புளூடூத் வயர்லெஸ் ஹெட்போன்ஸ் பயன்படுத்தும்
பயனரா நீங்கள்? அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் எப்போதும் புளூடூத் மோடு சேவை ஆன்-ல்
உள்ளதா? அப்படியானால் இந்த பதிவை உடனே படியுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள
தரவுகள், புளூடூத் மூலம் திருடப்பட வாய்ப்புள்ளது என்று அனைத்து ஆண்ட்ராய்டு
பயனர்களுக்கும் புதிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது.
புளூடூத்
மூலம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஆபத்து
அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும்
டேப்லெட்டுகளின் உரிமையாளர்களின் கவனத்திற்கு, இனி உங்கள் சாதனைகளில் இருக்கும்
புளூடூத் சேவையை நீங்கள் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், புளூடூத் மூலம்
ஆண்ட்ராய்டு பயனர்களுக்குப் பாதுகாப்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று
சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. தனிப்பட்ட நபரின் தரவு அல்லது தீங்கு
விளைவிக்கும் தீம்பொருளை செலுத்த இது அனுமதிக்கும்.
புளூடூத் பாதிப்பு CVE-2020-0022
புளூடூத் மூலம் பாதிப்பை ஏற்படுத்தும்
இந்த பாதிப்பு CVE-2020-0022 என அழைக்கப்படுகிறது. மேலும், இந்த பாதிப்பு
ஆண்ட்ராய்டு 8 ஓரியோ (Oreo) மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை (Pie) இயங்குதளத்தில்
இயங்கும் சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹேக்கர்கள், ஆர்பிட்டரி கோடுகளை புளூடூத் மூலம் சாதனத்தில் செலுத்திப் பாதிப்பை
ஏற்படுத்துகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய
செக்யூரிட்டி அப்டேட் உங்கள் போனில் உள்ளதா?
ஆண்ட்ராய்டு 8 ஓரியோ (Oreo) மற்றும்
ஆண்ட்ராய்டு 9 பை (Pie) இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன் பயனர்கள் உடனே இதைக்
கவனத்தில் கொள்ளுங்கள். உடனே உங்கள் ஸ்மார்ட்போனில் புதிய பாதுகாப்பு அப்டேட்
பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதா என்று செக் செய்யுங்கள். உங்கள் ஸ்மார்ட்போன்
செட்டிங்ஸ் சென்று புதிய செக்யூரிட்டி அப்டேட் 2020-02-01 அல்லது 2020-02-05
தேதிகளில் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
ஆண்ட்ராய்டு
10 பயனர்களுக்கு பாதிப்பு உண்டா?
இந்த புதிய அப்டேட் உங்கள்
ஸ்மார்ட்போனில் அப்டேட் செய்யப்பட்டிருந்தால், உங்கள் ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக
உள்ளது என்பதில் சந்தேகம் வேண்டாம். ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் இயங்கும்
ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த கவலை வேண்டாம். உங்கள் சாதனம் இந்த CVE-2020-0022
பாதிப்பிற்கு உள்ளாக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10
இயங்குதளம் பாதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசியமாக
இருக்கும்போது மட்டும் ப்ளூடூத் பயன்படுத்துங்கள்
ஸ்மார்ட்போன் பயனர்கள், இந்த புதிய
ஆண்ட்ராய்டு பாதுகாப்பு அப்டேட் இணைப்புகளைக் கைமுறையாக நிறுவ முடியாது. சாதன
உற்பத்தியாளர், உங்கள் ஸ்மார்ட்போனிற்கான புதுப்பிப்பை அனுப்பும் வரை நீங்கள்
காத்திருக்க வேண்டும். இந்த இடைவெளியில், புளூடூத் கண்டிப்பாக அவசியமாக இருக்கும்போது
மட்டுமே அதை இயக்க பரிந்துரைக்கப்படுகிறது.
கேபிள்
ஹெட்போன்ஸ் பயன்படுத்துங்கள்
பெரும்பாலான பயனர்கள் புளூடூத்
இயக்கப்பட்ட ஹெட்ஃபோன்களை பயன்படுத்துகிறார்கள், அதற்குப் பதிலாக அப்டேட்
உங்களுக்குக் கிடைக்கும் வரை கேபிள் மூலம் ஹெட்போன்களை பயன்படுத்தலாம். அதேபோல்,
முடிந்தால் உங்கள் சாதனத்தைக் கண்டுபிடிக்க முடியாதபடி வைத்திருக்கவும் நிபுணர்கள்
பரிந்துரைக்கின்றனர்
புளூடூத்
விசிபிலிட்டி
அதாவது புளூடூத்
இயக்கப்பட்டிருந்தாலும், மூன்றாம் தரப்பு சாதனங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது
டேப்லெட்டைக் கண்டுபிடிக்க முடியாத படி புளூடூத் விசிபிலிட்டி-ஐ அனைத்து வைக்கப்
பரிந்துரைக்கப்படுகிறது. தேவையில்லாத நேரத்தில் உங்கள் ப்ளூடூத் அம்சத்தை
பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக