சென்னை அயனாவரம் அடுக்குமாடி
குடியிருப்பில் 7ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவியை பாலியல் வன்கொடுமை
செய்த புகாரில் ரவிக்குமார்,அபிஷேக், சுகுமாரன், ஏரோல் பிராஸ்,
முருகேசன், பரமசிவம், சுரேஷ், ராஜசேகர், தீன தயாளன், குணசேகரன், பாபு, பழனி, ராஜா,
சூர்யா, ஜெயகணேஷ், ஜெயராமன், உமாபதி ஆகிய 17 பேர் கைது செய்யப்பட்டனர்.கடந்த
2018 ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை தொடர்ந்து 6 மாதங்கள் இவர்கள்
ஒருவர் பின் ஒருவராக அந்த சிறுமியை வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இந்த
சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இது தொடர்பாக பாலியல் வன்கொடுமை
செய்ததாக 6 பேரையும், குற்றத்தை மறைத்ததாக 11 பேரையும் கைது செய்தது
போலீசார்.சிறுமியின் தாய் அளித்த புகாரில் போக்ஸோ, கொலை முயற்சி, கொலை மிரட்டல்
பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.பின்னர் இவர்கள் மீது குண்டர் சட்டம்
போடப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்,குண்டர் சட்டம் ரத்து
செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு நிலுவையில்
இருக்கும்போதே கைதானவர்களில் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாபு என்பவர்
மரணமடைந்தார்.மேலும் 16 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு
செய்யப்பட்டது.இது தொடர்பாக சென்னை சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு
நீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு மீதான விசாரணைகள்
அனைத்தும் முடிந்த நிலையில்,பிப்ரவரி 1-ஆம் தேதி மரணமடைந்த ஒருவரை தவிர மீதமுள்ள
16 பேர் மீது விசாரணை நடைபெற்றது.அதில்,16 பேரில் 15 பேர் குற்றவாளிகள்
என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குணசேகரன் தவிர மற்ற 15 பேரும் குற்றவாளிகள்
என்று அறிவிக்கப்பட்டது. . பின்னர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 15 பேருக்கு
என்ன தண்டனை என்பதை 3-ம் தேதி அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில்
இன்று வழக்கில் 15 பேருக்கும் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1)ரவிகுமார்(56) சாகும்வரை ஆயுள்
தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2) சுரேஷ்(32) சாகும் வரை ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
3) ராஜசேகர்(48) ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
4) எரால்பிராஸ்(58) 7ஆண்டு சிறை தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
5) அபிஷேக் (28) சாகும் வரை ஆயுள்
தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
6) சுகுமாரன் (60)5 ஆண்டு சிறை தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
7) முருகேசன்(54) 5 ஆண்டு சிறை தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
8)பரமசிவம் (60) 5 ஆண்டு சிறை தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
9) ஜெய்கணேஷ் (23) 5 ஆண்டு சிறை தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
10) பாபு(36) இறந்துவிட்டார்
11) பழனி(40) சாகும் வரை ஆயுள்
தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
12) தீனதயாளன்(50) 5 ஆண்டு சிறை தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
13) ராஜா (32) 5 ஆண்டு சிறை தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
14) சூர்யா(23) 5 ஆண்டு சிறை தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
15) குணசேகரன்(55) விடுதலை
விடுவிக்கப்பட்டுள்ளார்.
16) ஜெயராமன்(26) 5 ஆண்டு சிறை தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
17) உமாபதி(42) 5 ஆண்டு சிறை தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக