தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மின்னணு டோல்
பிளாசாக்களில் ஃபாஸ்டேக் இல்லாமல், ஃபாஸ்டேக் பாதைகளில் நுழைந்த 18 லட்சம் வாகன
ஓட்டுநர்களிடம் இருந்து இதுவரை சுமார் 20 கோடி ரூபாய் வரை அபராதம்
வசூலித்துள்ளதாகத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஞாயிற்றுக்கிழமை
தெரிவித்துள்ளது.
ஃபாஸ்ட்டேக்
இல்லாமல், ஃபாஸ்டாக் பாதையில் நுழைந்தால் அபராதம்
டிசம்பர் மாதம் இந்தியா முழுவதும்
மின்னணு கட்டண வசூல் திட்டத்தைச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்
நடைமுறைப்படுத்தியது. பாஸ்ட்டேக் இல்லாமல் ஃபாஸ்டாக் பாதைகளில் நுழையும்
வாகனங்களிடமிருந்து இரட்டை கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
முன்பே கூறியிருந்தது. அதனைத் தொடர்ந்து அபராதத்தையும் வசூலித்து வருகிறது.
ஃபாஸ்டேக்
அபராதத்தை அமல்படுத்திய NHAI
தற்போதுள்ள ஃபாஸ்டேக் பயனர்களுக்கு
முக்கியத்துவம் கொடுப்பதற்காகவும், தவறிழைப்பவர்களைத் தடுப்பதற்காகவும், தேசிய
நெடுஞ்சாலை பயணிகளிடம் ஃபாஸ்டேக் பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்கவும், தேசிய
நெடுஞ்சாலை ஆணையம் இந்த ஃபாஸ்டேக் அபராதத்தை அமல்படுத்தியுள்ளது என்று
தெரிவித்துள்ளது.
இருமடங்கு
கட்டணம் வசூலிக்கப்பட்டும்
இதனைத் தொடர்ந்து, தேசிய
நெடுஞ்சாலையில் உள்ள ஃபாஸ்டேக் பாதையில் நுழையும் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு
வசூலிக்கப்படும் அசல் கட்டணத்தை விட இருமடங்கு வசூலிக்கப்பட்டு வருகிறது என்று
NHAI அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இப்போது வரை, இந்தியா முழுவதும் மொத்தம்
18 லட்சம் வாகன ஓட்டுநர்களிடமிருந்து இரட்டை கட்டண அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சுமார்
20 கோடி ரூபாய் வசூல்
ஃபாஸ்டாக் பாதையில் ஏற்படும் தேவையற்ற
ஆக்கிரமிப்புகளை இந்த அபராதம் இயல்புநிலைக்கு மாற்றியுள்ளது. இதன் விளைவாக
ஃபாஸ்டாக் பாதையில் தேவையற்ற நெரிசலும் தவிர்க்கப்பட்டுள்ளது என்று தேசிய
நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 20 கோடி ரூபாய் வரை இரட்டை
கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4
மில்லியனுக்கும் அதிகமான ஃபாஸ்டேக்
அதேபோல், பல பாயிண்ட் ஆன் சேல் (Point
of Sale) விற்பனை இடங்கள் மூலம் சுமார் 1.55 கோடிக்கு மேற்பட்ட ஃபாஸ்டேக்குகள்
விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றும், இதன் விளைவாக, ஃபாஸ்டாக் பரிவர்த்தனை ஒரு
நாளைக்கு 4 மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது என்றும் அதன்
அறிக்கையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது.
இலவசமாக
FASTag பெற்றுக்கொள்ளலாம்
இந்த டிஜிட்டல் அமைப்பு நாடு முழுவதும்
நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான தெளிவான அறிகுறியாக, ஃபாஸ்டேக்கின் விற்பனை
இருக்கிறது என்று NHAI தெரிவித்துள்ளது. எந்தவொரு சாலை பயனர்களும் வாகனத்தின்
செல்லுபடியாகும் பதிவுச் சான்றிதழ் (ஆர்.சி) உடன் அங்கீகரிக்கப்பட்ட பாஸ்ட்டேக்
மையங்களிலிருந்து இலவசமாக FASTag-ஐ பெற்றுக்கொள்ளலாம்.
பிப்ரவரி
15 முதல் 29, 2020 வரை தள்ளுபடி
தேசிய நெடுஞ்சாலை கட்டண டோல்
பிளாசாக்களில், ஃபாஸ்டாக் வழியாகப் பயனர் கட்டணத்தின் டிஜிட்டல் சேகரிப்பை மேலும்
அதிகரிப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சமீபத்தில் பாஸ்ட்டேக் மீதான
கட்டணத்தில் ரூ.100 கட்டணத்தைப் பிப்ரவரி 15, 2020 முதல் பிப்ரவரி 29, 2020 வரை
தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக