Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 27 பிப்ரவரி, 2020

பெண்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்த ஆட்டோ ஓட்டுநர் கைது!



சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் வினோத். ஆட்டோ ஓட்டுநரான இவர் அப்பகுதியில் உள்ள குடிசை குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவர் மீது ஏற்கெனவே அப்பகுதி பெண்களிடம் சிலுமிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக குற்றசாட்டுகள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் பெண் ஒருவர் குளிக்கும் போது வினோத் எட்டிப்பார்த்தால் அப்பெண் கூச்சலிட்டுளார். இதை கேட்டு அப்பெண்ணின் தாய் ஓடி வந்து பார்த்தபோது கையில் செல்போனுடன் வினோத் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் பெண்ணின் தாய் சத்தம் போட்டதால் அப்பகுதியில் இருந்தவர்கள் வினோத்தை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரிடம் இருந்த செல்போனை வாங்கி பார்த்தபோது அதில் அந்த பெண் உள்ளிட்ட மொத்தம் 18 பெண்கள் குளிக்கும் வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதில் மற்றொரு அதிர்ச்சி என்னவென்றால், வினோத் தனது உறவினர் பெண்களையும் விட்டுவைக்கவில்லை. சகோதரிகளாக பழகி வந்த பெண்கள் குளிக்கும்போதும், ஆடைகள் கலையும் போதும் ரகசியமாக வீடியோவும், புகைப்படமும் எடுத்து வைத்திருந்த வினோத்தை பாதிக்கப்பட்டவர்கள் அயனாவரம் கே2 காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று புகார் அளித்தனர்.

புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் வினோத்தை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக