Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 10 பிப்ரவரி, 2020

திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில்


Image result for திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்
திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில் ஆகும். இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தல வரலாறு :
சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார். வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர்.
இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரர்கள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். அச்சமயம் ஒவ்வொரு உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று நினைத்து கர்வம் கொள்ளத் தொடங்கின.
தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்து, சிவபெருமான் வில், அம்பு என எதையும் பயன்படுத்தாமல் அசுரர்களை பார்த்து சிரித்தார். அசுரர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்களின் உதவி இல்லாமல் அசுரர்களை அழித்ததை கண்ட தேவர்கள் தலைகுனிந்தனர். இச்சம்பவம் நடந்த இடம் தான் திருவதிகை.
கோவில் அமைப்பு :

 கோவில் சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் 7 நிலைகளுடனும், 7 கலசங்களுடனும் காட்சி தருகிறது. கோவிலுக்கு முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இதைத் திருநீற்று மண்டபம் என்றழைக்கிறார்கள்.
 இறைவன் தேரில் வந்ததால் இந்த திருக்கோவிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.
 இத்திருக்கோவிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சை பெரிய கோவிலை கட்டினார். திவதிகை கோவிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இக்கோவில் கட்டப்பட்டது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கம் இது தான்.

பிரார்த்தனை :
இந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம் அழியும்.
 இங்குள்ள ஈசனை வழிப்பட்டால் மனநிம்மதி கிடைக்கும். உடல் சார்ந்த எந்தவிதமான நோயாக இருந்தாலும் தீரும்.
 அம்பாள் சன்னிதி சுவாமிக்கு வலப்புறம் உள்ளது தனிச்சிறப்பாகும். இதனால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தித்தால் உடனடியாக திருமணம் நடைபெறும் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும்.
 குழந்தை இல்லாதவர்கள் இந்த ஈசனை வழிப்பட்டால் குழந்தை பேறு கிட்டும் மற்றும் நல்ல வேலை மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் பெருகவும் மக்கள் இந்த சிவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக