குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் 68 மாணவிகளிடம் மாதவிடாய் வந்துள்ளதா என ஆடையைக் கழற்றி சோதனை செய்த கல்லூரி முதல்வர் உள்படக் கல்லூரி ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்டத்தில்
உள்ள ஸ்ரீ சாஹ்ஜானாந்து பெண்கள் கல்லூரியில் கல்வி கற்று வரும் மாணவிகள் 68 பேரிடம்
மாதவிடாய் நிலை குறித்து அறியக் கல்லூரி நிர்வாகம் முயன்றுள்ளது. இதற்காக 4 கல்லூரி
ஊழியர்களைக் கொண்டு கல்லூரி முதல்வர், வலுக்கட்டாயமாக மாணவிகளின் ஆடைகளை அகற்றி சோதனை
செய்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து கல்லூரி
முதல்வர் உள்பட 4 கல்லூரி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ சாஹ்ஜானாந்து பெண்கள் கல்லூரி முதல்வர் ரீடா ராணிகா(38), ஒருங்கிணைப்பாளர் அனிதா சோஹான், விடுதி மேற்பார்வையாளர் ராமிலா ஹிரானி, உதவியாளர் நயானா கோராசியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸார் இவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ரகசிய புகாரை தொடர்ந்து குறிப்பிடப்பட்ட கல்லூரிக்கு விரைந்த சிறப்பு போலீஸார் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்தியபோது, குற்றம் சுமத்தப்பட்டவர்களைப் பிப்ரவரி 19ஆம்(நாளை) தேதி வரை போலீஸ் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

நீதிமன்றத்தில் குஜராத் போலீஸார், “எதற்காக மாணவிகளின் ஆடைகளைக் கழற்றி சோதனை செய்தனர்? இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை விசாரிக்க அனுமதி வேண்டும்” எனக் கூறியதைத் தொடர்ந்துதான் போலீஸ் விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாகத் தேசிய பெண்கள் ஆணையத்தின் நிர்வாகிகள் கல்லூரி வளாகத்தில் வைத்துப் பாதிக்கப்பட்ட மாணவிகளில் 44 பேரிடம் விசாரணை நடத்தியது. இதுபோன்ற கொடூர தாக்குதலுக்கு ஆளாக்கப்படும் மாணவிகள் குறித்து பெண்கள் ஆணையம் வேதனை தெரிவித்தது.
கல்லூரி இழைத்த இந்த சித்திரவதையால், பெரும்பாலான மாணவிகள் அந்த கல்லூரியிலிருந்து வெளியேறிவிட்டனர் எனக் கூறப்படுகிறது. அரசு பெண்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைக்கு எதிரான இந்த செயல் நாட்டில் பல்வேறு தரப்பினரிடையே கண்டனத்தைப் பெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக