Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 3 பிப்ரவரி, 2020

அனைத்தையும் கவர்ந்து இழுக்கும் கருந்துளை…வியக்க வைக்கும் சிறப்பு தகவல்கள்… ஆச்சரியமூட்டும் அறிவியல் தகவல்கள்…

அனைத்தையும் கவர்ந்து இழுக்கும்  கருந்துளை…வியக்க வைக்கும் சிறப்பு தகவல்கள்… ஆச்சரியமூட்டும் அறிவியல் தகவல்கள்…
ருந்துளை என்ற பெயர் 1916களில் குறிப்பிடப்படவில்லை. அந்த பெயர் 1967-ம் ஆண்டுதான் குறிப்பிடப்பட்டது. இந்த பெயரை அமெரிக்க வானியல் ஆய்வாளர் ஜான் வீலர் தான் `கருந்துளை’ என்ற பெயரை உருவாக்குகிறார்.

இந்த கருந்துளை முதன்முதலாக 1971-ம் ஆண்டு கண்டறியப்படுகிறது. பொதுவாகக் இந்த கருந்துளைகள் கருந்துளையின் அளவைப் பொறுத்து அதை மூன்றாகப் பிரிக்கின்றனர் –
  • ஸ்டெல்லர் கருந்துளைகள்,
  • சூப்பர்மேசிவ் கருந்துளைகள்,
  • இன்டர்மீடியட் கருந்துளைகள்,
இவற்றுள் ஸ்டெல்லர் கருந்துளைகள் என்பது அளவில் சிறியதாகவும் மிகுந்த அடர்த்தி உடையதாகவும் காணப்படும். நம் சூரியனைவிட ஐந்து மடங்குக்கு மேல் பெரிதாக உள்ள நட்சத்திரங்கள் தன் அந்திமகாலத்தில் ‘நட்சத்திர கருந்துளையாக’மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சூரியனைவிட மூன்று மடங்கு பெரிய அளவில் இருக்கும் நட்சத்திரங்கள் கூட கருந்துளையாக மாறும்போது ஒரு நகரத்தின் அளவே இருக்கும். இந்தக் கருந்துளைகளின் அடர்த்தியும் மிகவும் அதிகமாக இருக்கும்.

எனவே, இவற்றின் ஈர்ப்பு விசை நாம் கணிக்க முடியாத அளவாக இருக்கும். இதனால், அது தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை ஈர்த்து அளவில் பெரிதாகிக்கொண்டே செல்லும். நமது பால்வெளி மண்டலத்தில் மட்டும் சில நூறு மில்லியன் ஸ்டெல்லர் கருந்துளைகள் இருக்கும் எனக் கணித்துள்ளனர் அறிவியலாளர்கள். இதற்க்கு காரணம் கருந்துளையில் உள்ள ஈர்ப்பு விசையே காரணம் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

F=GMm/rxr என்ற  சமன்பாட்டின் படி, நிறை தான் இந்த ஈர்ப்பு விசைக்கு காரணம் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கருந்துளை அனைத்து விண் பொருளையும் ஈர்க்கும் அளவுக்கு அதிக நிறையில்  அந்த கருந்துளைகள் காணப்படுகின்றன. இந்த கருந்துளை இன்னமும் பல அதிசயங்களையும், ஆச்சரியமான தகவல்களையும் தன்னுள்ளே கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக