Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 27 பிப்ரவரி, 2020

44MP டூயல் செல்பீ கேமரா! மார்ச் 2 வரை வேற எந்த போனும் வாங்கிடாதீங்க!

 
Oppo நிறுவனம் அதன் Reno தொடரின் கீழ் புதிய ஒப்போ ரெனோ 3 ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை வருகிற மார்ச் 2 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

ஒப்போ நிறுவனம் வருகிற மார்ச் 2 ஆம் தேதி இந்தியாவில் அதன் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, ஒப்போ நிறுவனம் வரவிருக்கும் புதிய ரெனோ மாடலுக்கான விளம்பர பக்கத்தை உருவாக்கியுள்ளது, அதன் வழியாக ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்மற்றும் வண்ண மாறுபாடுகள் பற்றிய விவரங்களை நம்மால் அறிய முடிகிறது.

ஒப்போ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள விவரங்களின்படி, ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஆனது 64 மெகாபிக்சல் அளவிலான மெயின் கேமரா + 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா +2 மெகாபிக்சல் அளவிலான மோனோக்ரோம் லென்ஸ் என்கிற கலவையிலான க்வாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.

முன்பக்கத்தில், ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஆனது 44 மெகாபிக்சல் அல்ட்ரா-க்ளியர் சென்சார் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் எனும் டூயல் செல்பீ கேமரா அமைப்பை கொண்டிருக்கும்.

இதன் முன்பக்க கேமரா அம்சங்களில் 'டூயல் லென்ஸ் பொக்கே' பயன்முறையும் அடங்கும், இது கூர்மையான விளிம்புகள் மற்றும் மங்கலான பின்னணியை உருவாக்கும் என்று ஒப்போ கூறுகிறது. மேலும் ஒப்போ ரெனோ 3 ப்ரோவின் கேமரா அம்சங்களில் அல்ட்ரா நைட் செல்பீ மோட் பட்டியலிடப்பட்டுள்ளது, இது ஒரே நேரத்தில் பல புகைப்படங்களை எடுத்து ஒன்றிணைந்து ஒரு சிறந்த படத்தை உருவாக்கும் ஒரு அம்சம் ஆகும்.

 கேமரா விவரங்களைத் தவிர, ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஆனது அரோரா ப்ளூ, மிட்நைட் பிளாக் மற்றும் ஸ்கை ஒயிட் ஆகிய வண்ண விருப்பங்களில் இந்தியாவுக்கு வரும் என்பதையும் ஒப்போவின் விளம்பர பக்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒப்போ ரெனோ 3 ப்ரோ இந்தியா மாறுபாடு ஆனது நிலையான சீன பதிப்பிலிருந்து சற்று வித்தியாசமாக இருக்கும். ஒப்போ ரெனோ 3 ப்ரோ இந்திய வேரியண்ட் ஆனது 2எம்பி இரண்டாம் நிலை கேமராவுடன் 44 எம்பி பஞ்ச்-ஹோல் செல்பீ கேமரா அமைப்பை கொண்டிருக்கும். மறுபுறம், உள்ள சீன ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஆனது இடதுபுறத்தில் ஒரே ஒரு செல்பீ கேமராவை மட்டுமே கொண்டுள்ளது.

மேலும், சீன ஒப்போ ரெனோ 3 ப்ரோ 5ஜி ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவால் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஆனது 4ஜி ஒன்லி போனாக அறிமுகம் ஆகும்.

 மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஆனது 6.5 இன்ச் முழு எச்டி+ (2400 x 1080 பிக்சல்கள்) டிஸ்பிளேவை கொண்டிருக்கும். வன்பொருள் அம்சங்களை பொறுத்தவரை, ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஆனது இந்திய பதிப்பில் வேறு சிப்செட் இடம்பெறக்கூடும். சீன பதிப்பில் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 765 ப்ராசஸர் இடம்பெற்றது. இது மீடியா டெக் ஹீலியோ பி 95 மூலம் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரியை பொறுத்தவரை, இது 30W VOOC 4.0 பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட 4000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் Android 10 அடிப்படையிலான ColorOS 7.0 கொண்டு இயங்கக்கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக