மனிதனின் எதிர்காலத்தை அறிந்துக்கொள்ள பல்வேறு சாஸ்திர முறைகள் இருந்தாலும் அதில் மிக எளிமையானதும், உறுதியானதுமான கலை கைரேகை சாஸ்திரமாகும். இப்பொழுது தத்துவக் கை அமைப்பைக் கொண்டவர்களின் குணநலன்களை பற்றிக் காண்போம்.
தத்துவக் கையின் அமைப்பு :
இந்த வகை கைகள் முடிச்சுக்கைகள், வேதாந்த விசாரம் செய்கின்ற கைகள் என்று அழைக்கப்படும்.
கையின் அமைப்பு நீள வடிவத்துடன் இருக்கும். விரல் நுனிகள் நீள்வட்டத்தில் காணப்படும்.
கைவிரல் நகங்கள் நீளமாக இருக்கும். விரல் முனைகள் கூர்மையாக காணப்படும். முடிச்சுகள் நன்கு காணப்படும்.
விரல்களை ஒன்று சேர்த்தால் விரல்களுக்கு நடுவே ஓட்டைகள் காணப்படும்.
கைகளில் சதைப்பற்று இருக்காது. கையின் பின்புறத்தில் எலும்புகளும், நரம்புகளும் புடைத்து நிற்கும்.
குணநலன்கள் :
இவர்கள் பணத்திற்கு அதிக மதிப்பு அளிக்க மாட்டார்கள். தமக்கு தோன்றிய வழிமுறைகளில் செலவுகள் செய்வார்கள்.
மிகவும் இளகிய மனம் கொண்டவர்கள். சிறு விஷயத்திற்கும் கவலைப்படுவார்கள்.
இவர்கள் பிறருக்கு தீங்கு இழைக்க மாட்டார்கள். எதையும் யோசித்தே செய்வார்கள்.
இவர்கள் ரகசியத்தை காப்பாற்றும் தன்மை கொண்டவர்கள். தனிமையை விரும்புவார்கள்.
பெரியவர்கள் மேல் மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். மேலும், இவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் கணக்கிடுதல், ஆராய்ச்சி செய்தல் போன்ற குணநலன்கள் உள்ளவர்கள்.
இவர்களில் சிலர் அரசாங்க பதவி வகிப்பவராகவும், நல்ல பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் விளங்குவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக