பிரியாணி
முதல் நாம் பயன்படுத்தும் பற்பசை வரை கிராம்பு பயன்படுகிறது. இந்த தம்மா துண்டு கிராம்பில்
நீங்கள் எதிர்பாராத நன்மைகள் இருக்கின்றன. அவை எவை என இங்கே பார்க்கலாம்.
கிராம்பு
கிராம்பு
ஒரு பூவின் பொட்டு இவை நாம் பயன் படுத்தும் பற்பசைகளில், சோப்புகள், அழகு சாதனப்
பொருட்கள், நறுமணப் பொருட்கள் என்று எல்லாத் துறைகளிலும் பயன்படுகிறது. பல் வலி
போகனுமா தம்மா துண்டு கிராம் பை வாயில் ஒதுக்கினால் போதும். ஆண்களுக்கு விந்து
வெளியேறுவதில் பிரச்சனை இருந்தால் கூட கிராம்பை கொண்டு சரி செய்யலாம். இப்படி
நிறைய நன்மைகளையும் கிராம்பு நமக்கு வழங்குகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும்
எண்ணெய்களும் நறுமணப் பொருட்களாக சரும க்ரீம்களாக பயன்படுகின்றன. இப்படி இவை தரும்
நன்மைகளை பற்றி இங்கே பார்ப்போம்
கிராம்பு எண்ணெய்
விந்தணுக்கள்
முன்கூட்டியே வெளியேறுவதை தடுக்க கிராம்பு எண்ணெய்யை ஆண்கள் உடலுறுவிற்கு முன்பு
தடவலாம். இது பயனைத் தரும். உடலுறவுக்கு முன்னால் கிராம்பு எண்ணெயை ஆண்கள்
தங்களுடைய பிறப்புறுப்பில் தடவி வருவது நிறைய நன்மைகளைத் தரும். குறிப்பாக, விந்து
முந்துதல், விந்து நீர்த்துப் போதல் போன்ற பிரச்சினைகளைச் சரிசெய்ய நல்ல தீர்வாக
இந்த கிராம்பு எண்ணெய் அமையும். விறைப்புத் தன்மைக் கோளாறு பிரச்சினைக்கும் இந்த
கிராம்பு எண்ணெய் நல்ல தீர்வைத் தரும். அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதையும்
தவிர்த்துவிடுவது நல்லது.
கிராம்பின்
ஊட்டச்சத்து அளவுகள்
கிராம்பில்
யூஜெனோல் என்ற பொருள் 70 - 90% உள்ளது. அசிடைல் யூஜெனோல், வெண்ணிலின், டானின்கள்
மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற பிற எண்ணெய் பொருட்கள் உள்ளன. இதனால் தான் இதை
பற்பசைகளிலும் பல் சிகிச்சை அளிக்கும் போது அனஸ்தீசியா மருந்தாக கொடுக்கின்றனர்.
அதே மாதிரி இருமல், காய்ச்சல், சலதோஷத்தையும் போக்க கூடியது. 100 கிராம்
கிராம்பில் 274 கலோரிகள் 13 கிராம் கொழுப்பு 277 மி. கி சோடியம் 1,020 மி. கி
பொட்டாசியம் 66 கிராம் கார்போஹைட்ரேட் 6 கிராம் புரதம் வைட்டமின்கள் மற்றும்
தாதுக்கள் 3% வைட்டமின் ஏ 0.63 கால்சியம் 65% இரும்பு 20% வைட்டமின் பி -6 64% மெக்னீசியம்
உள்ளன.
கல்லீரல் பாதுகாப்பு
கிராம்பில்
அதிக ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் கல்லீரலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற மாற்றத்தை
குறைக்கிறது. இது மெட்டா பாலிக் வேலையை அதிகரித்து கல்லீரலில் கொழுப்புகள்
தங்குவதை அதிகரிக்கிறது. டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்கிறது இன்சுலின்
அளவை கட்டுப்பாட்டில் வைத்து இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகாமல் தடுக்கிறது.
இதனால் டயாபெட்டீஸ் நோயாளிகள் கிராம் பை அளவோடு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வயிறு ஆரோக்கியம்
வயிற்று
போக்கு, குமட்டல், வாந்தி, சீரணமின்மை, வாயுத் தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல்
போன்ற நோய்களை சரி செய்து வயிறு, குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. நோயெதிப்பு
சக்தியை அதிகரிக்கிறது இது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை
அதிகரித்து நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் எந்த நோய்க் கிருமிகளும்
நம்மை அண்டாமல் காக்கிறது.
வாய் மற்றும் பற்கள்
ஆரோக்கியம்
இது
ஒரு வலி நிவாணியாகவும் ஆன்டி செப்டிக் மருந்தாகவும் செயல்படுகிறது. ஈறு அழற்சி
மற்றும் பீரியண்டோன்டிடிஸ் போன்ற பாதிப்புகளை குணப்படுத்த கிராம்பு உதவுகிறது.
பல்வலி இருக்கும் போது இந்த கிராம்பை அந்த இடத்தில் அழுத்தி வைத்தால் வலி
குறையும். கிராம்பு எண்ணெய் யும் பல் வலி போக்க சிறந்தது.
வாய்
துர்நாற்றம் இருப்பவர்கள் கிராம் பை எடுத்துக் கொள்ளலாம். இதன் நறுமணம் வாய்
துர்நாற்றத்தை போக்குவதால் டூத்பேஸ்ட் போன்றவற்றில் பயன்படுகிறது. இதிலுள்ள
யூஜெனோல் அழற்சியால் ஏற்படும் வீக்கம் போன்ற எடிமா பாதிப்புகளை போக்குகின்றன. இது
ஒரு வலி நிவாரணி மாதிரி செயல்படுகிறது.
வலிமையான எலும்பு
யூஜெனோல்,
ஃபிளாவோன்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஐசோஃப்ளேவோன்கள் சேர்ந்து இயற்கையாகவே
ஹைட்ரோ-ஆல்கஹால் சாறுகளை கொடுக்கிறது.இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கிறது .
எனவே கீழ்வாதம் போன்ற ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு நீங்கள் கிராம்பை பயன்படுத்தலாம்.
தலைவலி தீர
யுனானி
போன்ற பண்டைய மருத்துவத்தில் கிராம்பு தலைவலியை குணப்படுத்த பயன்படுகிறது.
கிராம்பு எண்ணெய்யை தலையில் தடவுவது, பால், உப்பு போன்றவற்றில் கிராம்பு போட்டு
குடிப்பது உங்க தலைவலியை போக்கும்.
சீரண சக்தியை
மேம்படுத்துதல்
வயிற்றில்
எரிச்சல், வாய்வு, குமட்டல் மற்றும் டிஸ்ஸ்பெசியா போன்ற பிரச்சினைகளையும் போக்க
கிராம்பு உதவுகிறது. இது சீரண என்சைம்யை சுரக்க செய்து சீரண சக்தியை மேம்படுத்துகிறது.
இதை தேனுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.
நுரையீரல் புற்றுநோயை தடுத்தல்
கிராம்பில்
ஆரம்ப நிலையிலேயே நுரையீரல் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் உள்ளது என்று ஆய்வுகள்
தெரிவிக்கின்றன. கீமோ தடுப்பு என்ற பெயரில் இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் செய்து
வருகிறார்கள்.
ஆன்டி பாக்டீரியல் தன்மை
கிராம்பு
மற்றும் அதன் எண்ணெய் பாக்டீரியா கிருமிகளை எதிர்த்து போராட கூடியது. காலாராவை
ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்குமா என்பது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
கிராம்பு மருந்துகளை
எடுப்பதற்கு முன் கவனத்தில் வைக்க வேண்டியவை
உங்களுக்கு
கிராம்பு ஒவ்வாமை இருந்தால் பயன்படுத்தாதீர்கள் கிராம் பை சாப்பிடுவது அல்லது
கிராம்பு எண்ணெய்யை சருமத்தில் தடவுவது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு
செய்யுங்கள். கல்லீரல் நோய் ஹீமோபிலியா போன்ற இரத்தப்போக்கு அல்லது இரத்த உறைதல்
கோளாறு;நோயெதிப்பு சக்தி பலவீனம் அடைதல் அல்லது உணவு அழற்சி இருப்பவர்கள் இதை
எடுக்க வேண்டாம். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே
கிராம்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இது வயிற்றில் வளரும் குழந்தையை பாதிக்க
கூடும். அதே மாதிரி தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் இதை பயன்படுத்த வேண்டாம்.
பயன்படுத்தும் முறை
இதை
மாத்திரை வடிவில் எடுப்பதாக இருந்தால் ஆயுர்வேத மருத்துவரிடம ஆலோசனை பெற்று
கொள்ளுங்கள் அதே மாதிரி மாத்திரை மருந்து லேபிளில் கொடுக்கப்பட்ட கால அளவுகள் வரை
மட்டுமே பயன்படுத்துங்கள். விந்தணு செயல்பாட்டிற்கு பயன்படுத்தினால் ஆணுறுப்பின்
மேல் தோலில் மட்டும் உடலுறவு கொள்வதற்கு 1 மணி நேரம் முன்பு பயன்படுத்துங்கள். அதே
மாதிரி பிறகு சுத்தமாக கழுவி விடுங்கள். ஒரே நேரத்தில் கிராம்பு மாத்திரை க்ரீம்,
டீ என்று பயன்படுத்தாதீர்கள். இது அளவு அதிகமாக்கி பாதிப்பை உண்டாக்கும். தோலுக்கு
மேற்பூச்சாக பயன்படுத்தும் கிராம்பு க்ரீமை சாப்பிடாதீர்கள். தப்பித் தவறி
நேர்ந்து விட்டால் உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது. எதாவது பல் அறுவை
சிகிச்சை செய்து இருந்தால் கிராம்பை 2 வாரத்திற்கு எடுக்க வேண்டாம். ஏனெனில் இவை
இரத்தம் உறைதல் மற்றும் இரத்தக் கசிவை அதிகரித்து விடும். ஈரப்பதம், சூரிய
வெளிச்சம் இல்லாத அறை வெப்பநிலையில் கிராம்பு பொருட்களை வைக்க வேண்டும். அளவு
மருந்து தவறி விட்டால் என்ன செய்வது கிராம்பு மருந்தை எடுத்துக் கொள்ளும் போது ஒரு
நாளைக்கு எடுக்க தவறி விட்டால் விட்டு விடுங்கள். அதையும் சேர்த்து கூடுதலாக
எடுக்க கூடாது.
அளவு அதிகமானால் என்ன
செய்வது?
கிராம்பு
மருந்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் உடனே 1-800-222-1222 என்ற எண்ணை
அழையுங்கள். எப்பொழுது தவிர்க்க வேண்டும் உங்களுக்கு அல்லது துணைக்கு உடலுறுவின்
போது கிராம்பால் கடுமையான எரிச்சல் உண்டானால் தவிருங்கள். ஏஞ்சலிகா (டோங் குய்),
குடைமிளகாய், டான்ஷென், பூண்டு, இஞ்சி, இஞ்சி , குதிரை கஷ்கொட்டை, பனாக்ஸ்
ஜின்ஸெங், பாப்லர், சிவப்பு க்ளோவர், மஞ்சள் மற்றும் வில்லோ போன்ற பொருட்களுடன்
கிராம்பை எடுக்காதீர்கள். இது இரத்தம் உறைதலை அதிகப்படுத்தும்.
பக்க விளைவுகள்
சரும
வடுக்கள், மூச்சு விட சிரமம், முகம், உதடுகள், நாக்கு, தொண்டை வீங்கிப் போதல்
ஏற்படும் எரிச்சல், சிவத்தல், வலி, சருமம் வீங்குதல் ஏற்படும்.
லாக்டிக்
அமிலத்தன்மை
தசைகளில்
வலி பலவீனம், கை, கால்கள் குளிர்ந்து உணர்வில்லாமல் போதல், வயிற்று வலி, குமட்டல்,
வாந்தி, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, தலைச்சுற்றல், சோர்வு ஏற்படும்.
கல்லீரல்
பாதிப்பு
குமட்டல்,
மேல் வயிற்றில் வலி, அரிப்பு, களைப்பு, பசியின்மை, அடர்ந்த சிறுநீர், கருப்பு
கலரில் மலம் கழித்தல், மஞ்சள் காமாலை
அழற்சி
அறிகுறிகள்
காய்ச்சல்,
குளிர6, தொண்டை புண், வாயில் புண்கள், ப்ளூ அறிகுறிகள், இருமல் மற்றும் மூச்சு விட
சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.
கிராம்பை மேற்பூச்சாக பயன்படுத்தும் போது ஏற்படும் விளைவுகள்
விறைப்பு
பிரச்சனைகள்
தாமதமாக
விந்து வெளியேறுதல் லேசான சரும எரிச்சல் எரிச்சல், சரும வடுக்கள்
ஈறுகளில்
புண்கள், வாய் எரிச்சல், இரத்தம் அல்லது ஈறுகளில் வீக்கம், பற்களில் மாற்றம்
போன்றவை ஏற்படுதல்.
கிராம்பு
பல் வலியை குணப்படுத்தும் என்பதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை. கிராம்பு
உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தினால் வயிற்றில் அசெளகரியம், வாந்தி, குமட்டல்,
வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் மருத்துவரிடம் அணுகி விட்டு
பயன்படுத்துங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக