இந்த உலகத்தில் பர்பெக்ட்டானவர்கள் என்று யாரையும் கூறமுடியாது.
இதனை அனைவருமே நன்கு அறிவார்கள். இருப்பினும், மற்றவர்கள் சாதாரணமாக செய்யும் சில
செயல்கள் நமக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கும். குறிப்பாக பெண்களை பொறுத்தவரை ஆண்கள்
செய்யும் சில சாதாரண செயல்கள் அவர்களுக்கு உச்சபச்ச கோபத்தையும், எரிச்சலையும்
உண்டாக்கும்.
இந்த செயல்கள் பெண்களின் மகிழ்ச்சியான மனநிலையை ஒரு நொடியில்
காணாமல் செய்துவிடும். இதில் சில செயல்களை பெண்கள் செய்யும்போது ஆண்களுக்கும் இதே
நிலைதான். எனவே இருவரும் ஒன்றாக இருக்கும்போது முடிந்தவரை இந்த செயல்களை
தவிர்ப்பது அவர்களின் மகிழ்ச்சிக்கு நல்லது. இந்த பதவில் பெண்கள் வெறும் ஆண்களின்
சின்ன சின்ன தவறான செயல்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
எந்த கேள்வியும் கேட்காமல் இருப்பது
பொதுவாக பெண்கள் தங்களின் உணவுமுறை,
வாழ்க்கைமுறை, அன்றாட நிகழ்வுகள், தூக்கம் என அனைத்தைப் பற்றியும் ஆண்கள் தெரிந்து
வைத்துக்கொள்ள வேண்டும் எதிர்பார்ப்பார்கள். ஆண்கள் தங்களை கேள்விகேட்பது
அவர்களுக்குள் நல்ல புரிதலை உருவாக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். பெண்கள்
கேள்வி கேட்பதையும், பதில் சொல்வதையும் விரும்புகிறார்கள், ஆனால் அந்த கேள்விகள்
அவர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும். அவர்களுக்கு தேவையில்லதா அல்லது ஆர்வம்
இல்லாத கேள்விகளை கேட்பது, கதைகள் சொல்வது போன்றவை அவர்களின் மனநிலையை மாற்றும்.
எனவே முடிந்தளவு அவர்களைப் பற்றிய கேள்விகளை ஆர்வமாக கேட்பது சூழ்நிலையை
மகிழ்ச்சியானதாக மாற்ற உதவும்.
உரையாடலின் போது போனை நோண்டுவது
பெண்கள் தங்களின் பேச்சை அனைவரும்
கவனிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதுவும் குறிப்பாக காதலனுடன் பேசும்போது
அவர்களின் கவனம் தங்கள் மீதுதான் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால்
பெரும்பாலான ஆண்கள் இது தெரியாமல் அவர்கள் பேசும்போது போனை நோண்டிக்கொண்டு பெரிய
தவறு செய்கின்றனர். இந்த தவறை பெண்களுக்கு மட்டுமல்ல யார் பேசும்போதும்
செய்யாதீர்கள். இந்த சிறிய பிரச்சினை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
சிரிக்காமல் இருப்பது
கலகலப்பாக இருக்கும் சூழ்நிலையைத்தான்
அனைவரும் விரும்புவார்கள். இதற்கு பெண்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல. தன்னை
விரும்பும் ஆண் எப்பொழுதும் தன்னை சிரிக்க வைக்க வேண்டும் என்றுதான் அனைத்து
பெண்களும் விரும்புவார்கள். உங்களால் அது முடியாவிட்டாலும் பரவாயில்லை அவர்கள்
ஏதாவது நகைச்சுவையாக செய்யும்போது சிரிக்கவாவது கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள்
உங்கள் பெண்ணைச் சுற்றி இருக்கும்போது பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கையின் சில
வெளிப்பாடுகளைக் காட்டுங்கள். சிரிப்பு ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல காதலுக்கும்
நல்லதுதான்.
உரையாடலின் போது கவனிக்காமல் இருப்பது
இது ஒரு அடிப்படை நாகரிகமாகும். ஒரு
பெண் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது வெளியே வேடிக்கை பார்ப்பது, வேறு
எங்காவது பார்த்துக்கொண்டு இருப்பது போன்ற செயல்களை ஒருபோதும் செய்யாதீர்கள்.
அவர்கள் உங்களுடன் இருக்கும்போது அவர்கள் எதிர்பார்ப்பது உங்களின் கவனத்தைத்தான்.
குறைந்தபட்சம் அதையாவது கொடுங்கள். அவர்கள் பேசும்போது ஆர்வமில்லாமல் இருப்பது
அவர்களை வருத்தம் கொள்ளச்செய்யும்.
சுகாதாரம் இல்லாமல் இருப்பது
தொடர்ச்சியாக ஒரே சாக்ஸை அணிவது,
அணிந்த ஆடைகளையே மீண்டும் மீண்டும் அணிவது, தலைமுடியை சீராக வெட்டாமல் இருப்பது
போன்றவை பெண்களுக்கு உங்களுடன் வெளியே வரவேண்டும் என்று ஆசையையே இல்லாமல்
செய்துவிடும். சோம்பேறியாக இருப்பது வேறு ஆனால் உங்களின் சோம்பேறித்தனத்தை
சுகாதாரத்தில் காட்டுவது என்பது பைத்தியக்காரத்தமானது. சுகாதாரம் இல்லாமல்
இருக்கும் ஆண்களை பெண்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. விரும்புவது என்பதைக்
காட்டிலும் அவர்களுடன் பேசக்கூட ஆர்வம் காட்டமாட்டார்கள்.
தோற்றத்தைப் பற்றிய அக்கறை இல்லாமல் இருப்பது
உங்களுக்கு பிடித்தது என்ற ஒரே
காரணத்திற்காக ஒரு உடையை அல்லது காலணியை மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்துவது,
நீண்ட நாட்கள் வைத்திருப்பது போன்றவற்றை பெண்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.
வாழ்க்கையை எளிமையாக வைத்திருப்பது நல்லது, நீங்கள் பார்க்கும் விதத்தில் மிகவும்
உற்சாகமாக இருப்பது நல்லது, ஆனால் காதலியுடன் இருக்கும்போது அழகாக இருக்க வேண்டும்
என்ற எண்ணத்தை கைவிடுவது நல்லதல்ல. உங்களை பார்க்க வருவதற்கு முன் உங்கள் காதலி
தன்னை எவ்வளவு தயார் செய்து கொண்டு வருகிறார் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
அவர்களின் முயற்சியில் பாதியாவது நீங்கள் செய்ய வேண்டுமில்லையா?
முன்னாள் காதலியை தவறாக பேசுவது
தங்களின் முன்னாள் காதலியைப் பற்றி
தவறாக பேசுவது இந்நாள் காதலியை சந்தோஷப்படுத்தும் என்று ஆண்கள் நினைக்கலாம். ஆனால்
இந்த எண்ணம் முற்றிலும் தவறாகும், ஏனெனில் பெண்கள் இன்னொரு பெண்ணைப் பற்றி தவறாக
பேசுவதை முற்றிலுமாக வெறுக்கிறார்கள், குறிப்பாக முன்னால் காதலியைப் பற்றி
பேசும்போது. ஒருவேளை இந்த காதல் முறிந்தால் தன்னையும் எதிர்காலத்தில் இப்படித்தான்
பேசுவார்கள் என்ற எண்ணம் அவர்களுக்குள் எழும். எனவே ஒருபோதும் உங்கள் முன்னாள்
காதலியைப் பற்றி உங்கள் தற்போதைய காதலி முன் தவறாக பேசாதீர்கள்.
காதல் வெளிப்பாட்டை புறக்கணிப்பது
பெண்கள் ஆண்களின் செயல்களில் அதிகம்
வெறுப்பது இதைத்தான். ரொமான்ஸ்தான் உங்கள் காதலில் மிகவும் முக்கியமான ஒரு
விஷயமாகும், அதனை பெண்கள் வெளிப்படுத்தும் போது அதனை நீங்கள் புறக்கணிப்பது
பெண்களுக்கு அதிக மனவருத்தத்தை ஏற்படுத்தும். தங்களின் உடையை பாராட்டுவது,
எதிர்பாராத முத்தம், திடீர் அரவணைப்பு போன்ற சின்ன சின்ன விஷயங்களே உங்களை காதலை
வலிமையாக்க போதும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக