Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

விவசாயிகள்!

Image result for விவசாயிகள்!

ரு ஊரில் விவசாயிகள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது வானம், மழை வருவது போல இருட்டிக் கொண்டு இருந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.

அதனால் பயந்து போன விவசாயிகள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர். வெகுநேரமாகியும் மின்னலும், இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரமும் அதிகரித்துக் கொண்டே போனது.

பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம் என்று கூறினான். ஆனால் மற்றவர்கள் இதனை ஆமோதித்தார்கள்.

இத்தனை பேரில் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடலாம் என்று முடிவு செய்தார்கள். அதன்படி அனைவரும் தத்தம் தொப்பிகளைக் கையில் பிடித்துக் கொண்டு தொப்பியை மழையில் நீட்டலாம் என்று முடிவு செய்தனர். அதுபோல அனைவரும் தத்தம் தொப்பிகளை மழையில் நீட்டினர்.

பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் அடித்தது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது. அதனைக் கண்ட மற்ற விவசாயிகளும் இவன்தான் அந்த பாவி. இவனை முதலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் என்று கத்திக் கொண்டே அவன் மேல் பாய்ந்தனர்.

அந்த விவசாயி கெஞ்சிக் கதறினார், நான் பாவி இல்லை அப்பாவி என்று மன்றாடினார். மற்றவர் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவரை வற்புறுத்திக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர். அவர் கதறிக் கொண்டே மழையில் ஓடினார்.

அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் தாக்கி இடி இடித்தது. ஓடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டார். சற்று நேரத்தில் நிலைக்குத் திரும்பி மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தார். மண்டபத்தில் இடி விழுந்து நொறுங்கிக் கிடந்தது.

ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும் அவரை வெளியே தள்ளியதால் பாதுகாப்பை இழந்து பரிதாபமாகக் கருகி இறந்தார்கள்.

தத்துவம் :

நாம் எந்த ஒரு முடிவை எடுக்கும் முன்பு நன்கு யோசனை செய்து எடுக்க வேண்டும். எடுத்த பிறகு வருந்தினால் அதில் பயனில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக