எஸ்.சி.,
எஸ்.டி., சட்டத்திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வழங்கியுள்ளது.
கடந்த
2018 ஆம் ஆண்டு மத்திய அரசு எஸ்.சி/ எஸ்.டி சட்டதிருத்தத்தை கொண்டு
வந்தது.அந்த சட்டத்தில், எஸ்.சி/ எஸ்.டி பிரிவை சேர்ந்தவர்கள் மீது சாதி வாரியாக
ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர் உடனடியாக கைது
செய்யப்படவேண்டும். அவர்களுக்கு ஜாமீனில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த
சட்டத்திற்கு அதிகமான எதிர்ப்புகள் வந்தன. அதாவது, இந்த சட்டத்தை ஒருவர் தவறாக
பயன்படுத்தி இன்னொருவரை பழிவாங்கும் நோக்கில் பயன்படுத்த முடியும் என்பதால்
இச்சட்டத்தை மறுசீராய்வு செய்யவேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
எனவே
இந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை
இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் ,திருத்த சட்டத்துக்கு எதிரான மனுவை
தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.மேலும் இந்த திருத்த சட்டம் செல்லும் என்று
உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக