இந்த
விநோத நிகழ்வானது கேரள மாநிலத்தில் உள்ள தலச்சேரி தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று
உள்ளது அங்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் தலைமை ஆசிரியர் அறையிலிருந்த 40 1000 ரூபாய்
ரொக்கம் அதனோடு 30,000 ரூபாய் மதிப்பு உடைய கேமரா மற்றும் 3 மடிக் கணினிகள், ஒரு பென்
டிரைவ், சி.சி.டி.வி. ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட பொருட்களோடு திருட்டு போனது. இதில் திருட்டு
போன பொருட்களில் ஒன்றான பென் டிரைவில்தான் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு உள்ளிட்ட
தகவல்களோடு அவர்கள் தற்போது ஊதியம் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒன்று திரண்ட ஆசிரியர்கள்
அனைவரும் ஒரு முடிவெடுத்து திருடிய திருடனுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர்.அதை
தற்போது சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் அன்புள்ள திருடனுக்கு
என்று ஆரம்பிக்கின்ற அந்தக் கடிதத்தில் தங்களுக்கான ஊதியத்தை தீர்மானிக்கும் அந்த பென்
டிரைவை மட்டும் தந்துவிடும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று பொருட்களை திருடிய திருடனிடம்
பள்ளி ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக