Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 27 பிப்ரவரி, 2020

பிரபல நடிகையின் செல் நம்பரை ஆபாச தளத்தில் வெளியிட்ட டெலிவரி பாய்.!



டிகை காயத்ரி ராவின் செல் எண்ணை பாலியல் தொழிலாளி என பதிவிட்டு இணையதளத்தில் பகிர்ந்த பீட்சா டெலிவரி பாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழில் 1990 இல் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் நடித்தவர் காயத்ரி ராவ். இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாவார். தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சேத்தம்மாள் காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தேனாம்பேட்டை இ-3 காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார்.

அந்த புகாரில் '' காயத்ரி ராவ் கடந்த பிப்ரவரி 9ம் தேதி ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்திருக்கிறார். அந்த பீட்சாவை டெலிவரி செய்வதற்காக டோமினோஸ் ஊழியர் பரமேஸ்வரன் என்பவர் வந்துள்ளார். அந்த ஊழியர் தான் புறப்படுவதிலிருந்து காயத்ரி ராவ் வீட்டுக்கு வருவதற்காக அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு ரூடாக பேசியதாக கூறப்படுகிறது.

 
 இதனால் பயந்து போன காயத்ரி ராவ் அந்த நபர் வரும் வரை அமைதியாக காத்திருந்து பின்னர் பீட்சாவை டெலிவரி செய்தபோது அந்த நபரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் காயத்ரி ராவ் டெலிவரி பாயை தனது செல்போனில் தெரியாமல் படம் பிடித்தும் வைத்துள்ளார். பீட்சாவை டெலிவரி செய்து விட்டு அந்த நபர் அங்கிருந்து புறப்பட்ட நாளிலிருந்து காயத்ரி ராவுக்கு புதுபுது எண்ணிலிருந்து அழைப்புகள் வந்துள்ளன.

வாட்சப்பிலும் சிலர் ஆபாச மெசேஜுகளை அனுப்பியுள்ளனர். அதில், உங்களது எண்ணை பாலியல் தொழிலாளி பெண்ணுடையது என்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. ஆகையால் தொடர்பு கொண்டுள்ளேன் என ஒருவர் கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியான காயத்திரி ராவ் சக்திவேல், சுந்தரம், மகேஸ்வரன் ஆகிய மூன்று பேருடைய செல்போன் எண்ணை பதிவு செய்துகொண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் அந்த மூன்று பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு நேரில் வர அழைத்தனர். அவர்களை விசாரித்ததில் சம்பவம் அன்று பீட்சா டெலிவரி செய்த பரமேஸ்வரன்தான் காயத்ரியின் செல்போன் எண்ணை வாட்சப்பில் உள்ள ஆபாச குழுக்களுக்கு அனுப்பி வைத்ததோடு, வலைத்தளத்திலும் ஐட்டம் எண் என்று பகிர்ந்துள்ளார் என்று தெரிய வந்தது. இதையடுத்து பரமேஸ்வரனின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக