ரூ. 4000 கோடி மதிப்பீட்டில் சியட் டயர்
தொழிற்சாலையை முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.
கடந்த
2018 ஆம் ஆண்டு சியட் டயர் தொழிற்சாலையை தமிழகத்தில் ரூ.4,000 கோடி மதிப்பில்
அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி
முன்னிலையில் சியட் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.
இந்நிலையில்
ஸ்ரீபெரும்புதூர் அருகே மருதாமங்கலத்தில் சியட் டயர் தொழிற்சாலையை
முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.இந்த தொழிற்சாலை மூலமாக நேரடியாக 1000
பேருக்கும்,மறைமுகமாக 10,000 பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று
தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இதன்
பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,வாகன உற்பத்தியில் இந்தியாவில் முதன்மை
மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது .இரு சக்கர வாகன டயர் முதல் போர் விமான டயர்
வரை தமிழகத்தில் தயாரிக்கப்படுகிறது.இந்தியாவில் 40% டயர்கள் தமிழகத்தில் உற்பத்தி
செய்யப்படுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக