மத்திய அரசினுடைய சீர்மிகு நகரங்கள் பட்டியலில்
இடம்பெற்றுள்ள தூத்துக்குடி மாநகராட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான பணிகள்
தொடங்கி நடைபெற்று வருகின்றன.அவ்வாறு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் வசதி,
பூங்காக்கள், மின்விளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள்
இதில் அடங்குகிறது.
மாநகரின் வாழ்க்கைத்தரம் குறித்து
பொதுமக்களிடம் கருத்துக்கள் தற்போது கேட்கப்படுகிறது. இந்த கருத்தாய்வு குறித்த
கணக்கெடுப்பு பிப்.,1ந்தேதி முதல் வருகிற 29ஆம் தேதி வரை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர்
ஜெயசீலன் கூறுகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பூங்காக்கள்
,பேருந்து நிலையம், ரயில் நிலையம்,மற்றும் வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள்,
கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் போன்ற 30 முக்கிய இடங்களில் விளம்பர பதாகைகள்
அமைக்கப்பட உள்ளது அதில் உள்ள கியூ.ஆர் கோடை செல்போன் மூலம் ஸ்கேன் செய்தோ அல்லது
அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்துக்கு சென்றோ மக்கள் தங்களுடைய கருத்துகளை
தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.
மத்திய அரசினுடைய சீர்மிகு நகரங்கள் பட்டியலில்
இடம்பெற்றுள்ள தூத்துக்குடி மாநகராட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான பணிகள்
தொடங்கி நடைபெற்று வருகின்றன.அவ்வாறு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் வசதி,
பூங்காக்கள், மின்விளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள்
இதில் அடங்குகிறது.
மாநகரின் வாழ்க்கைத்தரம் குறித்து
பொதுமக்களிடம் கருத்துக்கள் தற்போது கேட்கப்படுகிறது. இந்த கருத்தாய்வு குறித்த
கணக்கெடுப்பு பிப்.,1ந்தேதி முதல் வருகிற 29ஆம் தேதி வரை நடத்த உள்ளது
குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர்
ஜெயசீலன் கூறுகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பூங்காக்கள்
,பேருந்து நிலையம், ரயில் நிலையம்,மற்றும் வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள்,
கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் போன்ற 30 முக்கிய இடங்களில் விளம்பர பதாகைகள்
அமைக்கப்பட உள்ளது அதில் உள்ள கியூ.ஆர் கோடை செல்போன் மூலம் ஸ்கேன் செய்தோ அல்லது
அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்துக்கு சென்றோ மக்கள் தங்களுடைய கருத்துகளை
தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக