Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 10 பிப்ரவரி, 2020

ரூ.499 அறிமுகம்; ஆஹா! சொல்ல வைக்கும் நன்மைகள் & வேலிடிட்டி!

வோடபோன் நிறுவனம் ரூ.499 என்கிற புதிய ப்ரீபெயிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது மற்றும் அதன் ரூ.555 ப்ரீபெயிட் திட்டத்தின் சிறிய மாற்றம் ஒன்றையும் நிகழ்த்தியுள்ளது.


வோடபோன் நிறுவனம் இந்தியாவில் தனது வாடிக்கையாளர்களுக்காக ரூ.499 எனும் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர, வோடாபோன் தனது ரூ .555 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியையும் அதிகரித்துள்ளது.

ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்!

அறிமுகமான புதிய ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை, இது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. தவிர தேசிய ரோமிங் நன்மையையும் வழங்குகிறது. அதாவது எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பை இந்த பேக் வழங்குகிறது.

 கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, இந்த ரூ.499 ஆனது ZEE5 மெம்பர்ஷிப் உடன் வோடபோன் ப்ளே சந்தாவையும் வழங்குகிறது. இந்த ரூ.499 பேக் ஆனது பெரும்பாலான வட்டங்களில் 70 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டிருக்க, பீகார் போன்ற சில வட்டங்களில் 60 நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்குகிறது. மேலும் இந்த பேக் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது என்று டெலிகாம் டாக் தெரிவித்துள்ளது.

ரூ.555 ப்ரீபெய்ட் திருத்தம் மற்றும் நன்மைகள்!

திருத்தப்பட்ட ரூ.555 ப்ரீபெய்ட் திட்டத்த்தை பொறுத்தவரை, வோடாபோன் நிறுவனம் இதன் வேலிடிட்டியை அதிகரித்துள்ளது. இந்த திட்டம் இப்போது 77 நாட்கள் செல்லுபடியாகும். முன்னதாக, இந்த ப்ரீபெய்ட் திட்டம் 70 நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்கியது.

நன்மைகளை பொறுத்தவரை, ரூ.555 பேக் ஆனது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளைக்கு 1.5 அளவிலான ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மை, வோடபோன் ப்ளே மற்றும் ஜீ 5 சந்தா போன்றவைகளை வழங்குகிறது.

வோடபோன் ரெட் பிராண்டிங்கின் கீழ் ஐடியா பயனர்கள்!

இதற்கு முன்னதாக, வோடபோன் ஐடியா தனது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் அனைவரும் வோடபோன் ரெட்டின் கீழ் இணைக்கப்படுவதாக அறிவித்தது. இதன் மூலம், வோடபோன் மற்றும் ஐடியா போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் இருவரும் வோடபோன் ரெட் பிராண்டிங்கிற்கு மாற்றப்படுவார்கள்.

இந்த முயற்சி ஆரம்பத்தில் மும்பை வட்டத்தில் வெளிவரும் என்றும், பின்னர் அடுத்த சில மாதங்களில் படிப்படியாக அனைத்து வட்டங்களுக்கும் கொண்டு வரப்படும் என்றும் வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வோடபோன் 649 பிளான் நிறுத்தப்பட்டது!

சமீபத்தில், வோடபோன் நிறுவனம் இந்தியாவில் 649 ஐபோன் ஃபாரெவர் போஸ்ட்பெய்ட் திட்டத்தை நிறுத்தியது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

வோடாபோனின் 649 ஐபோன் ஃபாரெவர் திட்டமானது அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்பு, 90 ஜிபி டேட்டா, 200 ஜிபி வரை டேட்டா ரோலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்கியது.

தவிர ரூ.999 மதிப்புள்ள இலவச அமேசான் ப்ரைம் சந்தா, ஒரு வருடத்திற்கான வோடபோன் ப்ளே மெம்பர்ஷிப், மொபைல் ஷீல்ட் மற்றும் ZEE5 பிரீமியம் சந்தா ஆகிய நன்மைகளையம் வழங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக