மாதவிடாய்
என்ற வார்த்தையைச் சொன்னாலே ஆண்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்களோ என்பதைவிடவும் பெண்களே
முகம் சுழிக்க ஆர்பித்து விடுகிறார்கள். அதற்குக் காரணம் அந்த நாட்களில் அவர்கள் படும்
வேதனை அவர்களை அப்படி செய்யத் தூண்டுகிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும்
அசௌகரியங்களை அவர்களால் சொல்லி மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியாது. அதிலும் ஏதாவது
முக்கிய விசேஷ நாட்களில் மாதவிடாய் வந்துவிட்டால் அவர்களால் கொஞ்சம் கூட மகிழ்ச்சியாக
கலந்து கொள்ளவே முடியாது. அப்படிப்பட்ட நேரங்களில் மாதவிடாயை முன்கூட்டியே அல்லது பின்னால்
தள்ளிப் போடவோ வழி கிடைத்தால் மாட்டேன என்றா சொ்லவார்கள். அப்படி முன்னாலும் பின்னாலும்
தள்ளிப் போட இயற்கையான வழியில் என்ன செய்யலாம் என்பது பற்றி இந்த தொகுப்பில் விளக்கமாகப்
பார்க்கலாம்.
மாதவிடாய்
காலம்
மாதவிடாய் காலங்கள் என்பது பெண்களுக்கு
முக்கியமானது மட்டுமல்ல தொல்லைகள் நிறைந்ததும் கூட. ஏனெனில் பெண்கள் இந்த சமயத்தில்
பல அசெளகரியங்களை சந்திப்பார்கள். பிடித்த மாதிரி வெளியே செல்ல முடியாது ரொம்ப களைப்பாக
இருக்கும், வயிற்று வலி ஒரு பக்கம், பிடித்த ஆடைகளை அணிய முடியாது, கறைபட்டு விடுமோ
என்ற அச்சம் இப்படி ஏகப்பட்ட தொல்லைகள் அவர்களுக்கு இருக்கும். இந்த மாதிரியான நேரங்களில்
உங்க திருமணத்தை நிச்சயித்து விட்டார்கள் என்றால் என்ன செய்வீர்கள். கண்டிப்பா டென்ஷனாகத்தான்
இருக்கும். காரணம் மேடையில் நாள் முழுக்க நிற்க வேண்டும்.
விலையுயர்ந்த
ஆடைகளை அணிய வேண்டியிருக்கும், மன நிலையில் மாற்றம், வயிற்று வலி, அசெளகரியம்,
பயம் இப்படி ஏகப்பட்டதை சமாளிக்க வேண்டியிருக்கும். சில பேர்கள் மருத்துவர்
யாரையும் கேட்காமல் மருந்து கடைகளில் வாங்கி மாதவிடாயை தள்ளிப் போடும் மாத்திரைகளை
போட்டு கொள்வார்கள். ஆனால் அப்படி செய்வது தவறு. இதனால் உங்களுக்கு தற்காலிமாக
வேண்டும் என்றால் பலன் கிடைக்கலாம் ஆனால் பின்னாளில் பல சிக்கல்களை நீங்க சந்திக்க
வாய்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். சரி இதற்கு என்ன தான் செய்வது என்று
யோசித்திருக்கிறீர்களா அதனால் தான் நாங்கள் சில டிப்ஸ்களை உங்களுக்கு வழங்க
உள்ளோம். இது உங்க திருமண சமயத்தில் உதவியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.
மஞ்சள் தண்ணீர்
உங்க
மாதவிடாயை தள்ளிப் போட நினைத்தால் மகப்பேறு மருத்துவரை இரண்டு மாதங்களுக்கு முன்பே
அணுகி ஆலோசனை செய்யுங்கள். உங்க திருமண நாளை ரசிக்க இதை நீங்கள் கொஞ்சம்
முன்னதாகவே செய்தாக வேண்டும். ஒரு வாரம் கழித்தோ அல்லது முன்னதாகவே பீரியட்ஸ் வர்ற
மாதிரி திட்டமிடுங்கள். மஞ்சள் நீர் பானம் ஒரு நாளைக்கு இரண்டு முறை என தண்ணீரில்
மஞ்சள் தூள் போட்டு 15 நாட்கள் குடித்து வாருங்கள். இது உங்களுக்கு 5 நாட்களுக்கு
முன்னதாகவே மாதவிடாய் வர உதவும்.
பயன்படுத்தும் முறை
1
கிளாஸ் தண்ணீரில் 3-9 கிராம் வரையிலும் மஞ்சள் தூள் போட்டு கலந்து குடியுங்கள்.
மஞ்சள் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்காக்குகிறது இது மாதவிடாயை உடனே தூண்டுகிறது
என்று டாக்டர். மைக்கேல் டியொரா ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளார்.
பார்சிலி மற்றும்
மிளகு ஜூஸ் ரெசிபி
2
கிராம் பார்சிலியை 150 மி. லி நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். பிறகு அதில்
மிளகுத்தூள் சேர்த்து ஒரு நாளைக்கு 3 வேளை குடியுங்கள். இதிலுள்ள அபியோல் மற்றும்
மிரிஸ்டிசின் ஆகியவை கருப்பை சுருக்கத்தை தூண்டுகின்றன என்று என்று டாக்டர்
லோவ்னீட் பாத்ரா, மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் ஃபோர்டிஸ் லா ஃபேம் கூறுகிறார்.
மிளகுத் தூள் மாதவிடாய்க்கு முன்னர் ஏற்படும் கடுமையான உடல் வலி மற்றும் வயிற்று
வலியைக் கட்டுக்குள் வைக்கும். உடல் சூட்டை அதிகப்படுத்தும். இயற்கையாகவே உடல்
சூடு அதிகமாக இருந்தால் மாதவிடாய் வேகமாக வரும். மிளகு அந்த உடல் வெப்ப சீதோஷண
நிலையை தூண்டி விட்டு மாதவிடாய் உடனே வருவதற்குத் தூண்டுதலாக இருக்கும்.
பழுத்த பப்பாளி பழம்
சாப்பிடுங்கள்
“பப்பாளி
விதைகளின் ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகள்: ஒரு ஆய்வு ” என்ற கட்டுரையில் , பப்பாளி
மாதவிடாயைத் தூண்டும் ஆற்றல் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார். இது உடலில் சூட்டை
அதிகமாக்குகிறது, இதிலுள்ள கரோட்டீன் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை தூண்டி மாதவிடாய் வர வழி
வகுக்கிறது என்றார். எனவே மாதவிடாய் சீக்கிரம் வர நினைப்பவர்கள் பப்பாளி
சாப்பிடுங்கள். வயிற்றுக்குள் கருவே உருவாகி இருந்தாலும் அதையே கலைத்து
வெளியேற்றும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்த ஒரு பழம் தான் பப்பாளி. மாதவிடாய்
முன்கூட்டியே வர வேண்டும் என்று திட்டமிடுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக இருந்தே
தினமும் ஒரு நன்கு கனிந்த பப்பாளி சாப்பிடுவது நல்லது. அது நீங்கள்
திட்டமிட்டபடியே முன்கூட்டியே உடல் சூட்டை அதிகரித்து மாதவிடாயைத் தூண்டும்.
ஊற வைத்த வெந்தயம்
இரவில்
ஒரு டம்ளரில் 3 டீ ஸ்பூன் வெந்தயத்தை போட்டு ஊற வைத்து விடுங்கள். பிறகு இந்த நீரை
மட்டும் வடிகட்டி சூடாக்கி குடியுங்கள். இது 2-3 நாட்களுக்கு முன் மாதவிடாய் வர
உதவி செய்யும். பைஜ் பாஸானோ தனது ஆய்வறிக்கையில் “இது கருப்பையை சுருங்கச் செய்து
, மாதவிடாயைத் தூண்டும் மற்றும் விரிவாக்க வேலைகளை செய்கிறது என்று
குறிப்பிட்டார். மாதவிடாய் பின்னதாக வர என்ன செய்ய வேண்டும் சிகிச்சையை
திருமணத்திற்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பித்து விடுங்கள். வெந்தயம்
உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியது தான். ஆனாலும் மாதவிடாயை தூண்டும் ஆற்றல்
வெந்தயத்துக்கு உண்டு. தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது நல்லது. சிலர் மோரில்
கலந்து குடிப்பார்கள். அது உடலை அதிகமாகக் குளிர்ச்சியாக்கி விடும். அதனால்
தண்ணீர் சிறந்தது. அப்படியே விழுங்க கஷ்டமாக இருந்தால், வெந்தயத்தை பொடி செய்தும்
பய்னபடுத்திக் கொள்ளலாம்.
தள்ளிப்போட செய்ய
வேண்டியவை
உடற்பயிற்சி
உடற்பயிற்சி
உங்க உடலில் எண்டோர்பின் என்ற சந்தோஷமான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. எனவே திருமண
நாளில் குவிந்திருக்கும் மன அழுத்தத்தை இதன் மூலம் குறைத்துக் கொள்ள முடியும்.
கார்டியோ உடற்பயிற்சிகள் உங்களுக்கு போதுமானதாக இருக்கும். 20 காலையில் மாலையில்
உடற்பயிற்சி செய்து வாருங்கள். இதனால் ஹேப்பி ஹார்மோன் வெளிப்பட்டு உங்க மாதவிடாய்
நாளை தள்ளிப்போட உதவியாக இருக்கும். அதற்காக திடீரென்று உடலுக்கு அதிகப்படியான
அழுத்தத்தைக் கொடுத்து கடுமையாக உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்ற அவசியம்
இல்லை. முடிந்தவரையில் மென்மையாக உடற்பயிற்சி மேற்கொள்ளப் பழகுங்கள். நீங்கள் திட்டமிட்ட
நாளுக்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே உடற்பயிற்சியில் இறங்கிவிட வேண்டும்.
காரசாரமான உணவுகள் வேண்டாம்
காரசாரமான
உணவுகள் உங்கள் உடம்பை சூடாக்கி சீக்கிரமே மாதவிடாயை வர செய்து விடும். எனவே அதை
தவிருங்கள். உடம்பை சூடாக்கும் உணவுகள் எதுவும் வேண்டாம். அதனா்ல மாதவிடாய்
தள்ளிப் போட வேண்டும் என்று திட்டமி தீட்டுபவர்கள் அந்த குறிப்பிட்ட நாளுக்கும்
பத்து நாட்களுக்கு முன்பாகவே மென்மையான உணவை மட்டும் சாப்பிடுங்கள். காரமான
உணவுகளுக்கு குட்பை சொல்லுங்கள். குறிப்பாக பச்சை மிளகாய் மற்றும் மசாலாக்கள்
நிறைந்த உணவுகளைக் கையிலேயே தொடாமல் இருப்பது தான் நல்லது.
பயிறு அல்லது பருப்பு
சூப் குடியுங்கள்
உங்க
மாதவிடாயை தள்ளிப் போட நினைத்தால் கொண்டைக்கடலை அல்லது பயிறை வறுத்து பொடியாக்கி
சூப் போட்டு குடியுங்கள். குறிப்பாக துவரம் பருப்பு மற்றும் பாசிப்பயறு போன்ற முழு
பயறு மற்றும் பருப்புகளைக் கொண்டு கஞ்சி, சூப் ஆகியவற்றைச் செய்து சாப்பிட்டு
வாருங்கள். குறிப்பாக துவரம்பருப்பு உடல் சூட்டைக் குறைக்கும் தன்மை கொண்டது. எந்த
காய்கறி சாப்பிட்டாலும் அதன் கூடவே சேர்த்து சிறிது துவரம்பருப்பையும் சேர்த்துக்
கொள்ளுங்கள். அது உங்களுடைய மாதவிடாயைத் தள்ளிப் போட துணை செய்யும்.
வினிகர் தண்ணீர்
அருந்துங்கள்
உங்க
மாதவிடாயை 3-4 நாட்கள் தள்ளிப் போட நினைத்தால் ஒரு கிளாஸ் தண்ணீரில் 3-4 ஸ்பூன்
வினிகர் சேர்த்து குடியுங்கள். இது உங்கள் மாதவிடாய் அறிகுறிகளை தள்ளிப் போடும்.
ஆப்பிள்
சீடர் வினிகரைத் தவிர, ஒயிட் வினிகர் குடிக்கலாமா என்று நிறைய பேருக்கு சற்தேகம்
இருக்கிறது. நாம் சமைக்கும் உணவுகளில் வினிகரைச் சேர்த்துக் கொள்கிறோமே அதேபோல
தான் இதுவும். ஆனால் மிகக் குறைந்த அளவில் தான் நேரடியாகச் சேர்த்துக் கொள்ள
வேண்டும். ஒரு 200 மில்லி தண்ணருக்கு 3 ஸ்பூன் வினிகர் அளவுக்குப் பயன்படுத்தலாம்.
கொஞ்சம் லேசான காரச்சுவையும் புளிப்புச் சுவையும் இருக்கும். தண்ணீரில் கலந்து
குடிக்கும் போது அந்த கரகரப்பு கொஞ்சம் குறைந்து விடும். இது நம்முடைய உடலைக்
குளிர்விக்கும். ஒரு வாரம் வரை இந்த முறையில் உங்களுடைய மாதவிடாயைத் தள்ளிப் போட
முடியும்.
தயாராக இருங்கள்
இருப்பினும்
எதாவது ஒரு சமயத்தில் மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் பயப்படாதீர்கள். டென்ஷன் ஆகாமல்
கீழ்க்கண்ட டிப்ஸ்களை பயன்படுத்துங்கள் எப்பொழுதும் கைவசம் பேடுகளையும்
பேண்டீஸ்களையும் தயராக வைத்துக் கொள்ளுங்கள். விசேஷ நாட்கள் போன்றவற்றில்
மகிழ்ச்சியாக இருக்க, ஆடம்பர ஆடையை அணிவதற்கு முன் ஒரு லேசான ஆடையை உள்ளே அணிந்து
கொள்ளுங்கள். தப்பித் தவறி கறைகள் பட்டாலும் புதிய ஆடையில் படாமல் காக்க உதவும்.
வயிற்று வலி இருந்தால் கை வசம் மருத்துவர் பரிந்துரைத்த வலி நிவாரணி மாத்திரைகளை
வைத்துக் கொள்ளுங்கள். உயரமான ஹீல்ஸ் அணிவதை முடிந்தவரை தவிருங்கள். ஏனெனில் இது
உங்கள் முதுகு மற்றும் கால்களுக்கு வலியை கொடுக்கலாம். இஞ்சி டீ இரத்த ஓட்டத்தை அதிகரித்து
உங்க மாதவிடாய் வலியை குறைக்க உதவும். எனவே சூடாக இஞ்சி டீ குடியுங்கள்.
இந்த
டிப்ஸ்கள் உங்களுக்்கு உதவியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். ட்ரை பண்ணி
பாருங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக