"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்பது பழமொழி.
அதற்கேற்ப எதுவாக இருந்தாலும், ஒரு அளவுதான் இருக்க வேண்டும். அது பொருளாக
இருந்தாலும் சரி, உணவாக இருந்தாலும் சரி. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் நம்
உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றன. உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குவதால், அளவுக்கு
அதிகமாக உண்டால், அது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். நம் உடலுக்கு ஒவ்வொரு
ஊட்டச்சத்தும் ஓரளவு தேவைப்படுகிறது. அவற்றில் இரும்புச்சத்தும் ஒன்றாகும். இந்த
ஊட்டச்சத்து ஹீமோகுளோபினின் ஒரு முக்கிய அங்கமாகும்.
இது இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஒரு வகையான புரதமாகும். இது நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை ஒவ்வொரு உடல் பாகங்களுக்கும் கொண்டு செல்லும் வேலையை செய்கிறது. நம் உடலில் இரும்புச்சத்து அளவு இயல்பாக இருக்கும்போது, அனைத்து உயிரணுக்களும் நன்றாக செயல்பட்டு, தேவையான அளவில் இரத்தம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரும்புச்சத்து பற்றாக்குறை இரத்த சோகைக்கு வழிவகுக்கிறது, இது பெரும்பாலும் உயிருக்கு ஆபத்தானது. ஆனால் நீங்கள் அதிகமாக இரும்புச்சத்து எடுத்துக் கொண்டால் என்ன ஆகும் என்பது பற்றி தெரியுமா? இக்கட்டுரையில் இதை பற்றி காணலாம்.
உடலுக்கு ஆபத்தானது
இரும்புச்சத்து அதிகமாக உட்கொள்வது
நம் உடலுக்கு ஆபத்தானது, ஏனெனில் இது இதய செயலிழப்பு, கல்லீரல் நோய்கள், நீரிழிவு
மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. அல்சைமர்
மற்றும் கால், கை வலிப்பு போன்ற நரம்பியக்கடத்தல் நோய்கள் வருவதற்கு நமது உடலில்
இரும்புச்சத்து அதிகமாக இருப்பது முக்கிய காரணமாகும்.
காரணம்
நம் உடலில் இரும்புச்சத்தின் அளவு
உயர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. மரபணு கோளாறுகள், அதிக இரும்புச்சத்து ஊசி
போட்டுக்கொள்வதால் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளல்
ஆகியவற்றால் உடலில் இரும்புச் சத்து அதிகமாகிறது. இரும்பு மிகைப்படுத்தலுடன் தொடர்புடைய
சில ஆபத்தான விளைவுகள் பற்றி இங்கே காணலாம்.
இரும்பு நச்சுத்தன்மை
இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால்
இரும்பு நச்சுத்தன்மை ஏற்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கல்லீரல், மூளை
போன்ற முக்கிய உறுப்புகளில் இரும்புச் சத்து குவிந்து அவற்றுக்கு ஆபத்தை
விளைவிக்கின்றன. இரும்பு நச்சுத்தன்மையின் அறிகுறிகளில் குமட்டல், வயிற்று வலி
மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும்.
பெருங்குடல் புற்றுநோய்
அதிகப்படியான இரும்பு பெருங்குடல்
புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகமாக கொண்டுள்ளது. உடலில் அதிகப்படியான
இரும்பு இருப்பதால் கட்டுப்பாடற்ற ஃபென்டன் எதிர்வினை காரணமாக இது ஏற்படுகிறது.
இது மரபணு உறுதியற்ற தன்மை மற்றும் பிறழ்வை ஊக்குவிக்கிறது. மேலும் புற்றுநோய்க்கு
வழிவகுக்கிறது.
ஈமோகுரோம்
ஈமோகுரோம் உடலில் இரும்புச்சத்து
அதிகமாக படிவதால் ஏற்படும் பரம்பரை கோளாறு ஆகும். இது இறுதியில் உயிரணு இறப்புக்கு
வழிவகுக்கிறது, மேலும் பல உறுப்பு செயலிழப்பை ஏற்படுத்துகிறது. ஈமோகுரோமின்
அறிகுறிகள் தோலின் நிறமாற்றம் மற்றும் கணையம் தொடர்பான நோய்கள் ஆகும்.
நீரிழிவு நோய்
உடலில் அதிக அளவு இரும்புச்சத்து
இருப்பது நீரிழிவு நோயின் அபாயத்துடன் தொடர்புடையது. இரும்புச்சத்து வளர்சிதை
மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஊட்டச்சத்து ஆகும். உடலில் இரும்பின் எண்ணிக்கை
அதிகரிக்கும் போது, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் பீட்டா செல்கள் தோல்வி போன்ற
நிலைமைகள் ஏற்படுகின்றன. இது நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
மாரடைப்பு
உடலில் இரும்புச் சத்து அதிகமாக
இருந்தால் இருதய ஹீமோக்ரோமாடோசிஸ் போன்ற இதய சம்பந்தப்பட்ட கோளாறுகளை
ஏற்படுத்தக்கூடும். இந்நிலையில், இரும்புச்சத்து அதிகமாக இதயத்தில் குவிந்து
உறுப்பு நச்சுத்தன்மையையும் செயலிழப்பையும் ஏற்படுத்துகிறது. இது இதய செயலிழப்பு
மற்றும் ஒழுங்கற்ற இதய துடிப்புக்கு வழிவகுக்கிறது. இது பெரும் ஆபத்தை
விளைவிக்கும்.
கல்லீரல் புற்றுநோய்
கல்லீரல் புற்றுநோய் என பொதுவாக
அறியப்படும் ஹெபடோசெல்லுலர் புற்றுநோய்க்கு இரும்புச்சத்து அதிகமாக இருப்பது ஒரு
ஆபத்து காரணி. இரும்புச்சத்து உணவுகளை அதிகமாக உட்கொள்வதன் காரணமாக இந்த நிலை
உருவாகிறது.
அல்சீமர் நோய்
மூளையில் அதிகப்படியான இரும்புச்சத்து
படிவு ஒரு அசாதாரண புரதத்தை உருவாக்க வழிவகுக்கிறது. இது நினைவகம் தொடர்பான
மூளையின் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் குவிந்து அல்சைமர் நோயின் வளர்ச்சியை
ஊக்குவிக்கிறது. அல்சீமர் நோய் மறதி நோய் என்றும் அழைக்கப்படுகிறது. அளவான
ஊட்டச்சத்துக்களை உட்கொண்டு வளமாக வாழுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக