாவது
விந்தனுக்களை வைத்து வெளியே இந்த சோதனைகளை செய்வார்கள். பின்பு அனைத்து வேலைகளும் முடிந்த
பின்பு அந்த விந்தனுக்களை மனைவியின் கருமுட்டைக்குள் செலுத்தி விட்டு,குழந்தை பாக்கியம்
பெற செய்வார்கள்.
மூன்றாம் வகை:
sterile
இந்த
வகையை சார்ந்தவர்கள் உங்கள் துணையாய் இருந்தால் அவர்களின் விந்தணுக்களில் எந்தவித கருமுட்டையும்
உருவாக்குவது என்பது சாத்தியமில்லாத விஷயமாக இருக்கும். இன்றுவரை பல சோதனைகள் நடந்தும்
இதில் அவர்களின் விந்தணுக்களில் எந்தவித கருமுட்டைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் இல்லாமலே
இருக்கிறது. இதனால் வேறு விந்தணுக்கள் வாங்கக்கூடிய வங்கிகளுக்கு சென்று பின்பே மற்ற
வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
முன்பைப்
போல இல்லாமல் தற்போது விந்து வங்கிகளின் மூலம் விந்தணுக்களை எளிதாகப் பெற்று கருத்தரைிக்கச்
செய்ய முடியும். விந்து தானம் பெற்று கருத்தரிக்கச் செய்ய முடியும். அதனால் அந்த காலத்தைப்
போல குழந்தை இல்லையென்று கோவில் கோவிலாக அலைய வேண்டாம். முறையாக மருத்துவ ஆலோசனைப்
பெற்று அதை பின்பற்றினாலே போதும்.
உணவுக்கட்டுப்பாடு
மேலே
குறிப்பிட்ட மூன்று வகைகளை கொண்டு நாம் முயற்சி செய்தால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.
விந்து அணுக்கள் தானம் பெற்று குழந்தை பெற வேண்டும் என்ற நிலையில் இருக்கும் மூன்றாம்
பிரச்சினை பாதிக்கப்பட்டவர்களும் மனம் வருந்தத் தேவையில்லை. நீங்கள் மட்டுமல்ல உலகத்தில்
பல பேருக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. அவர்கள் அனைவரும் இது போன்று செய்து தான்
குழந்தை பாக்கியம் பெறுகின்றனர். இதில் எந்த பிரச்சனையும் இல்லை. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு
மூல காரணமாக அமைவது உணவு கட்டுப்பாடு இல்லாமல் பல பலவிதமான தேவையற்ற உணவுகளை சாப்பிட்டு
வருவது இதுபோன்ற பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைகிறது.
என்ன செய்ய வேண்டும்?
முடிந்தவரை
90% நமது தினசரி வாழ்க்கையில் இயற்கையான உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்க
வேண்டும். கடையில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் பெரும்பாலும் நமக்கு கேடு
விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் இப்பொழுது கிடைக்கக்கூடிய பலவிதமான காய்கறிகளிலும்
அடிக்கக்கூடிய பூச்சி மருந்துகளும் கேன்சர் போன்ற பல நோய்களுக்கும் காரணமாக அமைகிறது
என்று கண்டுபிடித்துள்ளனர்.
எனவே
ஆர்கானிக் வகை காய்கறிகளை முடிந்தவரை சாப்பிடுவது நல்லது.நம்மால் இப்பொழுது இதையெல்லாம்
சாப்பிட்டு உடலை சரி பண்ணுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நம் குழந்தைகளுக்கு
சிறிய வயதிலிருந்தே ஆர்கானிக் காய்கறிகள் பழங்கள் மற்றும் சத்தான தேவையான அளவு மட்டுமே
அசைவ உணவுகளை கொடுத்து வந்தால், அவர்களின் ஆரோக்கியம் நீடித்து நிலைக்கும்.
உங்கள்
குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கலாம். மேலும் புகைப்பழக்கம்,
குடிப்பழக்கம் போன்றவற்றையும் பலவிதமான இதுபோன்ற பிரச்சனைகளில் கொண்டு போய்விடுகிறது.
அவற்றையும் முடிந்த அளவு கட்டுப்படுத்த வேண்டும். உணவே ஒரு மருந்தாகும் அதை உணர்ந்து
சாப்பிடுவது அனைவரின் கடமையாக மாறிவிட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக