தலைதூக்கும் வித்தியாசமான சேலஞ்ச்
தற்போது
வித்தியாசமான சேலஞ்ச் ஒன்று தலை தூக்கி வருகிறது. இந்த சேலஞ்ச் என்பது தன்னை
வருத்திக் கொள்வது என்பதை தாண்டி, உடன் இருப்பவர்களை தள்ளிவிடுவது போல் இந்த
சேலஞ்ச் அமைந்துள்ளது. தள்ளிவிடுவது என்றால் சாதாரனமாக இல்லை.
ஸ்கல் பிரேக்கர்
சேலஞ்ச்
ஒருவரை
நடுவில் நிறுத்தப்பட்டு அவரை குதிக்க வைக்கிறார்கள். அவர் குதிக்கும் நேரத்தில்
அதாவது அந்த இரண்டு கால்களும் மேற்பரப்பில் இருக்கும் போது காலை
தட்டிவிடுகிறார்கள். அவர் பின் தலை கீழே விழும் வகையில் இந்த சேலஞ்ச் உள்ளது.
இதற்கு பேர் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச் அதாவது தமிழில் மண்டை ஓடு உடைக்கும் சேலஞ்ச்
என்று அர்த்தம்.
மாணவர் மத்தியில்
வேகமாக பரவும் விளையாட்டு
இது தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஆபத்தான இந்த விளையாட்டு மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவி வருவதால் பெற்றோர்கள் மத்தியில்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மாதிரியான சேலஞ்சுகளில் குழந்தைகள் ஈடுபடுவதால், அவர்கள்
உடலளவிலும் மனதளவிலும் பாதிப்படைவார்கள் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
வேண்டாம்.,
வேண்டாம்., விளையாட்டுக்கு கூட வேண்டாம்
மேலும்,
இந்த சேலஞ்சை, விளையாட்டாக கூட யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்றும், இதுபோன்ற
விளையாட்டுகளில் குழந்தைகள் ஈடுபடாமல் தடுக்குமாறு பெற்றோர்களுக்கும் வலியுறுத்தி
சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த செயலில்
ஒருவர் கோமா போன்ற பெரிய வியாதியில் இருந்து உயிருக்கு ஆபத்து என்ற நிலை வரை
ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக