சனி மேடு என்பது பாம்பு விரலுக்கு கீழே இருக்கும். சனி மேடு மற்ற மேடுகளை விட உயர்ந்து காணப்பட்டால் பொறுமைசாலிகளாகவும், கடின உழைப்பாளிகளாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும், சிறந்த அறிவாளிகளாகவும் இருப்பார்கள்.
இவர்களின் வாழ்வில் பெரும் வெற்றியோ, பெரும் வீழ்ச்சியோ இருக்காது.
எல்லாம் விதியினாலேயே நடக்கிறது என்று நம்புவார்கள்.
இவர்களுக்கு விளையாட்டு மற்றும் பொழுதுப்போக்கில் ஆர்வம் இருக்காது.
பிறரின் குறைகளை தட்டிக்கேட்க தயங்கமாட்டார்கள். எளிமையானவர்கள். பிடிவாத குணம் உடையவர்கள்.
மற்றவர்களின் விமர்சன பேச்சுகளை கண்டுகொள்ள மாட்டார்கள். சட்ட திட்டங்களுக்கு மட்டும் கட்டுப்படுபவர்கள்.
இவர்களுக்கு அதிகமான நண்பர்கள் இருக்க மாட்டார்கள் எனினும் பழகியவர்களுக்காக எதையும் செய்வார்கள்.
பிறரின் அறிவுரையையும், தலையீட்டையும் விரும்பமாட்டார்கள். தனிமையை பெரிதும் விரும்புபவர்கள்.
மனதளவிலும், உடலளவிலும் உறுதி கொண்டவர்கள். எந்த முடிவு எடுப்பதிலும் தயக்கம் காட்டுவார்கள்.
சனி மேடு இடம் பெயர்ந்து ஒழுங்கில்லாமல் உயர்ந்து இருந்தால் அநாவசியமான விரோதங்களை உண்டாக்குகிறவர்களாகவும், ஆத்திரக்காரர்களாகவும், ஏமாற்றுகிறவர்களாகவும், மந்திரவாதிகளாகவும் இருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக